settings icon
share icon
கேள்வி

சீர்திருத்த இறையியல் என்றால் என்ன?

பதில்


பரவலாகப் பார்த்தால், சீர்திருத்தப்பட்ட இறையியலானது 16-ஆம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கு அது கொண்டு செல்லுகிறது. மெய்யான நிலையில், சீர்திருத்தவாதிகள் தங்களது கோட்பாட்டை வேதத்திற்கு கண்டுபிடித்தனர், இது அவர்களின் “வேதவாக்கியங்கள் மட்டுமே” (sola scriptura) என்ற நம்பகத்தன்மையால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, எனவே சீர்திருத்த இறையியல் ஒரு “புதிய” நம்பிக்கை முறை அல்ல, ஆனால் அப்போஸ்தலக் கோட்பாட்டைத் தொடர முற்படுகிறது.

பொதுவாக, சீர்திருத்த இறையியல் வேதாகமத்தின் அதிகாரம், தேவனின் இறையாண்மை, கிறிஸ்துவின் மூலமாக கிருபையால் இரட்சிப்பு மற்றும் சுவிசேஷத்தின் அவசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆதாமுடன் தேவன் செய்த உடன்படிக்கை மற்றும் இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்த புதிய உடன்படிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தின் காரணமாக இது சில நேரங்களில் உடன்படிக்கை இறையியல் என்று அழைக்கப்படுகிறது (லூக்கா 22:20).

வேதாகமத்தின் அதிகாரம். சீர்திருத்த இறையியல் வேதாகமம் என்பது தேவனால் ஏவப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ வார்த்தையாகும் என்றும், இது நம்பிக்கை மற்றும் நடைமுறையின் அனைத்து விஷயங்களிலும் போதுமானது என்றும் போதிக்கிறது.

தேவனின் இறையாண்மை. சீர்திருத்த இறையியல் தேவன் தமது எல்லா படைப்புகளின் மீதும் தமது முழுமையான அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டுடன் ஆட்சி செய்கிறார் என்று கற்பிக்கிறது. அவர் எல்லா நிகழ்வுகளையும் முன்னரே தீர்மானித்துள்ளார், எனவே சூழ்நிலைகளால் ஒருபோதும் விரக்தியடையவில்லை. அதேவேளையில் இது உயிரினத்தின் விருப்பத்தை மட்டுப்படுத்தாது, தேவன் பாவம் தோன்றுவதற்கு காரணகர்த்தாவும் அல்ல.

கிருபையால் இரட்சிப்பு. சீர்திருத்த இறையியல், தேவன் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் ஒரு ஜனத்தை தனக்கு மீட்டுக்கொள்ளத் தேர்ந்தெடுத்து, அவர்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதாகக் கற்பிக்கிறது. இரட்சிப்பின் சீர்திருத்தக் கோட்பாடு பொதுவாக முதலெழுத்துப் புதிராக (அக்ரோஸ்டிக்) டுலிப் (TULIP) ஆல் குறிப்பிடப்படுகிறது (இது கால்வினிசத்தின் ஐந்து குறிப்புகள் என்றும் அழைக்கப்படுகிறது):

டி (T) - மொத்த சீரழிவு (total depravity). மனிதன் தனது பாவ நிலையில் முற்றிலும் உதவியற்றவனாக தேவனுடைய கோபத்தின் கீழ் இருக்கிறான், எந்த வகையிலும் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது தவிக்கிறான். மொத்த சீரழிவு என்பது மனிதன் இயல்பாகவே தேவனை அறிய முற்படுவதில்லை என்பதாகும், தேவன் அவ்வாறு செய்யும்படி அவனுக்கு தயவுகாண்பிக்காத வரை அவனால் அவரை அறியமுடியாது (ஆதியாகமம் 6:5; எரேமியா 17:9; ரோமர் 3:10-18).

யு (U) - நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல் (unconditional election). தேவன், நித்திய காலத்திலிருந்து, ஏராளமான பாவிகளைக் இரட்சிப்பதற்காக முன்குறித்து தேர்ந்தெடுத்துள்ளார், அவர்களின் எண்ணிக்கையை எந்த மனிதனும் எண்ண முடியாது (ரோமர் 8:29-30; 9:11; எபேசியர் 1:4-6,11-12).

எல் (L) - வரையறுக்கப்பட்ட பாவப்பரிகாரம் (limited atonement). "ஒரு குறிப்பிட்ட மீட்பு" என்றும் அழைக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை கிறிஸ்து தானே தம்மேல் எடுத்துக் கொண்டார், அதன் மூலம் அவருடைய மரணத்தினால் அவர்களின் விலைக்கிரயத்தை செலுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் வெறுமனே இரட்சிப்பை "சாத்தியமாக்கவில்லை", அவர் தேர்ந்தெடுத்தவர்களுக்காகவே அதைப் பெற்றார் (மத்தேயு 1:21; யோவான் 10:11; 17:9; அப்போஸ்தலர் 20:28; ரோமர் 8:32; எபேசியர் 5:25).

ஐ (I) - தவிர்க்கமுடியாத கிருபை (irresistible grace). முன்பு எதிர்த்ததை விரும்பும்படி மாறுகிறான். அதாவது, தேவனின் கிருபை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அதன் இரட்சிப்பின் வேலையைச் செய்யத் தவறாது (யோவான் 6:37,44; 10:16).

பி (P) – பரிசுத்தவான்களின் நீடிய பொறுமை (perseverance of the saints). தேவன் தம்முடைய பரிசுத்தவான்கள் விழாதபடி பாதுகாக்கிறார்; ஆகவே, இரட்சிப்பு நித்தியமானது (யோவான் 10:27-29; ரோமர் 8:29-30; எபேசியர் 1:3-14).

சுவிசேஷத்தின் அவசியம். சீர்திருத்த இறையியல், கிறிஸ்தவர்கள் உலகில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக கற்பிக்கிறார்கள், ஆவிக்குரிய நிலையில் சுவிசேஷம் மூலமாகவும், சமூக ரீதியாக பரிசுத்த வாழ்க்கை மற்றும் மனிதாபிமானம் மூலமாகவும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சீர்திருத்த இறையியலின் பிற தனித்துவங்கள் பொதுவாக இரண்டு ஆசரிப்புகளை (ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து) கடைபிடிப்பது, ஆவிக்குரிய வரங்கள் நின்றுபோய்விட்டன என்கிறதான பார்வை (வரங்கள் இனி திருச்சபைக்கு நீட்டிக்கப்படாது), மற்றும் வேதத்தைப் பற்றிய ஒரு தெய்வீக அருளாட்சி இல்லாத பார்வை ஆகியவை அடங்கும். சீர்திருத்த திருச்சபைகள் மிகுந்த மரியாதைக்குரிய நிலையில் ஜாண் கால்வின், ஜானண் நாக்ஸ், உல்ரிச் ஸ்விங்லி மற்றும் மார்ட்டின் லூதர் ஆகியோரின் எழுத்துக்ககளை கருதுகிறார்கள். வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (The Westminster Confession) சீர்திருத்த மரபின் இறையியலைக் கொண்டுள்ளது. சீர்திருத்த மரபில் உள்ள நவீன திருச்சபைகளில் பிரஸ்பிட்டேரியன், காங்கிரகேஷனலிஸ்ட் மற்றும் சில பாப்டிஸ்ட் சபைகள் அடங்கும்.

English



முகப்பு பக்கம்

சீர்திருத்த இறையியல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries