கேள்வி
வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகள் எதைக் குறிக்கின்றன?
பதில்
வெளிப்படுத்துதல் 2-3 அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஏழு சபைகள் அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை எழுதிய காலத்தில் உண்டாயிருந்த எழுத்தியல் பூர்வமான ஏழு சபைகள் ஆகும். அந்த காலத்தில் அவை உண்மையில் இருந்த சபைகளாக இருந்தபோதிலும், இன்று சபைகள் மற்றும் விசுவாசிகளுக்கு அவை ஆவிக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கடிதங்களின் முதல் நோக்கம் அந்த காலத்தில் உண்டாயிருந்த சபைகளுடன் நேரடித் தொடர்புகொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். இரண்டாவது நோக்கம் வரலாறு முழுவதும் ஏழு வெவ்வேறு நபர்கள் / சபைகளை வெளிப்படுத்தி தேவனுடைய சத்தியத்தை அவர்களுக்கு அறிவுறுத்துவதாகும்.
சபை வரலாற்றில் ஏழு வெவ்வேறு காலங்களை முன்னறிவிக்க ஏழு சபைகளைப் பயன்படுத்துவது சாத்தியமான மூன்றாவது நோக்கம் ஆகும். இந்த பார்வையில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஏழு சபைகள் ஒவ்வொன்றும் அதன் வரலாற்றில் எந்த காலத்திலும் சபைக்கு பொருந்தக்கூடிய பிரச்சனைகளை விவரிக்கிறது. எனவே, ஏழு காலங்களைக் குறிக்கும் ஏழு சபைகளில் சில உண்மை இருந்தாலும், இந்த விஷயத்தில் அதிகமாக ஊகங்களே உள்ளன. ஏழு சபைகள் மூலம் தேவன் நமக்கு என்ன செய்தி தருகிறார் என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். அந்த ஏழு சபைகளாவன:
(1) எபேசு சபை (வெளிப்படுத்துதல் 2:1-7) - அதன் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்ட சபை (2:4).
(2) சிமிர்னா சபை (வெளிப்படுத்துதல் 2:8-11) – உபத்திரவத்துக்கு உள்ளான சபை (2:10).
(3) பெர்கமு சபை (வெளிப்படுத்துதல் 2:12-17) - மனந்திரும்ப வேண்டிய சபை (2:16).
(4) தியத்தீரா சபை (வெளிப்படுத்துதல் 2:18-29) - ஒரு கள்ளத்தீர்க்கதரிசியைக் கொண்ட சபை (2:20).
(5) சர்தை சபை (வெளிப்படுத்துதல் 3:1-6) – அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்துபோன சபை (3:2).
(6) பிலதெல்பியா சபை (வெளிப்படுத்துதல் 3:7-13) – பொறுமையோடு சகித்த சபை (3:10).
(7) லவோதிக்கேயா (வெளிப்படுத்துதல் 3:14-22) – வெதுவெதுப்பான விசுவாசம் கொண்ட சபை (3:16).
English
வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகள் எதைக் குறிக்கின்றன?