கேள்வி
உண்மையான வரலாற்று இயேசு யார்?
பதில்
எவ்வித சந்தேகமுமில்லாமல், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "இயேசு யார்?" என்பதாகும். இயேசுவுக்கு உலகெங்கும் மிக உயர்ந்த பெயர் அங்கீகாரம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. நமது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 2.5 பில்லியன் மக்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறார்கள். ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்களை உள்ளடக்கிய இஸ்லாம், முகமதுவுக்குப் பிறகு இயேசுவை இரண்டாவது பெரிய தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கிறது. மீதமுள்ள 3.2 பில்லியன் மக்களில் (தோராயமாக உலக மக்கள்தொகையில் பாதி), பெரும்பாலானவர்கள் இயேசுவின் பெயரைக் கேட்டிருக்கிறார்கள் அல்லது அவரைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை அவருடைய வாழ்க்கையின் சுருக்கத்தை ஒருவர் தொகுத்தால், அது ஓரளவு குறைவாக இருக்கும். அவர் எருசலேமின் தெற்கே உள்ள ஒரு சிறிய நகரமான பெத்லகேமில் யூத பெற்றோர்களால் பிறந்தார், அதே நேரத்தில் அந்த பகுதி ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவரது பெற்றோர் வடக்கே நாசரேத்துக்கு சென்றனர், அங்கு அவர் வளர்ந்தார்; எனவே அவர் பொதுவாக "நசரேயனாகிய இயேசு" என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை ஒரு தச்சர், எனவே இயேசு தனது ஆரம்ப ஆண்டுகளில் வர்த்தகத்தை கற்றுக்கொண்டார். சுமார் முப்பது வயதில், அவர் ஒரு பொதுவான வெளி ஊழியத்தைத் தொடங்கினார். அவர் தனது சீடர்களாக நம்பத்தகாத புகழுடைய ஒரு டஜன் மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, கலிலேயா கடலின் கரையோரத்தில் ஒரு பெரிய மீன்பிடி கிராமம் மற்றும் வர்த்தக மையமான கப்பர்நகூமில் ஊழியம் செய்தார். அங்கிருந்து அவர் கலிலேயா பகுதி முழுவதும் பயணம் செய்தார், எருசலேமுக்கு இடையிடையே பயணம் செய்யும் அண்டை நாடுகளான சமாரியர்கள் மத்தியில் அடிக்கடி சென்றார்.
இயேசுவின் அசாதாரண போதனைகள் மற்றும் வழிமுறைகள் பலரையும் வெகுவாக திடுக்கிட வைத்தது மற்றும் கலங்கடித்தது. அவரது புரட்சிகர செய்தி, வியக்க வைக்கும் அற்புதங்கள் மற்றும் குணப்படுத்துதல்களுடன், பெருவாரியான ஜனங்களால் பின்தொடர்தலைப் பெற்றது. மக்களிடையே அவரது புகழ் வேகமாக வளர்ந்தது, இதன் விளைவாக, யூத நம்பிக்கையில் நன்கு வேரூன்றிய மதத் தலைவர்கள் அதை கவனித்தனர். விரைவில், இந்த யூதத் தலைவர்கள் அவரது வெற்றியைப் பார்த்து பொறாமைப்பட்டு கோபமடைந்தனர். இந்த தலைவர்களில் பலர் அவருடைய போதனைகளை புண்படுத்தும் மற்றும் அவர்களின் நிறுவப்பட்ட மத மரபுகள் மற்றும் பண்டிகைகள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தனர். ரோம ஆட்சியாளர்களைக் கொண்டு அவரை கொன்றுவிட அவர்கள் விரைவாக சதி செய்தனர். இந்த நேரத்தில்தான் இயேசுவின் சீடர் ஒருவர் யூதத் தலைவர்களுக்கு மிகக் குறைந்த தொகைக்கு அவரை காட்டிக் கொடுத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அவரை கைது செய்து, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட போலியான விசாரணைகளின் தொடரை உருவாக்கி, சிலுவையில் அறையப்பட்டு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள்.
ஆனால் வரலாற்றில் மற்றவர்களைப் போலல்லாமல், இயேசுவின் மரணம் அவருடைய கதையின் முடிவு அல்ல; உண்மையில், இது ஆரம்பம் மட்டுமே. இயேசு இறந்த பிறகு என்ன நடந்தது என்பதில்தான் கிறிஸ்தவம் உள்ளது. அவர் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அவருடைய சீடர்கள் மற்றும் பலர் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று கூற ஆரம்பித்தனர். அவரது கல்லறை வெறுமையாக காணப்பட்டது, அடக்கம்பண்ணப்பட்ட அவருடைய சரீரம் அங்கே இல்லாமற் போய்விட்டது, மற்றும் பல தோற்றங்கள் பல மக்கள் குழுக்களால், பல்வேறு இடங்களில், மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளில் இயேசுவால் தோன்றி காட்சியளிக்கப்பட்டது.
இவற்றின் விளைவாக, மக்கள் இயேசுவைக் கிறிஸ்து அல்லது மேசியா என்று அறிவிக்க ஆரம்பித்தனர். அவருடைய உயிர்த்தெழுதல் அவருடைய சிலுவைப் பலியின் மூலம் பாவத்தை மன்னிக்கும் செய்தியை உறுதிப்படுத்துகிறது என்று அவர்கள் கூறினர். முதலில், சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நற்செய்தியை அவர்கள் எருசலேமில் அறிவித்தனர், அதுதான் அவர் கொல்லப்பட்ட அதே நகரம். இந்த புதிய பின்தொடர்தல் விரைவில் சரியான வழி என அறியப்பட்டது (அப்போஸ்தலர் 9:2, 19:9, 23; 24:22 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்) மற்றும் வேகமாக பலுகி விரிவடைந்தது. குறுகிய காலத்தில், நம்பிக்கையின் இந்த நற்செய்தி பிராந்தியத்திற்கு அப்பாலும் பரவியது, ரோம் வரை விரிவடைந்தது மற்றும் அதன் பரந்த பேரரசின் மிகவும் வெளிப்புறமாகவும் விரிவடைந்து இருந்தது.
இயேசு சந்தேகத்திற்கு இடமின்றி உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். வரலாற்றில் இயேசுவின் தாக்கத்தைப் படிப்பதன் மூலம் "உண்மையான வரலாற்று இயேசு" என்ற கேள்விக்கு சிறந்த பதிலை அளிக்க முடியும். இயேசுவிடம் இருந்த ஒப்பற்ற தாக்கத்திற்கான ஒரே விளக்கம், இயேசு ஒரு மனிதனை விட மிக மேலானவர் என்பதாகும். இயேசு இருந்தார், இப்போதும் இருக்கிறார், அவர் தான் தேவன் மனிதனாக வந்தவர் என்று வேதாகமம் துல்லியமாக சொல்லுகிறது. உலகத்தை சிருஷ்டித்து, வரலாற்றின் போக்கை கட்டுப்படுத்தும் தேவன் மட்டுமே உலகை இந்த வகையில் மிகவும் கடுமையாக பாதிக்கமுடியும்.
English
உண்மையான வரலாற்று இயேசு யார்?