கேள்வி
வேதாகமம் இனவாதம், பாரபட்சம், மற்றும் பாகுபாடு பற்றி என்ன சொல்லுகிறது?
பதில்
நாம் முதலாவது புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒரே ஒரு இனம் தான் உள்ளது: அது மனித இனம் தான். காகேசிய இனத்தினர், ஆப்ரிகர்கள், ஆசியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள், மற்றும் யூதர்கள் வெவ்வேறு இனத்தினர் அல்ல. மாறாக, அவர்கள் மனித இனத்தில் உள்ள இனப்பிரிவினர். எல்லா மனிதர்களுக்கும் (சிறிய வித்தியாங்கள் இருப்பினும்) ஒரே விதமான உடல் சார்ந்த பண்புகள் இருக்கிறது. முக்கியமாக எல்லா மனிதர்களும் தேவனின் சாயலின்படியும் மற்றும் ரூபத்தின்படியும் படைக்கப்பட்டவர்கள் (ஆதியாகமம் 1:26, 27). தேவன் உலகத்தை மிகவும் அன்பு கூர்ந்தபடியால், இயேசுவை அனுப்பினார் (யோவான் 3:16). எல்லா இனக்குழுக்களையும் சேர்ந்தது தான் உலகம்.
தேவன் பாரபட்சம் உள்ளவர் அல்ல (உபாகமம் 10:17; ஆதியாகமம் 10:34; ரோமர் 2:11; எபேசியர் 6:9) மற்றும் நாமும் பாரபட்சம் உள்ளவர்களாய் இருக்க கூடாது. ஏற்ற தாழ்வு என்று வேறுபாடாய் பார்க்கிறவர்களை தீய எண்ணம் கொண்ட நீதிபிகள் என்று யாக்கோபு 2:4-லில் கூறப்பட்டுள்ளது. மாறாக, நாம் நம்மைபோல மற்றவர்களை நேசிக்க வேண்டும் (யாக்கோபு 2:8). பழைய ஏற்பாட்டில், தேவன் மனித குலத்தை இரண்டு குழுக்களாக பிரித்தார்: யூதர்கள் மற்றும் புறஜாதியார். யூதர்கள் ஆசாரியரின் ராஜியமாய் இருந்து, புறஜாதிகளுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே தேவனின் நோக்கமாய் இருந்தது. ஆனால், பெரும்பாலும், யூதர்கள் தங்கள் நிலையை குறித்து பெருமை பாராட்டி, புறஜாதியாரை வெறுத்தனர். இயேசு பகையாய் இருந்த நடு சுவரை உடைத்து இதற்கு முடிவு கட்டினார் (எபேசியர் 2:16). எல்லாவிதமான இனவாதம், பாரபட்சம், பாகுபாடுகளும் கிறிஸ்து சிலுவையி்ல் செய்ததை அவமதிக்கிறதாகும்.
இயேசு நம்மை நேசிக்கிறது போல, நாமும் ஒருவருக்கு ஒருவர் நேசிக்க வேண்டும் என்று கட்டளை கொடுத்தார் (யோவான் 13:34).தேவன் பாரபட்சமின்றி நேசிக்கிறார் என்றால், நாமும் மற்றவர்கள் அப்படியே நேசிக்க வேண்டும். “இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை எனக்கு செய்கிறீர்கள்” என்று இயேசு கூறினார் (மத்தேயு 25). ஒருவரை நாம் அவமதித்தால், தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதனை அவமதிக்கிறோம்; இப்படியாக நாம் தேவன் நேசிக்கும் நபரை காயப்படுத்துகிறோம், அவருக்காகவும் இயேசு மரித்தாரே.
ஆயிரமாயிரம் வருடங்களாக, இனவாதம் மனித குலத்தை வாதிக்கிறது. சகோதர சகோதரிகளே, இப்படி இருக்க கூடாது. இனவாதம், பாரபட்சம், பாகுபாடு இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மண்ணிக்க வேண்டும். “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32). மதவாதிகள் உங்கள் மண்ணிப்பிற்கு தகுதியற்றவர்களாக இருக்கலாம், ஆனால் நாமும் தேவனின் மண்ணிப்பிற்கு தகுதி அற்றவர்களே. இனவாதம், பாரபட்சம், பாகுபாடு இவைகளை பின்பற்றுகிறவர்கள் மனம் திரும்ப வேண்டும். “உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:13). கலாத்தியர் 3:28, “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்,” நிறைவேறுவதாக.
English
வேதாகமம் இனவாதம், பாரபட்சம், மற்றும் பாகுபாடு பற்றி என்ன சொல்லுகிறது?