settings icon
share icon
கேள்வி

பாவியின் ஜெபம் என்றால் என்ன?

பதில்


தான் ஒரு பாவி என்றும் தனக்கு ஒரு இரட்சகர் தேவை என்றும் ஒரு நபர் அறிந்துகொள்ளும்போது, அவர் தேவனிடத்தில் ஏறெடுக்கும் ஜெபம் தான் பாவியின் ஜெபம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. பாவியின் ஜெபத்தை ஒருவர் வெறுமனே ஜெபிப்பதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒரு மெய்யான பாவியின் ஜெபம் என்பது அதை ஏறெடுக்கும் நபர் எந்த அளவிற்கு தன்னுடைய பாவதன்மையையும் இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்திருக்கிறார் மற்றும் விசுவாசிக்கிறார் என்பதில் அடங்கியிருக்கிறது.

ஒரு பாவியின் ஜெபத்தில் இருக்கிற முதலாவது அம்சம் என்னவென்றால், நாமெல்லாரும் பாவிகளாக இருக்கிறோம் என்பதைப் பற்றியதான புரிந்து கொள்ளுதல் ஆகும். "அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்று ரோமர் 3:10 எடுத்துரைக்கிறது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்று வேதாகமம் மிகத்தெளிவாக கூறுகிறது. தேவனிடத்திலிருந்து இரக்கம் மற்றும் மன்னிப்பின் தேவையை நாடி நிற்கிற பாவிகளாக நாம் இருக்கிறோம் (தீத்து 3:5-7). நம்முடைய பாவத்தின் நிமித்தம் நாம் நித்திய தண்டனையை அடைய தகுதியுள்ளவர்களாக இருக்கிறோம் (மத்தேயு 25:46). பாவியின் ஜெபம் என்பது தேவனுடைய தண்டனைக்கு பதிலாக அவருடைய கிருபைக்கு வேண்டியுள்ள மனுவாகும். கோபத்திற்கு பதிலாக இரக்கம் காண்பிக்க வேண்டியுள்ள வேண்டுகோளாகும்.

ஒரு பாவியின் ஜெபத்தில் காணப்படுகிற இரண்டாவது முக்கிய அம்சம் என்னவென்றால், நம்முடைய இழந்துபோன மற்றும் பாவ நிலையில் இருந்து நாம் மீண்டுவர தேவன் என்ன காரியம் செய்திருக்கிறார் என்பதைப்பற்றிய அறிவாகும். தேவன், இயேசு கிறிஸ்து என்னும் ஆள்தன்மையில் மாம்சத்தை தரித்து ஒரு மனிதனைப் போல இப்பூமியில் வெளிப்பட்டார் (யோவான் 1:1,14). தேவனைக்குரித்த சத்தியத்தை போதித்ததோடு மட்டுமல்லாமல் பரிபூரண நிலையில் நீதியோடும் பவமில்லாமலும் இயேசு இப்பூமியில் வாழ்ந்தார் (யோவான் 8:46; 2 கொரிந்தியர் 5:21). பிறகு நாம் நம்முடைய பாவங்களுக்கு அடைய வேண்டிய தண்டனையை இயேசு தம்மேல் எடுத்துக்கொண்டு நம்முடைய ஸ்தானத்தில் சிலுவையில் மரித்தார் (ரோமர் 5:8). இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து பாவம், மரணம் மற்றும் நரகத்தின் மேலுள்ள தமது வெற்றியை நிரூபித்தார் (கோலோசெயர் 2:15; 1 கொரிந்தியர் 15ஆம் அதிகாரம்). இவை எல்லாவற்றின் நிமித்தம், நாம் இயேசு கிறிஸ்துவின் மேல் நமது விசுவாசத்தை வைத்து அவரை முழுமையாக நம்பினால், நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு பரலோகத்தில் நித்திய வீட்டில் வசிக்கும் வாக்குதத்தத்தையும் அவரிடத்திலிருந்து பெறுவோம். நாம் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், நம்முடைய ஸ்தானத்தில் நமக்காக இயேசு மரித்து பிறகு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்பதை விசுவாசிக்கவேண்டும் (ரோமர் 10:9-10). கிருபையினாலே மட்டும், விசுவாசத்தைக் கொண்டு மட்டும், இயேசு கிறிஸ்துவில் மட்டும் நாம் இரட்சிக்கப்பட முடியும். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" என்று எபேசியர் 2:8 கூறுகிறது.

பாவியின் ஜெபத்தை ஏறெடுப்பது என்பது இயேசு கிறிஸ்துவின்மேல் முழுமையாக சார்ந்து அவரையே தன்னம்பிக்கையாக கொண்டு அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டதை தேவனுக்கு முன்பாக எடுத்துறைப்பதாகும். இதிலே இரட்சிப்பை கொண்டு வருகிற "மந்திர வார்த்தைகள்" ஒன்றுமில்லை. இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதலில் வைக்கிற விசுவாசம் மட்டுமே ஆகும். இதுவே நம்மை இரட்சிக்கிறதாய் இருக்கிறது. நீங்கள் ஒரு பாவி என்றும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உங்களுக்கு இரட்சிப்பு வேண்டும் என்றும் என்பதை அறிந்தவர்களானால், தேவனிடத்தில் ஏறெடுக்கப்படவேண்டிய ஒரு பாவியின் ஜெபம் இதோ, இதை நீங்கள் தேவனிடத்தில் சொல்லுங்கள்: “ஆண்டவரே நான் ஒரு பாவி என்பதை அறிந்திருக்கிறேன். நான் செய்த பாவத்தின் நிமித்தம் பாவத்திற்கான தண்டனையை நான் அடைய வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனபோதிலும், இயேசு கிறிஸ்துவை எனது இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரில் பரிபூரணமாய் விசுவாசிக்கிறேன். அவருடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் எனக்கு மன்னிப்பை கொண்டுவந்தது என்று முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவை எனது சொந்த கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு அவரை மட்டும் அவரில் மட்டுமே எனது முழு நம்பிக்கையையும் வைக்கிறேன். என்னை மன்னித்து இரட்சித்ததற்காக உமக்கு நன்றி ஆண்டவரே! ஆமென்!”

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

பாவியின் ஜெபம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries