settings icon
share icon
கேள்வி

இன்று சபையில் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களா?

பதில்


சபையை நிறுவுவதற்காக கிறிஸ்து கொடுத்த தற்காலிக வரமாக தீர்க்கதரிசனத்தின் வரம் தோன்றுகிறது. தீர்க்கதரிசிகள் சபைக்கு அஸ்திபாரமாக இருந்தனர் (எபேசியர் 2:20). தீர்க்கதரிசி ஆரம்பகால விசுவாசிகளுக்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை அறிவித்தார். சில நேரங்களில் ஒரு தீர்க்கதரிசியின் செய்தி வெளிப்பாடாக இருந்தது (தேவனிடமிருந்து புதிய வெளிப்பாடு மற்றும் சத்தியம்), சில சமயங்களில் ஒரு தீர்க்கதரிசியின் செய்தி முன்னறிவிப்பாக இருந்தது (அப். 11:28 மற்றும் 21:10 ஐப் பார்க்கவும்). ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு முழுமையான வேதாகமம் கையில் இல்லை, அவர்களில் சிலருக்கு புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் இந்த "இடைவெளியை நிரப்ப" தேவனுடைய செய்தியை மற்றவர்களுக்கு அணுக முடியாத மக்களுக்கு அறிவிப்பதன் மூலம் அறிவித்தனர். புதிய ஏற்பாட்டின் கடைசி புஸ்தகம் (வெளிப்படுத்தின விசேஷம்) முதல் நூற்றாண்டின் இறுதி வரை எழுதி முடிக்கப்படவில்லை. எனவே, தேவனுடைய வார்த்தையை அவருடைய மக்களுக்கு அறிவிக்க கர்த்தர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.

இன்று உண்மையான தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களா? தேவனிடமிருந்து சத்தியத்தை வெளிப்படுத்துவதே ஒரு தீர்க்கதரிசியின் நோக்கமாக இருந்தால், வேதாகமத்தில் தேவனிடமிருந்து முழுமையான வெளிப்பாடு இருப்பதால், நமக்கு ஏன் இன்று தீர்க்கதரிசிகள் தேவை? தீர்க்கதரிசிகள் ஆரம்பகால சபையின் "அஸ்திபாரம்" என்றால், நாம் இன்றும் "அஸ்திபாரத்தை" போடுகிறோமா? தேவன் ஒருவரிடம் இன்னொருவருக்கு ஒரு செய்தியை அறிவிக்க வழங்க முடியுமா? முற்றிலும் முடியும்! தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் ஒருவருக்கு சத்தியத்தை வெளிப்படுத்தி, அந்த நபருக்கு அந்த செய்தியை மற்றவர்களுக்கு வழங்க உதவுகிறாரா? முற்றிலும் உதவுவார்! ஆனால் இது தீர்க்கதரிசனத்தின் வேதாகம வரமா? இல்லை.

ஒரு நபர் தேவனுக்காக பேசுவதாகக் கூறும் போதெல்லாம் (தீர்க்கதரிசனத்தின் சாராம்சம்), அவர் அல்லது அவள் சொல்வதை வேதாகமம் சொல்வதை ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். தேவன் இன்று ஒரு நபர் மூலம் பேசினால், தேவன் ஏற்கனவே வேதாகமத்தில் கூறியுள்ள செய்தியோடு முற்றிலும் ஒத்துப்போகும். தேவன் தமக்குத்தாமே முரண்படுவதில்லை. 1 யோவான் 4:1 நமக்கு அறிவுறுத்துகிறது, "பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்." 1 தெசலோனிக்கேயர் 5:20-21, “தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்." எனவே, இது "கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையாக" அல்லது ஒரு தீர்க்கதரிசனமாக இருந்தாலும், நம் பதில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை ஒப்பிடுக. இது வேதாகமத்துக்கு முரணாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணியுங்கள். அது வேதாகமத்துடன் ஒத்துப் போனால், அந்தச் செய்தியை எப்படிப் பயன்படுத்துவது என்று ஞானம் மற்றும் பகுத்தறிவுக்காக ஜெபியுங்கள் (2 தீமோத்தேயு 3:16-17; யாக்கோபு 1:5).

English



முகப்பு பக்கம்

இன்று சபையில் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries