கேள்வி
உபத்திரவத்தோடு தொடர்புபடுத்திக் காணும்போது எடுத்துக்கொள்ளப்படுதல் எப்பொழுது சம்பவிக்கப்போகிறது?
பதில்
உபத்திரவக்காலத்தோடு தொடர்புபடுத்தி காணும்போது சபை எடுத்துக்கொள்ளப்படுதல் எப்போது நடக்கும் என்கிற காரியம் இன்று சபையில் மிகவும் சர்ச்சைக்குரிய காரியங்களுள் ஒன்றாகும். மூன்று பிரதானமான கருத்துப்பாங்குகள் என்னவென்றால், உபத்திரவக்காலத்திற்கு முன்பு (pre-tribulational, சபை உபத்திரவகாலத்திற்கு முன்பே எடுத்துக்கொள்ளப்படுவது), உபத்திரவக்காலத்தின் நடுவில் (mid-tribulational, சபை எடுத்துக்கொள்ளப்படுதல் உபத்திரவக் காலத்தின் மத்திய பாகத்தின் சமீபத்தில் அல்லது அதன் நடுவில் நடப்பது), உபத்திரவக் காலத்திற்கு பின்பு (post-tribulational, சபை எடுத்துக்கொள்ளப்படுதல் உபத்திரவக்காலத்திற்கு பின்பு நடப்பது). நான்காவது கருத்துப்பாங்கு என்னவெனில் கோபாக்கினைக்கு முன்பாக (pre-wrath) சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்பதாகும். இது உபத்திரவக்காலத்தின் நடுவில் என்கிற கருத்தில் ஒரு சிறு மாற்றத்துடன் ஏறக்குறைய அதே கருத்தைக்கொண்டுள்ளது.
முதலாவது உபத்திரவக்காலத்தின் நோக்கத்தை நாம் அறிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. தானியேல் 9:27-ன்படி எழுபதாவது “ஏழு” (ஏழு வருடங்கள்) இன்னும் வரவிருக்கிறதாய் இருக்கிறது. தானியேலின் எழுபது வாரங்களைப்பற்றிய முழுத்தீர்க்கதரிசனமும் கூறுவது இஸ்ரவேல் தேசத்தைக் குறித்தாகும் (தானியேல் 9:20-27). இந்த காலக்கட்டத்தில்தான் தேவன் தன் முழு கவனத்தையம் இஸ்ரவேலின் மீது வைக்கிறார். எழுபதாவது ஏழு உபத்திரவக்காலமும் தேவன் குறிப்பாக இஸ்ரேலை கையாளுகிற நேரமுமாகத்தான் இருக்க வேண்டும். இது சபை இங்கு இருக்காது என்று சொல்லவில்லை என்றாலும், ஏன் சபை இந்தக்காலக்கட்டத்தில் பூமியிலிருக்க வேண்டும் என்ற கேள்வியைக் கொண்டு வருகிறது.
சபை எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்தான முக்கியமான வேதபாகம் 1 தெசலோனிக்கேயர் 4:13-18 வரையிலுள்ள வசனங்கள் ஆகும். இது எல்லா உயிரோடு இருக்கும் விசுவாசிகளும், மற்றும் மரித்த விசுவாசிகளோடு கர்த்தராகிய இயேசுவை ஆகாயத்தில் சந்தித்து பின்பு அவரோடே என்றென்றைக்கும் இருப்பார்கள் என்று கூறுகின்றது. எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது தேவன் தம்முடைய ஜனங்களை பூமியிலிருந்து எடுத்துக்கொள்வதாகும். சில வசனங்களுக்குப்பின்பு 1 தெசலோனிக்கேயர் 5:9 இல் பவுல் “தேவன் நம்மை கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்” என்று கூறுகிறார். வெளிப்படுத்தின விசேஷத்தின் பிரதானமாக உபத்திரவக்காலத்தில் தேவன் எப்படி தன்னுடைய கோபாக்கினையை பூமியின் மீது ஊற்றுவார் என்பதைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது. தேவன் தம்முடைய விசுவாசிகளிடம் கோபாக்கினையிலிருந்து பாடுபடமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களை உபத்திரவக்காலத்தின்போது பூமியன்மீது விடுவது, தேவனுடைய வார்த்தையை முன்னுக்குப்பின் முரணாகப் புரிந்துக் கொள்ள வைத்துவிடும். தேவன் தாம் வாக்களித்தப்படியே கிறிஸ்தவர்களை கோபாக்கினையிலிருந்து தப்புவிப்பதற்கு சற்று முன்பாக தம்முடை ஜனங்களை பூமியிலிருந்து எடுத்தக்கொள்வார் என்ற இரண்டையும் நாம் தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும்.
சபை எடுத்துக்கொள்ளப்படுதலுடைய காலத்தைக் குறித்தான மற்றொரு முக்கியமான வேதவாக்கியம் வெளிப்படுத்தின விசேஷம் 3:10, இதில் கிறிஸ்து விசுவாசிகளை பூமியின் மீது வரப்போகும் “சோதனைக்காலத்திலிருந்து” தப்புவிப்பேனென்று வாக்களித்திருக்கிறார். இது இரண்டு காரியங்களைக் குறிக்கும். ஒன்று கிறிஸ்து விசுவாசிகளை சோதனைகள் மத்தியில் அதினூடாய் கடந்துசெல்லும்போது பாதுகாப்பார், அல்லது சோதனைக்குள் செல்லாமல் சோதனையிலிருந்து விடுவித்துக்காப்பார் என்பதாகும். இந்த இரண்டுமே கிரேக்க மொழியின் “இருந்து” (from) என்ற வார்த்தையில் அர்த்தப்படும். ஆகிலும் விசுவாசிகளை எதிலிருந்து காத்துக்கொள்வார் என்பதை நாம் அறிந்துக்கொள்வது முக்கியம். சோதனையிலிருந்து மாத்திரம் அல்ல சோதனை “காலத்திலிருந்தும்” காத்துக்கொள்வார். கிறிஸ்து விசுவாசிகளை சோதனைக்காலம் அதாவது உபத்திரவக்காலத்திலிருந்து பாதுகாப்பேன் என்று வாக்குப்பண்ணுகிறார். உபத்திரவக்காலத்தின் நோக்கம், சபை எடுத்துக்கொள்ளப்படுதலின் நோக்கம் ஆகும் (1 தெசலோனிக்கேயர் 5:9 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 3:10-ன் வியாக்கியானம் எல்லாம் உபத்திரவக்காலத்திற்கு முன்பான நிலையையே (pre-tribulational position) ஆதரிக்கின்றது. வேதாகமம் எழுத்தியல்பான நிலையில் மற்றும் தொடர்ந்து வியாக்கியானம் செய்யப்பட்டாலும், உபத்திரவக்காலத்திற்கு முன்பான நிலையே வேதாகமத்தின்படியான வியாக்கியானம் ஆகும்.
English
உபத்திரவத்தோடு தொடர்புபடுத்திக் காணும்போது எடுத்துக்கொள்ளப்படுதல் எப்பொழுது சம்பவிக்கப்போகிறது?