settings icon
share icon
கேள்வி

எனக்கான சரியான மதம் என்ன?

பதில்


துரித உணவு உணவகங்கள் நமக்கு தேவையான உணவுகளை நம் ருசிக்கு ஏற்றவாறு நாம் விரும்புகிற வகையில் சமைத்து கொடுத்து நம்மை வெகுவாக கவர்கின்றன. சில தேநீர் கடைகள் தங்களிடத்தில் நூற்றுக்கும் அதிகமான சுவையுடன் பல்வேறு காபி வகைகள் இருப்பதாக கூறி பெருமை கொள்கின்றன. வீடுகளையும் கார்களையும் வாங்கும் போது, நாம் விரும்புகிற நிலையில் அனைத்து அம்சங்களும் இருக்கிறதா என பார்க்கிறோம். நாம் இனியும் ஒரு சாக்லேட், வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி உலகில் வாழமுடியாது. தெரிந்துகொள்ளுதலே ராஜா! நீங்கள் விரும்புகிற எதையும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகளின்படி நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

இப்படியிருக்க ஒரு மதத்தைப் பற்றி எப்படி உங்களுடைய நிலைபாடு என்ன? எது சரியான மதம் என்று எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? இதை செய் அதை செய் என்று கூறாத, நிபந்தனைகள் இல்லாத, அதிக பாரத்தை சுமத்தாத மற்றும் எதை செய்தாலும் குற்ற உணர்ச்சி இல்லாத ஒரு மதத்தைப் பற்றி எப்படி நினைக்கிறீர்கள்? மேலே குறிப்பிட்டதுபோல, உங்கள் சுவைக்கேற்ற இப்படிப்பட்ட மதங்கள் உலகில் இருக்கின்றன. ஆனால் மதம் என்பது நமக்கு பிடித்திருக்கிற சுவையில் நாமாகவே தேர்ந்தெடுத்துக்கொள்வதா?

நம் கவனத்தை ஈர்க்கிற எண்ணற்ற குரல்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது இவைகள் எல்லாவற்றைக் காட்டிலும் இயேசுவை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? உதாரணமாக முஹம்மது அல்லது கன்பூசியஸ், புத்தர் அல்லது சார்லஸ் டேஸ் ரஸல், அல்லது ஜோசப் ஸ்மித்? பாதைகள் பல இருந்தாலும், எல்லா பாதைகளும் பரலோகத்திற்கு கொண்டு செல்வதில்லை. உதாரணத்திற்கு எல்லா பாதைகளும் இன்டியானாவுக்கு வழிவகுக்காது.

இயேசு ஒருவர் மட்டுமே தேவனுடைய அதிகாரத்தோடு பேசுகிறார், ஏனென்றால் இயேசு ஒருவர் மட்டும் மரணத்தை வென்றவர். முஹம்மது, கன்பூசியஸ் மற்றும் மற்றவர்கள் யாவரம் தங்கள் நாளில் மரணம் அடைந்து இன்றும் தங்கள் கல்லறைகளில் அணிவகுத்து நிற்கிறார்கள். ஆனால் கொடூரமான நிலையில் ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இயேசு தம்முடைய வல்லமையால் மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையை விட்டு வெளியேறினார். மரணத்தின் மேல் அதிகாரம் அல்லது வல்லமையுள்ள எவராயினும் நம் கவனத்தை இயல்பாகவே ஈர்ப்பார்கள். அதே போல மரணத்தின்மேல் அதிகாரமுள்ளவர் கூறும் காரியங்கள் கேட்கப்படவும் வேண்டும்.

இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் ஆதாரம் அல்லது சான்றுகள் பெருமளவில் இருக்கிறது. முதலாவதாக, உயிரோடு எழுந்த கிறிஸ்துவை கண்ட ஐநூறுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருந்தனர்! மெய்யாகவே இது பெரும் சாட்சிகள் தான். இந்த ஐநூறு குரல்கள் எழுப்பும் சப்தங்களை புறக்கணிக்கப்பட முடியாது. அடுத்தபடியாக காலியான கல்லறை. இயேசுவின் எதிரிகள் இயேசு உயிர்த்தெழவில்லை என பறை சாற்றி அவரது அடக்கம்பண்ணப்பட்ட சரீரத்தை கொண்டு வந்து காண்பித்து எல்லோருடைய வாயையும் பேசமுடியாமல் அடைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அப்படி செய்யக்கூடாமல் போயிற்று காரணம் இயேசுவின் சரீரம் கல்லறையில் இல்லை. அவரை அடக்கம் பண்ணின கல்லறை காலியாக இருந்தது.

இயேசுவின் சீடர்கள் அவருடைய உடலை திருடி இருப்பார்களா? அதற்கு சாத்தியமே இல்லை. அது அவர்களுக்கு அரிதாகத்தான் இருந்தது. காரணம் இயேசுவின் கல்லறை மிகுதியாக ஆயுதபாணிகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. பயிற்றுவிக்கப்பட்ட வீரர்களுக்கு எதிராக மீனவர்கள் எம்மாத்திரம்? இவை ஒரு புறம் இருக்க ஏறக்குறைய எல்லா அப்போஸ்தலர்களும் இரத்த சாட்சிகளாக தங்கள் உயிர்களை கிறிஸ்துவிற்காக தியாகம் செய்து ஜீவனை விட்டார்கள். ஒரு பொய்யான மற்றும் மோசடியான காரியத்திற்கு யாராவது தங்கள் உயிர்களை விடுவார்களா? ஆக இயேசுவின் உயிர்த்தெழுதல் வெறுமனே விளக்கமளித்துவிட்டு போகிற ஒரு எளிய காரியமல்ல!

ஆகவே, மரணத்தின்மேல் அதிகாரமுள்ள எவரும் கூறும் காரியங்கள் கேட்கப்படவும் வேண்டும். மரணத்தின் மேல் தனக்குண்டாயிருந்த வல்லமையை இயேசு நிரூபித்தார்; எனவே, அவர் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும். தாம் ஒருவரே இரட்சிப்புக்கு ஒரே வழி என்று இயேசு கூறுகிறார் (யோவான் 14:6). அவரும் ஒரு வழி இல்லை; அவர் பல வழிகளில் ஒரு வழியும் இல்லை. ஒரே ஒரு வழிதான் உண்டு, அந்த வழி இயேசுவே!

இந்த இயேசு கூறுகிறார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). இது ஒரு கடினமான உலகம் மற்றும் வாழ்க்கையும் கடினமானது. நம்மில் பெரும்பாலோர் குருட்டுத்தனமாகவும், காயம்பட்டவர்களாகவும், சண்டையிட்டுக் கொள்ளப்படுகிறவர்களாகவும் இருக்கிறோம். ஏற்கிறீர்கள? ஆகவே, உங்களுக்கு என்ன வேண்டும்? மறுசீரமைப்பு அல்லது வெறும் மதம்? உயிருள்ள இரட்சகராக அல்லது இறந்த "தீர்க்கதரிசிகளில்" ஒருவர்? அர்த்தமுள்ள உறவு அல்லது வெறுமையான சடங்குகள்? இயேசு ஒரு தெரிவு அல்ல - அவர் ஒருவரே தேர்வாக இருக்கிறார்!

நீங்கள் மன்னிப்பை தேடுகிறீர்கள் என்றால் இயேசு சரியான "மதம்" தான் (அப்போஸ்தலர் 10:43). நீங்கள் தேவனோடுள்ள ஒரு அர்த்தமுள்ள உறவை தேடுகிறீர்களானால், இயேசு சரியான "மதம்" தான் (யோவான் 10:10). நீங்கள் பரலோகத்தில் ஒரு நித்தியமான வீட்டை தேடுகிறீர்களானால் இயேசு சரியான "மதம்" தான் (யோவான் 3:16). இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர்மேல் உங்கள் விசுவாசத்தை வையுங்கள்; நீங்கள் ஒருபோதும் அதற்காக வருத்தப்படமாட்டீர்கள்! உங்களுடைய பாவ மன்னிப்பிற்காக அவரில் நம்பிக்கை வையுங்கள்; நீங்கள் ஒரு போதும் ஏமாற்றமடையமாட்டீர்கள்.

நீங்கள் தேவனுடன் ஒரு "சரியான உறவை" கொண்டிருக்க விரும்பினால், நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஒரு மாதிரி ஜெபம் இதோ. நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். ஈவாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

எனக்கான சரியான மதம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries