settings icon
share icon
கேள்வி

ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் பாலுறவின்போது என்ன செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்/ அனுமதிக்கப்படவில்லை?

பதில்


"விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (எபிரெயர் 13:4) என்று வேதாகமம் கூறுகிறது. புருஷர்களும் மனைவிகளும் பாலுறவின்போது எப்படியெல்லாம் செய்யலாம் அல்லது எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று வேதாகமம் திட்டமாக எதையும் கூறவில்லை. “உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்” (1 கொரிந்தியர் 7:5a) என்று புருஷர்களும் மனைவிகளும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வசனம் ஒருவேளை திருமணத்தில் பாலியல் உறவுகளுக்கு பிரமாணத்தை அளிக்கிறது. என்ன செய்தாலும், அதில் பரஸ்பர ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். யாரும் அவருக்கு அல்லது அவளுக்கு தவறு என்று தோன்றுகிற அல்லது சங்கடமாக தோன்றுகிற காரியங்களை செய்ய உற்சாகப்படுத்தவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ கூடாது. கணவனும் மனைவியும் இருவருமாக மனசு ஒருமித்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்று கருதினால் (எ.கா., வாய்வழிப் பாலுறவு, வேறுபட்ட நிலைகள், செக்ஸ் பொம்மைகள், முதலியன), அதற்கு வேதாகமம் அவர்களுக்கு அப்படிக்கூடாது என்று கூற எந்த காரணமும் கொடுக்க முடியாது.

திருமணமான தம்பதியருக்கு பாலியல் ரீதியாக ஒரு சில விஷயங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. "இடமாற்றுதல்" அல்லது "கூடுதல் கொண்டு வரப்படுதல்” (மூன்று, நான்கு, முதலியன) அப்பட்டமான விபச்சாரம் பாவம் ஆகும் (கலாத்தியர் 5:19; எபேசியர் 5:3; கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:3). உங்கள் மனைவி அனுமதித்தாலும், ஒத்துக்கொண்டாலும் அல்லது அதில் பங்குபெற்றாலும், சோரம்போகுதல் என்பது பாவம் ஆகும். ஆபாசப்படங்களை பார்த்தல் என்பது “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும்” முறையீடு செய்கிறது (1 யோவான் 2:16) மற்றும் அது தேவனால் கடுமையாக கண்டனம் செய்யப்படுகிறது. கணவனும் மனைவியும் ஒருபோதும் பாலியல் உறவுக்குள் ஆபாசப்படங்களை கொண்டுவரக்கூடாது. இந்த இரண்டு விஷயங்களையல்லாமல், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பரஸ்பர சம்மதத்துடன் எல்லா நிலைகளிலும் வைத்திருப்பதை அனுமதிக்கவே செய்கிறது.

English



முகப்பு பக்கம்

ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் பாலுறவின்போது என்ன செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்/ அனுமதிக்கப்படவில்லை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries