settings icon
share icon
கேள்வி

எப்பொழுது / எப்படி நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம்?

பதில்


நாம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் மிகத்தெளிவாக போதிக்கின்றார். 1 கொரிந்தியர் 12:13 இப்படியாய் சொல்லுகிறது, “நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்”. ரோமர் 8:9 ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெறாமலிப்பானானால் அவன் கிறிஸ்துவுக்கு சொந்தமானவன் அல்ல என்று கூறுகின்றது: ‘‘தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” விசுவசிக்கிறவர்களுடைய இரட்சிப்பின் அச்சாரமாக போடப்படுகிற முத்திரையே பரிசுத்த ஆவினால்தான் என்று எபேசியர் 1:13-14 போதிக்கின்றது: நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்”.

இந்த மூன்று வேதபகுதிகளும் பரிசுத்த ஆவியானவர் நாம் இரட்சிக்கப்டும்பொதே நமக்குள் வந்துவிடுகிறார் என்பதை தெளிவாக்குகின்றது. கொரிந்து சபையிலுள்ள எல்லா விசுவாசிகளும் பரிசுத்த ஆவியைப்பெற்றிருந்தாலொழிய பவுல் ஒரே ஆவியினால் ஞானஸ்நானமும், ஒரே ஒரு ஆவியினால் தாகந்தீர்க்கப்பட்டோம் என்று சொல்லியிருக்க மாட்டார். ரோமர் 8:9, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியில்லாதிருந்தால் அவன் கிறிஸ்துவினுடையவனல்ல என்று மிகவும் வலுவாக சொல்லுகின்றது. ஆகவே பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதே இரட்சிப்பைப் பெற்றதற்கு அடையாளமாக இருக்கிறது. இரட்சிக்கப்படும்போது பரிசுத்த ஆவியை பெற்றிராவிட்டால் பரிசுத்த ஆவி ‘‘இரட்சிப்பின் முத்திரை’’ யாக இருக்க முடியாது (எபேசியர் 1:13-14). அநேக வேதவாக்கியங்கள் நம்முடைய இரட்சிப்பு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போதே பாதுகாப்புள்ளதாகிவிடுகிறது என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

இந்த கலந்துறையாடல் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது, ஏனென்றால் பரிசுத்த ஆவியின் ஊழியங்கள் குறித்து பொதுவாகவே குழப்பம் உள்ளது. பரிசுத்த ஆவியைப் நாம் பெறுவதும் அவர் நம்மில் வாசமாயிருப்பதும் இரட்சிப்பின் வேலையிலேயே நடக்கின்றது. பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுவது கிறிஸ்துவ வாழ்க்கையில் தொடர்ச்சியான நிலையில் நடக்கிற ஒரு காரியமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இரட்சிக்கப்படும்போதே நடக்கின்றது என்று சொல்கிறபோது, சிலர் அப்படி இல்லை என்று கூறுகிறார்கள். சில சமயம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், “பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதையும்” தவறாகப் புரிந்துக் கொள்கிறார்கள்.

முடிவுரையாக, நாம் பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்கிறோம்? நாம் இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போதே பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்கிறோம் (யோவன் 3:5-16). எப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம்? பரிசுத்த ஆவியானவர் நாம் விசுவாசிக்கிற அந்த வேளையிலிருந்து நம்முடைய நிரந்தர சொத்தாக நமக்குள்ளே வாசம் செய்கிறவராக மாறி விடுகின்றார்.

English



முகப்பு பக்கம்

எப்பொழுது / எப்படி நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries