கேள்வி
சாத்தானிசம் என்றால் என்ன?
பதில்
சாத்தானிசம் எளிதில் வரையறுக்கப்படவில்லை. சாத்தானிசத்தின் பல "பிரிவுகள்" உள்ளன. கிறிஸ்தவர்களுக்கு மாறாக, சாத்தானியவாதிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் உடன்படவில்லை. சில வேதாகம பத்திகளின் விளக்கத்தைப் பற்றி கிறிஸ்தவர்கள் கருத்து அல்லது நம்பிக்கையில் வேறுபடலாம், ஆனால் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்து நம் பாவங்களுக்கான விலைக்கிரயத்தை கொடுத்த இயேசு தேவனுடைய குமாரன் என்ற அதே அடிப்படைக் கொள்கையை அவர்கள் நம்புகிறார்கள். சாத்தானியர்கள் தங்களுக்குள் சாத்தான் கூட இருக்கிறதாகவும், அவர்கள் அவனை வணங்குகிறவர்களாக அல்லது தங்களையே வணங்குகிறவர்களாக இருக்கிறோம் என்று வாதிடுகின்றனர். சாராம்சத்தில், அவர்கள் பொய்களால் பிணைக்கப்பட்ட குழப்பமான ஒரு குழுவாகும். யோவான் 8:44 ஒருவேளை சாத்தானியர்களுக்குப் பொருந்தும்: "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”
இந்த பொய்களால் தான் சாத்தானிசத்திற்குள் ஏராளமான சித்தாந்தங்கள் உள்ளன. சாத்தானிசத்தின் சில நடைமுறைகள் நிலையானவை, மற்றும் சாத்தானியவாதிகளின் ஒற்றுமை ஒரு அடிப்படை நம்பிக்கை அமைப்பை விட சடங்குகளில் அதிகமாக காணப்படுகிறது. சாத்தானியர்கள் சில விஷயங்களைச் செய்கிறார்கள்; அவர்கள் சில விஷயங்களை நம்ப வேண்டியதில்லை.
பெரும்பாலான சாத்தானியவாதிகள், பிசாசு வழிபாட்டாளர்கள், பிசாசுகள், லூசிஃபரியர்கள் மற்றும் சாத்தான் சபையின் உறுப்பினர்கள் லெவயன் சாத்தானியத்தில் வேர்கள் இருப்பதாக கூறுகின்றனர், இது சாத்தானிய வேதாகமத்தின் எழுத்தாளரும் சாத்தான் சபையின் முதல் நிறுவனருமான அன்டன் லெவேயின் பெயரையே பெயரிடப்பட்டது. லெவே மறைமுகமாக சாத்தானின் முதல் சபையை 1966 இல் தொடங்கினார். எல்லா தீமைகளுக்கும் சுயமாக-அறிவிக்கப்பட்ட அதிகாரியாக, அவர் வாராந்திர விரிவுரைகளை ஒரு நபருக்கு $2.00 செலவில் கொடுக்கத் தொடங்கினார். அவ்வாறாக சாத்தான் சபையும் பிறந்தது.
சாத்தானிசத்தின் அனைத்து கிளைகளிலும் அடிப்படை பொதுத்தன்மை சுயத்தை மேம்படுத்துவதாகும். சாத்தானிசத்தின் அனைத்து வடிவங்களும் வாழ்க்கை நுகர்வுக்கு உள்ளது என்றும் சுயநலம் ஒரு நல்லொழுக்கம் என்றும் கூறுகிறது. சில சாத்தானியவாதிகள் தங்களுக்குத் தெரிந்த ஒரே வாழும் இருப்பு பூமியில் மட்டுமே உள்ளது என்று நம்புகிறார்கள். இவ்வாறு, பிசாசு வழிபாட்டாளர்கள் இப்போதைக்கு மட்டுமே வாழ்கிறார்கள், அவர்களுடைய நம்பிக்கை பேராசை மற்றும் துரோகம்.
சாத்தானின் சபையில் சிலர் தேவன் அல்லது பிசாசு இல்லை என்று நம்பினாலும், சாத்தானுக்கு சாத்தானின் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது. சாத்தான் சபையில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களுக்கோ அல்லது வேறு யாருக்கும் மீட்பர் இல்லை என்று நம்புகிறார்கள். ஒவ்வொரு நபரும் தனது சொந்த வாழ்க்கைக்கு முழு பொறுப்பு என்கிறார்கள். இன்னும், அவர்கள் சடங்குகளில் சாத்தானிடம் ஜெபம் செய்கிறார்கள், அவனுடைய இறையாண்மையான கரம் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தும்படி கேட்கிறார்கள். இந்த வகையான சிந்தனை பொய்கள் மற்றும் வஞ்சகங்களின் செல்வாக்கு அவர்களின் தத்துவத்தில் வெளிப்படுகிறது. சாத்தானியர்கள் அவனை நம்புகிறார்களா இல்லையா என்பது சாத்தானுக்கு பொருத்தமற்றது. இறுதி முடிவு ஒன்றே—அவர்களுடைய ஆத்துமாக்கள் அவனுடன் அடிமைத்தனத்தில் உள்ளன, மேலும், தேவனுடைய கிருபை தலையிடாவிட்டால், அவர்கள் நரகத்தில் தங்களின் நித்தியத்தை அனுபவிப்பார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், சாத்தானிசம் சாத்தானை ஆராதிப்பதை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம், ஆனால் அது ஒரு உண்மையான தேவனை வணங்காத ஒரு உணர்வுள்ள முயற்சி ஆகும். ரோமர் 1-ஆம் அதிகாரத்தில் சாத்தானியரின் இருதயத்தையும் நோக்கங்களையும் தெளிவாகப் பார்க்கலாம். அவர்கள் "தகாதவைகளைச் செய்யும்படி கெட்ட மனதைக் கொண்டுள்ளனர். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டிருக்கிறார்கள்” (வசனங்கள். 28-29). இந்த வாழ்க்கை முறையில் சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்ட ஜனங்கள் தேவனுடைய கிருபை மற்றும் சுதந்திரம் பற்றிய கருத்தை புரிந்துகொள்வது கடினம் ஆகும். மாறாக, அவர்கள் தங்களுக்காக, அவர்களாகவே வாழ்கிறார்கள்.
2 பேதுரு 2 சாத்தானிசத்திற்குப் பின்னாக செல்பவர்கள் அல்லது தேவனைத் தவிர வேறு எதையும் பின்பற்றுவோருக்கு ஒரு எச்சரிக்கையைக் கொண்டுள்ளது: "இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே” (வசனங்கள். 17-19).
English
சாத்தானிசம் என்றால் என்ன?