settings icon
share icon
கேள்வி

தேவனுடைய ஏகாதிபத்தியமும் மனிதனுடைய சுயசித்தமும் எப்படி இரட்சிப்பில் ஒன்றாக செயல்படுகின்றது?

பதில்


தேவனுடைய ஏகாதிபத்தியத்திற்கும் மனிதனுடைய சுயசித்தம் மற்றும் உத்திரவாதத்திற்கும் இடையேயுள்ள உறவை முழுமையாக நாம் புரிந்துக் கொள்வது என்பது முடியாத காரியமாகும். தேவன் ஒருவர் மட்டுமே அவைகள் எப்படி ஒன்றாக இரட்சிப்பின் திட்டத்தில் கிரியை செய்கிறது என்று அறிவார். மற்ற எந்த உபதேசத்தைக் காட்டிலும் இதில் நாம் தேவனுடைய சுபாவத்தையும் அவரோடு இருக்கிற உறவையும் புரிந்து கொள்ள இயலாது என்று ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். இரண்டு பக்கத்திலும் நாம் வெகுதூரம் புரிந்துக்கொள்ள முயலுவது ஒரு இரட்சிப்பைக் குறித்து தவறான புரிதலுக்குள் நம்மை வழி நடத்திவிடும்.

தேவனுக்கு யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று தெரியும் என்று வேதவாக்கியம் சொல்லுகின்றது (ரோமர் 8:29 ; 1 பேதுரு 1:2) எபேசியர் 1:4ல் நம்மை தேவன் ‘‘உலகத்தோற்றத்திற்கு முன்னமே’’ முன்குறித்தார் என்று பார்க்கிறோம். வேதாகமம் விசுவாசிகளை ‘‘தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள்’’ என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றது (ரோமர் 8:33; 11:5; எபேசியர் 1:11; கொலோசேயர் 3:12; 1 தெசலோனிக்கியர் 1:4; 1 பேதுரு 1:2; 2:9; மத்தேயு 24:22; மாற்கு 13:20, 27; ரோமர் 11:7; 1 தீமோத்தேயு 5:21; 2 தீமோத்தேயு 2:10; தீத்து 1:10; 1 பேதுரு 1:1). விசுவாசிகள் இரட்சிப்புக்கென்று முன் குறிக்கப்பட்டும் தெரிந்துக்கொள்ளப்பட்டும் இருக்கிறார்கள் என்று தெளிவாகிறது (ரோமர் 9:11; 11:18; 2பேதுரு 1:10).

வேதாகமம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வது நம்முடைய பொறுப்பு என்றும் நாம் அவரை விசுவசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம் என்றும் கூறுகின்றது (யோவான் 3:16; ரோமர் 10:9-10). தேவனுக்கு யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று தெரியும். அவர் யார் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிறார், நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால் கிறிஸ்துவை தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்று உண்மைகள் எப்படி வேலை செய்கின்றது என்று நம்முடைய அறிவைக்கொண்டு நாம் புரிந்துக் கொள்ள முடியாது. (ரோமர் 11:33-31) சுவிசேஷத்தை முழு உலகத்திற்கு கொண்டு செல்வது நம்முடைய பொறுப்பு. (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8) முன்குறிக்கப்படுதல், தேர்ந்தெடுக்கப்படுதல் மற்றும் முன்னறிந்து கொள்ளுதல் போன்றவற்றை தேவனிடம் விட்டு விட்டு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்வதில் மட்டும் கீழ்படிதலுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

தேவனுடைய ஏகாதிபத்தியமும் மனிதனுடைய சுயசித்தமும் எப்படி இரட்சிப்பில் ஒன்றாக செயல்படுகின்றது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries