settings icon
share icon
கேள்வி

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏழு முத்திரைகளும் ஏழு எக்காளங்களும் யாவை?

பதில்


ஏழு முத்திரைகள் (வெளி. 6:1-17; 8:1-5), ஏழு எக்காளங்கள் (வெளி. 8:6-21; 11:15-19), மற்றும் ஏழு கலசங்கள் (வெளி. 16:1-21) இவைகள் மூன்றும் தேவனிடமிருந்து இறுதியில் உண்டாகும் முறையே தொடர்ந்து வருகிற நியாயத்தீர்ப்புகள் ஆகும். நியாயத்தீர்ப்புகள் கடைசிக் காலங்களில் மோசமானதாகவும் இறுதி நேரத்தில் இன்னும் முன்னேற்றமாக பேரழிவுடனும் வருகின்றவைகளாக இருக்கின்றன. ஏழு முத்திரைகளும், எக்காளங்களும், கலசங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. ஏழாவது முத்திரை ஏழு எக்காளங்களை (வெளிப்படுத்துதல் 8:1-5) அறிமுகப்படுத்துகிறது, ஏழாவது எக்காளம் ஏழு கலசங்களை அறிமுகப்படுத்துகிறது (வெளி. 11:15-19; 15:1-8).

ஏழு முத்திரைகளில் முதல் நான்கு முத்திரைகள் நான்கு குதிரைவீரர்களின் வெளிப்படுத்தலாகும். முதல் முத்திரை எதிர்க்கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகிறது (வெளி. 6:1-2). இரண்டாவது முத்திரை பெரும் யுத்தத்தை உண்டாக்குகிறதாக இருக்கிறது (வெளி. 6:3-4). ஏழு முத்திரைகளில் மூன்றாவது முத்திரை பஞ்சத்தை ஏற்படுத்துகிறதாக இருந்தது (வெளி. 6:5-6). நான்காவது முத்திரை வாதை, மேலும் அதிக பஞ்சம், மற்றும் மேலும் அதிக யுத்தத்தை கொண்டுவருகிறதாக இருந்தது (வெளி. 6:7-8).

கடைசி நாட்களில் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்ததன் நிமித்தம் இரத்தசாட்சிகளாக மரித்தவர்களைக் குறித்து ஐந்தாவது முத்திரை நமக்கு சொல்கிறது (வெளி. 6:9-11). தேவன் நியாயத்திற்காக அவர்களுடைய அழுகைகளைக் கேட்டு அவர்களை அவருடைய நேரத்தில் விடுவிப்பதை ஆறாவது முத்திரை வடிவத்தில் மற்றும் பிறகு வருகிற எக்காளம் கலசம் சமயத்தில் சம்பவிக்கிறதாக இருக்கிறது. ஏழு முத்திரைகளில் ஆறாவது முத்திரை உடைந்தபொழுது, பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பாரிய கொந்தளிப்பு மற்றும் கொடூரமான பேரழிவை ஏற்படுத்தும் - அசாதாரணமான வானியல் நிகழ்வுகள் உண்டாகும் (வெளிப்படுத்துதல் 6:12-14). அதில் உயிர் பிழைப்பவர்கள், “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்” (வெளி. 6:16-17).

ஏழு எக்காளங்கள் வெளி. 8:6-21-ல் விவரிக்கப்பட்டுள்ளன. ஏழு எக்காளங்கள் ஏழாவது முத்திரையின் "பொருளடக்கங்கள்" ஆகும் (வெளி. 8:1-5). முதல் எக்காளம் கல்மழையையும் அக்கினியையும் கொண்டுவந்து உலகில் தாவரங்களின் பெரும்பகுதியை அழித்து நாசமாக்கின (வெளி. 8:7). இரண்டாம் எக்காளம் கடல்மீது தாக்கியது மற்றும் கடல் வாழ் உலகின் பெரும்பகுதியை மரிதுப்போகும்படி செய்தது (வெளி. 8:8-9). மூன்றாம் எக்காளம் இரண்டாம் எக்காலத்திற்கு ஒத்திருக்கிறது, அது உலகின் சமுத்திரங்களுக்குப் பதிலாக ஏரிகள் மற்றும் ஆறுகளைப் பாதிக்கிறது (வெளிப்படுத்துதல் 8:10-11).

ஏழு எக்காளங்களின் நான்காவது எக்காளம், சூரியன் மற்றும் சந்திரன் அந்தகாரமாகும்படிச் செய்தது (வெளிப்படுத்துதல் 8:12). ஐந்தாவது எக்காளம் மனிதகுலத்தைத் தாக்கி சித்திரவதை செய்யும் "பேய்களின் வெட்டுகிளிகள்" வரும்படி செய்தது (வெளிப்படுத்துதல் 9:1-11). ஆறாவது எக்காளம் மனிதகுலத்தின் மூன்றில் ஒரு பகுதியை கொன்றுபோடுவதற்கு பேய்களின் இராணுவத்தை புறப்படும்படி செய்தது (வெளி. 9:12-21). ஏழாம் எக்காளம் ஏழு தேவதூதர்களை கதேவனுடைய கோபத்தின் ஏழு கலசங்களோடு வரும்படி செய்தது (வெளி. 11:15-19; 15:1-8).

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் 16:1-21-ல் ஏழு கலசங்களின் நியாயத்தீர்ப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஏழு கலசங்களின் நியாயத்தீர்ப்புகள் ஏழாம் எக்காளம் மூலம் அழைக்கப்படுகின்றன. முதல் கலசம் மனிதகுலத்தின்மேல் வலிமிகு புண்கள் ஏற்படுத்தியது (வெளி. 16:2). கடலில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மரணமடையும்படி இரண்டாம் கலசம் விளைவித்தது (வெளி. 16:3). மூன்றாவது கலசம் ஊற்றப்பட்டபோது நதிகள் இரத்தமாக மாறினது (வெளி. 16:4-7). ஏழு கலசங்களில் நான்காவது கலசம் ஊற்றப்பட்டபோது, பகுதியின் சூரியன் வெப்பம் தீவிரமடைந்து பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது (வெளி. 16:8-9). ஐந்தாவது கலசம் பெரிய காரிருளை ஏற்படுத்தியது, முதல் கலசத்தின் போதிருந்த புண்கள் இன்னும் தீவிரமடைந்தது (வெளி. 16:10-11). ஆறாவது கலசம் ஐபிராத்து நதியை வறண்டுபோகப்பண்ணி, எதிர்க்கிறிஸ்துவும் அவனது படையினரும் அர்மகெதோன் யுத்தத்திற்காக கூடிவருவதற்கு கூடிவருகிறார்கள் (வெளி. 16:12-14). ஏழாவது கலசம் ஊற்றப்பட்டபோது, பேரழிவு தரும் பூகம்பத்தை விளைவித்தது, அதிலுள்ள பெரிய கல்மழைகள் உண்டாயின (வெளி. 16:15-21).

வெளி. 16:5-7 தேவனைப்பற்றி அறிவிக்கிறது: “அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன். பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.”

English



முகப்பு பக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏழு முத்திரைகளும் ஏழு எக்காளங்களும் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries