settings icon
share icon
கேள்வி

மனிதனுடைய ஆவி மற்றும் ஆத்துமா இடையே வித்தியாசம் என்ன?

பதில்


வேதம் மனிதனை குறிப்பிடும்போது மனிதனுக்கு ஆவி மற்றும் ஆத்துமா என்ற இரண்டு தொட மற்றும் பார்க்கமுடியாத அம்சங்கள் உண்டு என்று சொல்லுகிறது. இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை பகுத்தறிய முயற்ச்சி செய்வது சற்று கடினமானது. "ஆவி" என்ற வார்த்தை மனிதனுடைய தொட மற்றும் பார்க்கமுடியாத அம்சத்தை மட்டும் குறிப்பிடுகிறது. மனிதர்களுக்கு ஆவி அம்சங்கள் உண்டு, ஆனால் மனிதர்கள் ஆவிகள் அல்ல. ஆனபோதிலும், வேதாகமம், விசுவாசிகளை ஆவியில் உயிர் உள்ளவர்கள் என்றும்(1 கொரிந்தியர் 2:11; எபிரேயர் 4:12; யாக்கோபு 2:26), அவிசுவாசிகளை ஆவியில் செத்தவர்கள் என்றும் சொல்லுகிறது (எபேசியர் 2:1-5; கொலோசியர் 2:13). பவுலின் நிருபங்களில், ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஆவிக்குறிய காரியம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது (1 கொரிந்தியர் 2:14; 3:1; எபேசியர் 1:3; 5:19; 1:9; கொலோசியர் 3:16). மனிதனுக்குள்ளாக கொடுக்கப்பட்ட ஆவி தேவனோடு நெருங்கி உறவாடுவதற்கு செயலாற்றுகிறது. எப்பொழுதெல்லாம், வேதாகமத்தில் ஆவி என்று பயன்படுத்த படுகிறதோ, அது ஆவியான தேவனிடம் மனிதனை இணைக்கும் தொடவும் மற்றும் பார்க்கமுடியாத அம்சத்தை குறிப்படுகிறது (யோவான் 4:24).

ஆத்துமா என்ற வார்த்தை மனிதனின் சரீரம் மற்றும் ஆவியிலான அம்சங்களை குறிப்பிடுகிறது. மனிதர்களுக்கு ஆவி உண்டு, ஆனால் மனிதர்கள் ஆத்துமாவாக இருக்கிறார்கள். அடிபடையாக, "ஆத்துமா" என்ற வார்த்தைக்கு அர்த்தம் "ஜீவன்". அயினும், இந்த அர்த்தர்ததுக்கு அப்பால் வேதாகமத்தில் ஆத்துமாவை குறித்து பல வகையில் குறிக்கிறது.

அதில் ஒன்று பாவம் செய்வதற்கு மனிதனில் உள்ள ஆர்வம் (லூக்கா 12:26). மனிதர்கள் இயல்பாக தீயவர்கள், மற்றும் நமது ஆத்துமா அதனால் கரைபடுத்தப்பட்டுள்ளது. மரணம் நேரிடும்போது ஆத்துமாவின் வாழ்வின் நியமம் நீக்கப்படுகிறது (ஆதியாகமம் 35:18; எரேமியா 15:2). ஆத்துமா, ஆவியை போல, ஆவிக்குரிய மற்றும் உணர்வின் அனுபவங்களின் மைய்யமாக இருக்கின்றது. "ஆத்துமா" என்ற வார்த்தை பயன்படுத்தும் போது, அது முழு மனிதனை, உயிருள்ள அல்லது மரித்தபின், குறிப்பிடுகிறது (யோபு 30:25; சங்கீதம் 43:5; எரேமியா 13:17). ஆவி மற்றும் ஆத்துமா இணைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் அவை பரிந்திருக்கதக்கது (எபிரேயர் 4:12). ஆத்துமா மனிதனின் முக்கிய பங்காய் இருக்கிறது. நாம் தான் அது. ஆவி தேவனிடம் மனிதனை இணைக்கும் ஆவியிலான அம்சமாய் இருக்கிறது.

English



முகப்பு பக்கம்

மனிதனுடைய ஆவி மற்றும் ஆத்துமா இடையே வித்தியாசம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries