கேள்வி
விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்வது எப்போதும் விபச்சாரமா?
பதில்
இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிக்கத் தொடங்கும் முன்பதாக, "தள்ளிவிடுதலை தேவனாகிய கர்த்தர் வெறுக்கிறார்" (மல்கியா 2:16) என்பதை மீண்டும் வலியுறுத்துவோம். விவாகரத்துக்குப் பிறகு பெரும்பாலான ஜனங்கள் அனுபவிக்கும் வலி, குழப்பம் மற்றும் விரக்தி ஆகியவை நிச்சயமாக தேவன் விவாகரத்தை வெறுக்கக் காரணமாகும். விவாகரத்து பற்றிய கேள்வியை விட, வேதாகமத்தின்படி, மறுமணம் பற்றிய கேள்வி மிகவும் கடினமானது. விவாகரத்து செய்யும் பெரும்பான்மையான ஜனங்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள் அல்லது மறுமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். இதைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?
மத்தேயு 19:9 கூறுகிறது, "எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." மத்தேயு 5:32ஐயும் பார்க்கவும். "திருமணத் துரோகம்" தவிர்த்து விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்வது விபச்சாரம் என்று இந்த வேதப்பகுதி தெளிவாகக் கூறுகிறது. இந்த "விதிவிலக்கு விதி" மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அறிந்துகொள்ள, பின்வரும் கட்டுரைகளைப் படிக்கவும்:
விவாகரத்து மற்றும் மறுமணம் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?
நான் விவாகரத்து பெற்றவன். நான் மறுமணம் செய்து கொள்ளலாமா?
மறுமணம் விபச்சாரமாக கருதப்படாமல் விவாகரத்து மற்றும் மறுமணம் அனுமதிக்கப்படும் சில நிகழ்வுகள் உள்ளன என்பது எங்கள் கருத்து. இந்த நிகழ்வுகளில் மனந்திரும்பாத விபச்சாரம், வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளின் உடல் ரீதியான பலாத்காரம் மற்றும் உண்மையில்லாத வாழ்க்கைத் துணையால் நம்பிக்கை கொண்ட துணையை கைவிடுதல் ஆகியவை அடங்கும். அத்தகைய சூழ்நிலையில் ஒரு நபர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. வேதாகமம் நிச்சயமாக தனிமையில் இருப்பதற்கு அல்லது மறுமணத்தில் ஒப்புரவாகுதலை ஊக்குவிக்கிறது (1 கொரிந்தியர் 7:11). அதே சமயம், விவாகரத்தில் அப்பாவி தரப்பினருக்கு தேவன் தனது இரக்கத்தையும் கிருபையையும் வழங்குகிறார், மேலும் அந்த நபரை விபச்சாரியாக கருதாமல் மறுமணம் செய்ய அனுமதிக்கிறார் என்பது எங்கள் கருத்து.
மேலே பட்டியலிடப்பட்ட காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக விவாகரத்து செய்து, பின்னர் மறுமணம் செய்துகொள்பவர் விபச்சாரம் செய்கிறவர் ஆவார் (லூக்கா 16:18). இந்த மறுமணம் விபச்சாரத்தின் "செயல்" அல்லது விபச்சாரத்தின் "நிலை" என்ற கேள்வி எழுகிறது. மத்தேயு 5:32 இல் கிரேக்க மொழியில் நிகழ்காலத்தில் வருகிறது; 19:9; மற்றும் லூக்கா 16:18 விபச்சாரத்தின் தொடர்ச்சியான நிலையைக் குறிக்கலாம். அதே நேரத்தில், கிரேக்க மொழியில் நிகழ்காலம் எப்போதும் தொடர்ச்சியான செயலைக் குறிக்காது. சில சமயங்களில் அது ஏதோ நிகழ்ந்தது என்று பொருள்படும் (எரிஸ்டிக், பன்ச்லியர் அல்லது பொதுவான நிகழ்காலம்). உதாரணமாக, மத்தேயு 5:32 இல் உள்ள "தள்ளிவிடுதல்" என்ற வார்த்தை நிகழ்காலம், ஆனால் விவாகரத்து என்பது ஒரு தொடர்ச்சியான செயல் அல்ல. சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் மறுமணம் என்பது விபச்சாரத்தின் தொடர்ச்சியான நிலை அல்ல என்பது எங்கள் கருத்து. மறுமணம் செய்து கொள்ளும் செயல் மட்டுமே விபச்சாரமாகும்.
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தில், விபச்சாரத்திற்கான தண்டனை மரணம் (லேவியராகமம் 20:10). அதே நேரத்தில், உபாகமம் 24:1-4 விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்வதைக் குறிப்பிடுகிறது, அதை விபச்சாரம் என்று அழைக்கவில்லை, மறுமணம் செய்த துணைக்கு மரண தண்டனையைக் கோரவில்லை. தேவன் தள்ளிவிடுதலை வெறுக்கிறார் என்று வேதாகமம் வெளிப்படையாகக் கூறுகிறது (மல்கியா 2:16) ஆனால் தேவன் மறுமணத்தை வெறுக்கிறார் என்று எங்கும் வெளிப்படையாகக் கூறவில்லை. மறுமணம் செய்துகொண்ட தம்பதிகளை விவாகரத்து செய்யும்படி வேதாகமம் எங்கும் கட்டளையிடவில்லை. மறுமணம் செல்லாது என உபாகமம் 24:1-4 விவரிக்கவில்லை. விவாகரத்து மூலம் மறுமணம் முடிப்பது, விவாகரத்து மூலம் முதல் திருமணத்தை முடிப்பது போல் பாவமாக இருக்கும். தேவனுக்கு முன்பாக, தம்பதியினருக்கு இடையே, மற்றும் சாட்சிகள் முன்னிலையில் உறுதிமொழிகளை மீறுவது இரண்டும் அடங்கும்.
சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், ஒரு ஜோடி மறுமணம் செய்து கொண்டால், அவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையை நம்பகத்தன்மையுடன், தேவனை மதிக்கும் விதத்தில், கிறிஸ்துவை தங்கள் திருமணத்தின் மையத்தில் கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். திருமணம் என்பது திருமணம். புதிய திருமணத்தை தேவன் செல்லாததாகவோ அல்லது விபச்சாரமாகவோ கருதுவதில்லை. மறுமணம் செய்துகொண்ட தம்பதிகள் தேவனுக்கு, ஒருவருக்கொருவர் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்—மேலும் அவர்களது புதிய திருமணத்தை நீடித்த மற்றும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டதாக மாற்றுவதன் மூலம் அவரை கனம்பண்ண வேண்டும் (எபேசியர் 5:22-33).
English
விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்வது எப்போதும் விபச்சாரமா?