கேள்வி
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
பதில்
"ஜீவ நதி" என்கிற துல்லியமான சொற்றொடர் வேதாகமத்தில் இல்லை. எனினும், வெளிப்படுத்துதல் 22:1-2, “பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது” என்று குறிப்பிடுகிறது. அப்போஸ்தலனாகிய யோவான், புதிய எருசலேமைப் பற்றிய தனது தரிசனத்தில், நதி "நகரத்து வீதியின் மத்தியில்" ஓடுவதாக விவரிக்கிறார்.
தண்ணீர் என்பது வேதத்தில் நித்திய வாழ்வினைக் குறிக்கும் பொதுவான அடையாளமாகும். ஏசாயா மகிழ்ச்சியுடன் "இரட்சிப்பின் ஊற்றுககளில்" இருந்து தண்ணீர் எடுப்பதைக் குறிக்கிறது (ஏசாயா 12:3). பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எரேமியா இஸ்ரவேலர்கள் தேவனை, "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்" என்பதற்காகக் கண்டித்தார் (எரேமியா 2:13). இஸ்ரவேலர்கள், பொய்யான விக்கிரகங்கள், உலகப்பிரகாரம் மற்றும் வேலை சார்ந்த மதங்களைத் துரத்துவதற்காக, நித்திய ஜீவனைத் தருகிற ஜீவனுள்ள தேவனை கைவிட்டுவிட்டார்கள். மனிதர்கள் இன்றும் அவ்வாறே செய்கிறார்கள், வறண்ட மற்றும் அசுத்தம் நிறைந்த சடப்பொருள் மற்றும் சுயமான இன்பம் கொண்ட வாழ்க்கையை சுத்திகரிக்க கிறிஸ்து மட்டுமே வழங்கும் ஜீவத் தண்ணீரை மறுகிறார்கள்.
கிணற்றடியில் இருந்த சமாரியப் பெண்ணை அவள் மீண்டும் ஒருபோதும் ஆவிக்குரிய தாகம் எடுக்காதபடி, (நித்திய) ஜீவத் தண்ணீரைத் தம்மிடமிருந்து எடுக்கும்படி இயேசு ஊக்குவித்தார் (யோவான் 4:13-14). அவரை விசுவாசிக்கிறவர்கள், அவர் யோவான் 7:38-ல் தொடர்ந்து சொல்கிறார், அவர்களிடமிருந்து ஜீவத் தண்ணீர் ஓடுகிறது. ஜீவனுக்கு தண்ணீர் பொருத்தமான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அடையாளமாகும். பூமியில் பௌதிக வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கு பௌதிக தண்ணீர் அவசியமானது போலவே, இரட்சகரிடமிருந்து ஜீவத்தண்ணீர் அவருடன் நித்திய ஜீவனைத் தக்கவைக்க அவசியம் ஆகும். இயேசு ஜீவ அப்பமாகவும் (யோவான் 6:35) ஜீவத் தண்ணீரின் மூலமாகவும் இருக்கிறார், தம் ஜனங்களை என்றென்றும் தாங்குகிறார்.
வெளிப்படுத்தல் 22 இல் உள்ள ஜீவத் தண்ணீரின் நதியானது, கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும் இலவசமாகக் தேவன் வழங்கும் நித்திய ஜீவனின் அடையாளப் பிரதிபலிப்பாகும்.
English
மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?