settings icon
share icon
கேள்வி

மனந்திரும்புதல் என்றால் என்ன மற்றும் இது இரட்சிப்புக்கு அவசியமா?

பதில்


பலர் மனந்திரும்புதல் என்கிற வார்த்தையை "பாவத்திலிருந்து திரும்புதல்" என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது மனந்திரும்புதலுக்கான வேதாகம வரையறை அல்ல. வேதாகமத்தில் மனந்திரும்புதல் என்னும் வார்த்தை "ஒருவரது மனதை மாற்றுவதாகும்." உண்மையான மனந்திரும்புதல் செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வேதாகமம் சொல்லுகிறது (லூக்கா 3:8-14; அப்போஸ்தலர் 3:19). அப்போஸ்தலர் 26:20 கூறுகிறது: "அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்." மனந்திரும்புதலுக்கான முழு வேதாகம வரையறை மனப்போக்கின் ஒரு மாற்றமாகும்.

அப்படியானால், மனந்திரும்புதலுக்கும் இரட்சிப்புக்கும் இடையேயான தொடர்பு என்ன? அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் குறிப்பாக மனந்திரும்புதலுக்கு கவனம் செலுத்துகிறது (அப்போஸ்தலர் 2:38; 3:19; 11:18; 17:30; 20:21; 26:20). மனந்திரும்புதலுக்காக, இயேசு கிறிஸ்துவைப் பற்றி உங்கள் மனதை மாற்றியமைப்பதே இரட்சிப்பு. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுருவின் பிரசங்கத்தில் (அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில்), ஜனங்கள் மனந்திரும்புவதற்கான அழைப்பை அளித்து அவர் முடிக்கிறார் (அப்போஸ்தலர் 2:38). எதிலிருந்து மனந்திரும்ப வேண்டும்? பேதுரு இயேசுவை நிராகரித்தவர்களை அழைத்தார் (அப்போஸ்தலர் 2:36), அவரைப் பற்றி அவர்களுடைய மனதை மாற்றிக்கொள்ள, அவர் உண்மையாகவே "கர்த்தரும் கிறிஸ்துவும்" என்று அடையாளம் காட்டுகிறார் (அப்போஸ்தலர் 2:36). மேசியாவாகவும், இரட்சகராகவும் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியும் கிறிஸ்துவை நிராகரிப்பதிலிருந்து தங்கள் மனதை மாற்றும்படியும் பேதுரு ஜனங்களை அழைக்கிறார்.

மனந்திரும்புதலும் விசுவாசமும் "ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகப்" புரிந்துகொள்ள முடியும். இயேசு யார், அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றி உங்கள் மனதை மாற்றிக்கொள்ளாமல், இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசத்தை வைக்க முடியாது. அறியாமை அல்லது வெறுப்பிலிருந்து மனப்பூர்வமாக நிராகரிக்கப்படுதல் அல்லது மனந்திரும்புதலில் இருந்து மனதை மாற்றும். இரட்சிப்பு சம்பந்தமாக வேதாகம மனந்திரும்புதல், கிறிஸ்துவின் விசுவாசத்தை கிறிஸ்துவிடம் நிராகரிப்பதிலிருந்து உங்கள் மனதை மாற்றிக்கொண்டிருக்கிறது.

மனந்திரும்புதல் என்பது நாம் வேலைசெய்து இரட்சிப்பை சம்பாதிப்பதற்கான வேலை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது மிக முக்கியம். தேவன் அந்த நபரைத் தானே இழுக்கும் வரையில் எவரும் மனந்திரும்பி தேவனிடம் வரமுடியாது (யோவான் 6:44). அப்போஸ்தலர் 5:31 மற்றும் 11:18 ஆகியவை, மனந்திரும்புதல் என்பது தேவன் கொடுக்கும் ஒன்று என்பதைக் குறிக்கிறது – அவருடைய அருளால் மட்டுமே இது சாத்தியம். தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைத் தராத பட்சத்தில் எவரும் மனந்திரும்ப முடியாது. மனந்திரும்புதலும் விசுவாசமும் உட்பட இரட்சிப்பு அனைத்தும், தேவன் நம்மை ஈர்க்கிறது, நம்முடைய கண்களைத் திறந்து, நம்முடைய இருதயங்களை மாற்றுகிறதாய் இருக்கிறது. கடவுளுடைய நீடிய பொறுமை நம்மை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது (2 பேதுரு 3:9), அவருடைய இரக்கமும் அப்படியே செய்கிறது (ரோமர் 2:4).

மனந்திரும்புதல் என்பது இரட்சிப்பை சம்பாதிக்கும் ஒரு வேலையல்ல என்கிறபோது, இரட்சிப்பு மனந்திரும்புதல் வேலைகளில் விளைகிறது. உங்களுடைய செயலில் மாற்றம் ஏற்படாமல், உண்மையிலேயே உங்கள் மனதை மாற்றிக்கொள்ள முடியாது. வேதாகமத்தில் மனந்திரும்புதல் நடத்தையில் மாற்றத்தை விளைவிக்கிறது. அதனால்தான், யோவான்ஸ்நானகன் ஜனங்களைப் பார்த்து "மனந்திரும்புதலுக்கேற்றபடி கனியைக் கொடுங்கள்" (மத்தேயு 3:8) என்று கூறினார். கிறிஸ்துவை விசுவாசிக்காமல் கிறிஸ்துவை நிராகரித்ததிலிருந்து, உண்மையில் மனந்திரும்பிய ஒருவர் மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கையின் சான்றுகளை தன வாழ்வில் கொடுப்பார் (2 கொரிந்தியர் 5:17; கலாத்தியர் 5: 19-23; யாக்கோபு 2:14-26). மனந்திரும்புதல் என்ன என்பதை சரியாக வரையறுக்கப்படுதல், இரட்சிப்புக்கு மிகவும் அவசியம் ஆகும். வேதாகம மனந்திரும்புதல் என்பது இயேசு கிறிஸ்துவைப் பற்றி உங்கள் மனதை மாற்றிக்கொண்டு, இரட்சிப்புக்காக விசுவாசத்தோடு தேவனிடம் திரும்புதல் ஆகும் (அப்போஸ்தலர் 3:19). பாவத்திலிருந்து திரும்புதல் மனந்திரும்புதலுக்கான வரையறை அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையான, விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட மனந்திரும்புதலின் விளைவுகளில் இதுவும் ஒன்று.

English


முகப்பு பக்கம்
மனந்திரும்புதல் என்றால் என்ன மற்றும் இது இரட்சிப்புக்கு அவசியமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries