கேள்வி
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
பதில்
மறுபிறவி பற்றிய கருத்து வேதாகமத்தில் முற்றிலும் ஆதாரமற்றது, இது நாம் ஒரு முறை மரித்த பின்னர் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்கிறோம் என்று தெளிவாகக் கூறுகிறது (எபிரேயர் 9:27). ஜனங்கள் வாழ்வதற்கு இரண்டாவது வாய்ப்பு அல்லது வெவ்வேறு மனிதர்களாக அல்லது விலங்குகளாக திரும்பி வருவதை வேதாகமம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கள்ளனிடம் இயேசு சொன்னார், "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" (லூக்கா 23:43), "உனக்கு இந்த பூமியில் வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்" என்று அல்ல. மத்தேயு 25:46 குறிப்பாக விசுவாசிகள் நித்திய ஜீவனுக்கும், அவிசுவாசிகள் நித்திய ஆக்கினைக்கும் செல்கிறார்கள் என்று கூறுகிறது. மறுபிறவி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு பிரபலமான நம்பிக்கையாக இருந்து வருகிறது, ஆனால் அது கிறிஸ்தவர்களால் அல்லது யூத மதத்தைப் பின்பற்றுபவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை, ஏனெனில் அது வேதத்திற்கு முரணானது.
மறுபிறவிக்கான ஆதாரமாக சிலர் சுட்டிக்காட்டும் ஒரு பகுதி மத்தேயு 17:10-12 ஆகும், இது யோவான் ஸ்நானகனை எலியாவுடன் இணைக்கிறது. இருப்பினும், யோவான் ஸ்நானகன் எலியாவாக மறுபிறவி எடுத்தார் என்று வேதப்பகுதி கூறவில்லை, ஆனால் ஜனங்கள் அவருடைய வார்த்தைகளை நம்பியிருந்தால், எலியாவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை அவர் நிறைவேற்றியிருப்பார், அதன் மூலம் இயேசுவை மேசியா என்று நம்பியிருப்பார்கள் (மத்தேயு 17:12). ஜனங்கள் யோவான் ஸ்நானகனை எலியாவா என்று குறிப்பாகக் கேட்டார்கள், அவர் "இல்லை, நான் இல்லை" (யோவான் 1:21) என்று கூறினார்.
மறுபிறவியில் நம்பிக்கை என்பது ஒரு பழங்கால நிகழ்வு மற்றும் இந்து மதம், சீக்கியம் மற்றும் ஜைன மதம் போன்ற பெரும்பான்மையான இந்திய மத மரபுகளுக்குள் ஒரு மையக் கொள்கையாகும். பல நவீன புறமதங்களும் சில புதியயுக இயக்கங்களைப் போலவே, ஆவியுலகத்தைப் பின்பற்றுபவர்களுடன் மறுபிறவியையும் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், கிறிஸ்தவர்களுக்கு, எந்த சந்தேகமும் இருக்க முடியாது: மறுபிறவி என்பது வேதாகமத்திற்கு எதிரானது மற்றும் அது தவறானது என்று நிராகரிக்கப்பட வேண்டும்.
English
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?