settings icon
share icon
கேள்வி

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

பதில்


இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை):

(1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்”; அதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம். இங்கே, தேவன் உலகின் பாவங்களை தன் மீது வைத்ததால், இயேசு தனது கைவிடப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார் - அதன் காரணமாக, தேவன் இயேசுவிடம் இருந்து "விலகி" போக வேண்டியிருந்தது. பாவத்தின் எடையை இயேசு உணர்ந்துகொண்டதால், அவர் நித்தியம் முழுவதுமாய் ஒரேஒரு முறை மட்டும் தேவனிடமிருந்து ஒரு பிரிவை அனுபவித்தார். இது சங்கீதம் 22:1 இல் உள்ள தீர்க்கதரிசன கூற்றின் நிறைவேறுதலாகும்.

(2) "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக்கா 23:34). இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை முழுமையாக அறிந்திருக்கவில்லை ஏனெனில் அவர்கள் அவரை மேசியாவாக அங்கீகரிக்கவில்லை. தெய்வீக சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையினால் அவர்கள் மன்னிப்புக்கு தகுதியானவர்கள் என்று அர்த்தமல்ல, கிறிஸ்துவின் வேண்டுதல் அவரை பரியாசம் பண்ணும்போதும் கூட அவர் காண்பித்த அவருடைய தெய்வீக கிருபையின் எல்லையற்ற இரக்கத்தின் வெளிப்பாடாகும்.

(3) "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார் (லூக்கா 23:43). இந்த கூற்றில், சிலுவையில் மறித்துக்கொண்டு இருந்த கள்ளர்களில் ஒருவனுக்கு அவன் இயேசுவோடு பரலோகத்தில் இருப்பான் என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார். இது எதற்காக வழங்கப்பட்டது என்றால், அவன் மறித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட, குற்றவாளியாகிய கள்ளன் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவர் யாராக இருக்கிறார் என்பதை அங்கீகரித்தான் (லூக்கா 23:42).

(4) "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார் (லூக்கா 23:46). இங்கே, இயேசு விருப்பத்துடன் தனது ஆத்துமாவை பிதாவின் கைகளில் கொடுத்த செயல், அவர் இறக்கப்போகிறார் என்பதையும், பிதாவாகிய தேவன் அவருடைய பலியை ஏற்றுக்கொண்டார் என்பதையும் குறிப்பிடுகிறது. அவர் "தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்" (எபிரெயர் 9:14).

(5) அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: “ஸ்திரீயே, அதோ, உன் மகன்” என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: “அதோ, உன் தாய்” என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் (யோவான் 19:26-27). இந்த வசனத்தில் இயேசு, எப்போதும் இரக்கமுள்ள மனதுருகும் மகனாக, அவருடைய பூமிக்குரிய தாய் அவருடைய மரணத்திற்குப் பிறகு கவனித்துக்கொள்ளப்படுவதை உறுதிசெய்கிறார்.

(6) "தாகமாயிருக்கிறேன்” என்றார் (யோவான் 19:28). சங்கீதம் 69:21 -ல் இருந்து மேசியாவின் தீர்க்கதரிசனத்தை இயேசு இங்கே நிறைவேற்றுகிறார்: "என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்." அவர் தாகமாக இருப்பதாகக் கூறி, அவர் ரோம போர்ச்சேவகர்கள் அவருக்கு கசப்புக் கலந்த காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள், இதுவும் சிலுவையில் அறையப்படுபவர்களுக்கு கொடுப்பது வழக்கம், இதனால் இந்த தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றினார்.

(7) "முடிந்தது!" (யோவான் 19:30). இயேசுவின் இந்த கடைசி வார்த்தைகள், அவருடைய பாடுகள் முடிந்துவிட்டது மற்றும் அவருடைய பிதா அவருக்கு ஒப்புவித்த முழு வேலையும், அதாவது நற்செய்தியைப் பிரசங்கிப்பது, அற்புதங்களைச் செய்வது மற்றும் அவருடைய ஜனங்களுக்கு நித்திய இரட்சிப்பைப் அளிப்பது, என யாவும் முடிந்தது, நிறைவேற்றப்பட்டது, நிறைவேறியது. பாவத்தின் கடன் செலுத்தப்பட்டது.

English



முகப்பு பக்கம்

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries