கேள்வி
சேராபீன்கள் என்றால் என்ன? சேராபீன்கள் தேவதூதர்களா?
பதில்
தேவன் ஏசாயாவை தீர்க்கத்தரிசன ஊழியத்திற்கு அழைத்தபோது தேவனுடைய தரிசனத்தை ஆலயத்தில் கண்ட ஏசாயா, தேவதூதர்களாகிய சேராபீன்களையும் காண்கிறார் (ஏசாயா 6:1-7). ஏசாயா 6:2-4 வரையிலுள்ள வசனங்களில் ஏசாயா தான் கண்ட தரிசனத்தில் உண்டாயிருந்த சேராபீன்களையும் குறிப்பிடுகிறார், “சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.” தேவனை சதாகாலத்தும் எப்போதும் வணங்குகிற தேவதூதர்கள் தான் சேராபீன்கள்.
வேதாகமத்தில் சேராபீன்களை குறிப்பாக குறிப்பிடுகிற ஒரே பகுதி ஏசாயா 6-ம் அதிகாரம் மட்டுமே. ஒவ்வொரு சேராபீனுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவைகளில் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடிக்கொள்ளவும், இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடிக்கொள்ளவும், இரண்டு செட்டைகளால் பறக்கவும் செய்தார்கள் (ஏசாயா 6:2). சேராபீன்கள் தேவன் அமர்ந்து கொண்டிருக்கும் அரியணையைச் சுற்றிப் பறந்து, தேவனுடைய மகிமைக்கும் மகத்துவத்திற்கும் விசேஷ கவனம் செலுத்தியபோது அவருடைய புகழ் பாடினார்கள். ஏசாயா தீர்க்கதரிசன ஊழியத்தை ஆரம்பித்தபோதே இவர்கள் வெளிப்படையாக ஏசாயாவின் சுத்திகரிப்பு முகவர்களாக இருந்தார்கள். சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் ஏசாயாவின் வாயைத் தொட்டு: “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்" (ஏசாயா 6:7). பரிசுத்த தேவதூதர்களின் மற்ற வகைகளைப் போலவே, சேராபீன்களும் தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருக்கிறார்கள். கேருபீனைப் போலவே, சேராபீன்களும் தேவனை ஆராதிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
English
சேராபீன்கள் என்றால் என்ன? சேராபீன்கள் தேவதூதர்களா?