கேள்வி
கிறிஸ்தவ பெற்றோர் தங்களுக்கு கெட்ட குமாரனோ அல்லது குமாரத்தியோ இருந்தால் என்ன செய்யவேண்டும்?
பதில்
இந்த கெட்ட குமாரன் கதையில் உள்ளார்ந்த அநேக பிரமாணங்கள் அடங்கியிருக்கிறது (லூக்கா 15:11-32). பிள்ளைகள் பெற்றோர்கள் வளர்க்கிற வழியில் இருந்து விலகி நடக்கும் போது அவர்களை கையாளப் பெற்றோர் இதை பயன்படுத்தலாம். குழந்தைகள் இளம் பிராயத்தை அடைந்தவுடன் அவர்கள் தங்களுடைய பெற்றோரின் அதிகாரத்திற்கு கீழ்பட்டு இருக்க மாட்டார்கள் என்பதை பெற்றோர் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கெட்ட குமாரன் கதையில் இளயமகன் தன்னுடைய ஆஸ்தியை எடுத்துக்கொண்டு தூரதேசத்திற்கு பயணப்பட்டுப்போய் தன் ஆஸ்தியனைத்தையும் வீணடிக்கிறான். இரட்சிக்கப்படாத பெற்றோருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் இது இயற்க்கையாகவே செய்யப்படுகிற ஒரு காரியம் தான். ஆனால் கிறிஸ்துவை விசுவாசிக்கிற பிள்ளைகளுடைய வாழ்க்கையில் இப்படி நடக்கும் போது நாம் அந்த பிள்ளையை கெட்ட மகன் (ஊதாரி மகன்) என்று அழைக்கிறோம். “தன்னுடைய வளங்களை வீணாக்கிய நபர்” என்பது தான் இதன் அர்த்தம். இதற்கு நல்ல விளக்கம் ஒரு குழந்தை வீட்டை விட்டுச் சென்று தன்னுடைய பெற்றோர் தன்னிடத்தில் முதலீடு செய்த எல்லா ஆவிக்குரிய ஆஸ்திகளையும் வீணடிப்பதேயாகும். இந்த பிள்ளை தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் பண்ணுவதால், வருடங்கள் முழுவதும் வளர்த்து, போதித்து, அன்பு செலுத்தி மற்றும் கரிசனை செலுத்தின அனைத்தையும் மறந்துவிடுகிறான். எல்லா முரட்டாட்டமும் முதலாவது தேவனுக்கு எதிரானது, அதன் பின்பு இந்த முரட்டாட்டம் பெற்றோருக்கும் அவர்களுடைய அதிகாரத்திற்கும் எதிரானதாக வெளிப்படுகிறது.
இந்த உவமையில் தகப்பன் தன்னுடைய மகன் போவதை தடுக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும். அதுமட்டுமல்ல தன்னுடைய மகனை பாதுகாக்க அவனுக்கு பின்னாக செல்லவுமில்லை. இதற்கு பதிலாக இந்த பெற்றோர் விசுவாசத்துடன் வீட்டிலே இருந்து ஜெபிக்கிறார், தன் மகன் “உணர்வடைந்து” மனந்திரும்பி எழுந்து புறப்பட்டான். இந்த தகப்பன் காத்திருந்தார், எதிர்பர்த்திருந்தார் மற்றும் அவனை “தூரத்தில் வரும்போதே” கண்டு அவனிடத்தில் ஓடி வந்தார்.
நம்முடைய மகன்களோ அல்லது மகள்களோ அவர்களுடைய சொந்த வழியே போகும்போது – அவர்கள் போவதற்கு சட்டபூர்வமாக தகுதியான வயது இருக்கிறது – மற்றும் அவர்களின் விருப்பப்படி போகும் போது இதன் விளைவு கடினமானதாக இருக்கும் என்பதை அறிந்து பெற்றோர்கள் அவர்களை போக விட வேண்டும். பெற்றோர் அவர்களுக்குப் பின்னாகப் போக வேண்டாம், அவர்களுக்கு வருகிற விளைவுகளில் பெற்றோர் தலையிடவும் வேண்டாம். அதற்கு பதிலாக பெற்றோர் வீட்டிலே இருந்துகொண்டு விசுவாசத்துடன் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் மனத்திரும்புதலின் அடையாளத்தை அல்லது அவர்கள் திரும்பிவருகிறதை எதிர்பார்த்திருக்க வேண்டும். அது நடக்கும் வரை பெற்றோர்கள் தங்களுடைய சொந்த ஆலோசனையை கடைபிடித்து, முரட்டாட்டத்திற்கு துணைபோகமல் மற்றும் தலையிடாமல் இருக்க வேண்டும் (1பேதுரு 4:15).
பிள்ளைகள் சட்டப்படி இளம்பிரயாயத்தை அடைகிறபோது அவர்கள் தேவனுடைய அதிகாரத்திற்கும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு மட்டுமே கீழ்பட்டவர்கள் ஆகிறார்கள் (ரோமர் 13:1-7). பெற்றோராகிய நாம் நமது ஊதாரித்தனமான பிள்ளைகளை அன்புசெலுத்தி மற்றும் ஜெபத்தின் மூலம் அவர்களை தாங்கலாம். தேவனிடத்தில் அவர்கள் திரும்பும் போது நாம் அவர்களோடு சேர்ந்து நிற்கலாம். தேவன் அநேக நேரங்களில் சுய தண்டனையான துன்பங்கள் பயன்படுத்துவதன் மூலம் நம்மை ஞானமடைய செய்வார். இது ஒவ்வொரு தனி நபரும் எப்படி பிரதியுத்திரம் செய்கிறோம் என்பதை பொருத்தது. பெற்றோராக நம்மால் பிள்ளைகளை இரட்சிக்க முடியாது மாறாக தேவனால் மட்டுமே முடியும். அந்த நேரம் வரும் வரை நாம் காத்திருந்து ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கரத்திலே காரியங்களை விட்டுவிட வேண்டும். இது வேதனையான காரியம் என்றாலும், வேதாகமத்தின் படி பார்க்கும் போது இது சமாதானமான மனதையும் இருதயத்தையும் தரும். நம்மால் நம்முடைய பிள்ளைகளை நியாயந்தீர்க்க முடியாது. தேவனால் மட்டுமே முடியும். “சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பரோ?” (ஆதியாகமம் 18:25), இந்த வசனம் மிகப்பெரிய ஆறுதலை தறுகிறது.
English
கிறிஸ்தவ பெற்றோர் தங்களுக்கு கெட்ட குமாரனோ அல்லது குமாரத்தியோ இருந்தால் என்ன செய்யவேண்டும்?