settings icon
share icon
கேள்வி

தேவனுக்கு எல்லா பாவங்களும் சமமாக இருக்கின்றனவா?

பதில்


மத்தேயு 5:21-28-ல் மனதில் இச்சை கொள்வது வேசித்தனத்திற்க்கும், கோபம் கொள்வது கொலைக்கும் ஒப்பானது என்று இயேசு கூறியுள்ளார். ஆனால், எல்லா பாவங்களும் ஒரே சமநிலையில் தான் இருக்கின்றது என்பதல்ல இதின் அர்த்தம். பாவத்தின் கிரியை செய்யாமலிருந்தும், பாவம் செய்யவேண்டும் என்று மனதில் நினைக்கின்றதே பாவமாகும் என்று இயேசு பரிசேயருக்கு விளங்கப்பண்ணும் பொருட்டு இதை சொன்னார். பாவம் செய்யும்படி நினைப்பது பாவமல்ல, பாவம் செய்தால் தான் பாவம் என்று இயேசுவின் நாட்களில் இருந்த மத தலைவர்கள் போதித்துவந்தார்கள். ஆனால் தேவன் மனிதனின் செய்யல்களை மட்டுமல்ல நினைவுகளை கூட நியாயம் தீர்க்கிறார் என்று அவர்கள் உணரும்படி இயேசு போதித்தார். நமது மனதில் இச்சைகள் இருப்பதின் விளைவாகத்தான் நமது கிரியைகள் இருக்கும் என்று இயேசு கூறினார் (மத்தேயு 12:34).

இச்சையும் வேசித்தனமும் பாவங்கள் தான் என்று இயேசு கூறினபோதிலும், அவைகள் இரண்டும் சமமானது என்பதல்ல அதின் அர்த்தம். ஒரு நபரை வெறுப்பதை விட கொலை செய்வது பயங்கரமான பாவமாகும், ஆனால் தேவனுடைய பார்வையில் அவைகள் இரண்டும் பாவங்கள் தான். பாவத்திற்கு அளவுகள் உள்ளன. சில பாவங்கள் மற்ற பாவங்களை விட மோசமானவைகள். அதே நேரத்தில், இரட்சிப்பு மற்றும் நித்திய தண்டனை என்று வரும்போது, எல்லா பாவங்களும் ஒன்றுபோலத் தான் கருதப்படுகிறது. எல்லா பாவங்களும் நித்திய ஆக்கினை தீர்ப்புக்கு நேரே வழிநடத்தும் (ரோமர் 6:23). எல்லா பாவங்களும், அது எவ்வளவு சிறிய பாவமாயிருந்தாலும், அவைகள் எல்லையில்லா நித்திய தேவனுக்கு விரோதமான பாவங்கள் தான், அதினால் அதன் தண்டனையும் அளவிடப்படமுடியாத, நித்தியமானதாகத்தான் இருக்கும். அதேவேளையில், தேவன் மன்னிக்கமுடியாத பெரிய “பாவம்” என்று ஒன்றில்லை. பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தும்படிக்கு இயேசு மரித்தார் (1 யோவான் 2:2). நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் இயேசு மரித்தார் (2 கொரிந்தியர் 5:21). தேவனுக்கு முன்பாக எல்லா பாவங்களும் ஒன்றுபோலத்தானா? ஆம் மற்றும் இல்லை. கடுமையைப் பொறுத்தமட்டில்? இல்லை. தண்டனையைப் பொறுத்தமட்டில்? ஆம். மன்னிப்பைப் பொறுத்தமட்டில்? ஆம்.

English



முகப்பு பக்கம்

தேவனுக்கு எல்லா பாவங்களும் சமமாக இருக்கின்றனவா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries