கேள்வி
ஒரு கிறிஸ்தவர் சுயமரியாதையை எவ்வாறு பார்க்க வேண்டும்?
பதில்
பலர் சுயமரியாதையை "அவர்களின் திறன்கள், சாதனைகள், அந்தஸ்து, நிதிநிலை ஆதாரங்கள் அல்லது தோற்றத்தின் அடிப்படையில் மதிப்புள்ள உணர்வுகள்" என்றுள்ளவைகளின் அடிப்படையில் வரையறுக்கின்றனர். இந்த வகையான சுயமரியாதை ஒரு நபரை சுயாதீனமாகவும் பெருமையாகவும் உணரவும் சுய வழிபாட்டில் ஈடுபடவும் வழிவகுக்கும், இது தேவனுக்கான நம் விருப்பத்தை மங்கச் செய்கிறது. யாக்கோபு 4:6 நமக்குச் சொல்கிறது, “அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.” நம்முடைய பூமிக்குரிய வளங்களை மட்டுமே நம்பினால், நாம் தவிர்க்க முடியாமல் பெருமையின் அடிப்படையில் மதிப்புமிக்க உணர்வை விட்டு விடுவோம். இயேசு நமக்கு சொன்னார், “அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்’” (லூக்கா 17:10).
கிறிஸ்தவர்களுக்கு சுய மரியாதை குறைவாக இருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு நல்ல மனிதர் என்ற நமது உணர்வு நாம் செய்யும் செயல்களைச் சார்ந்து இருக்கக்கூடாது, மாறாக நாம் கிறிஸ்துவில் யார் என்பதைப் பொறுத்ததாக இருக்கவேண்டும். நாம் அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், அவர் நம்மை கனப்படுத்துவார். சங்கீதம் 16:2 நமக்கு நினைவூட்டுகிறது, “என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல் உன்னைத் தவிர எனக்கு நல்ல காரியங்கள் வேறே எதுவும் இல்லை.” கிறிஸ்தவர்கள் தேவனோடு சரியான உறவைக் கொண்டிருப்பதன் மூலம் சுய மதிப்பையும் மரியாதையையும் அடைகிறார்கள். தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் தேவன் நமக்கு அதிக விலை கொடுத்ததால் நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு வகையில் பார்த்தால், குறைந்த சுயமரியாதை பெருமைக்கு எதிரானது. மற்றொரு அர்த்தத்தில், குறைந்த சுயமரியாதை என்பது பெருமையின் ஒரு வடிவம் ஆகும். சிலருக்கு சுயமரியாதைக் குறைவு, ஏனென்றால் மக்கள் அவர்கள் மீது பரிதாபப்பட வேண்டும், அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். குறைந்த சுயமரியாதை பெருமை போலவே “என்னைப் பார்” என்ற அறிவிப்பவையாக இருக்கலாம். ஒரே இலக்கை அடைய இது வேறு வழியை எடுத்துக்கொள்கிறது, அதாவது சுய உறிஞ்சுதல், சுய-ஆவேசம் மற்றும் சுயநலம். அதற்கு பதிலாக, நாம் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும், சுயத்திற்காக நாம் மரிக்கவேண்டும், நம்மை உருவாக்கித் தக்கவைத்த பெரிய தேவனுக்கு நாம் கொடுக்கும் எந்தவொரு கவனத்தையும் திசை திருப்ப காரணமானவைகளை விலக்க வேண்டும்.
தம்முடைய சொந்த மக்களாக இருக்கும்படி தேவன் நம்மை வாங்கியபோது நமக்கு மதிப்பு கொடுத்தார் என்று வேதாகமம் சொல்கிறது (எபேசியர் 1:14). இதன் காரணமாக, அவர் மட்டுமே மரியாதை மற்றும் புகழுக்கு தகுதியானவர். ஆரோக்கியமான சுயமரியாதை நமக்கு இருக்கும்போது, நம்மை அடிமைப்படுத்தும் பாவத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு நாம் நம்மை மதிப்பிடுவோம். மாறாக, நம்மை விட மற்றவர்களை நாம் சிறந்தவர்களாக நினைத்து மனத்தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் (பிலிப்பியர் 2:3). ரோமர் 12:3 இப்படியாக எச்சரிக்கிறது, "அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்."
English
ஒரு கிறிஸ்தவர் சுயமரியாதையை எவ்வாறு பார்க்க வேண்டும்?