கேள்வி
என்னுடைய ஆவிக்குரிய வரம் என்னவென்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?
பதில்
நமக்கு என்னனென்ன ஆவிக்குரிய வரங்கள் இருக்கின்றன என்று அறிந்துக்கொள்ள எந்த ஒரு குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது பரிசோதனையோ இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவர் நிர்ணயித்தபடி வரங்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுக்கின்றார் (1 கொரிந்தியர் 12:7-11). கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்றால் அவர்களுடைய ஆவிக்குரிய வரத்திலேயே கட்டப்பட்டு தேவனுக்கும் அந்த வரத்தின் எல்லையிலேயே ஊழியம் செய்ய நினைக்கிறார்கள். ஆவிக்குரிய வரம் அப்படி கிரியை செய்தில்லை. தேவன் நம்மை எல்லாக் காரியத்திலேயும் கீழ்படிதல் உள்ளவர்களாய் அவரை சேவிக்கவே நம்மை அழைத்திருக்கிறார். அவர் நம்மை எந்த காரியத்தை செய்ய அழைத்திருக்கிறாரோ அதற்குத் தேவையான வரத்தையோ அல்லது வரங்களையோ கொடுத்து நம்மை அதற்கு தகுதிப்படுத்துகிறார்.
ஆவிக்குரிய வரத்தை நாம் அநேக வழிகளில் நாம் அடையாளங்கண்டு கொள்ள முடியும். ஆவிக்குரிய வரங்களை கண்டறியும் தேர்வு உபாயங்கள் நாம் என்ன வரத்தை உடையவர்கள் என்று புரிந்துக்கொள்ள உதவும். ஆனால் அதையே நாம் முழுமையாக நம்பி சார்ந்துவிடக்கூடாது. மற்றவர்களிடமிருந்து பெறும் உறுதியாக்கம் கூட நம்முடைய ஆவிக்குரிய வரத்தை அறிந்துகொள்ள உதவும். நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிற விதத்தைப் பார்க்கும் மற்றவர்கள் நம்மிடத்தில் இருக்கும் ஆவிக்குரிய வரத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள். நாமோ அதைக்குறித்து அஜாக்கிரதையாக இருந்திருப்போம். ஜெபமும் இன்றியமையாததுதான் நாம் எப்படிப்பட்ட வரத்தை உடையவர்களாயிருக்கிறோம் என்று மிகத்துல்லியமாக ஒரே ஒரு நபருக்குத்தான் தெரியும். அவர் அந்த வரத்தை தருபவரான பரிசுத்த ஆவியானவர்தான். தேவனிடத்தில் நாம் எப்படிப்பட்ட வரமுடையவர்கள் என்று கேட்டறியும்போது அந்த வரங்களை இன்னும் துல்லியமாக அவருடைய நாமத்தின் மகிமைக்காக நாம் பயன்படுத்தலாம்.
ஆம், தேவன் சிலரை போதகர்களாக அழைக்கிறார். அவர்களுக்கு போதிக்கிற வரத்தை தருகிறார். தேவன் சிலரை ஊழியக்காரர்களாக அழைக்கிறார், அவர்களுக்கு ஊழியம்/உதவிச் செய்கிற வரத்தைத் தந்து ஆசீர்வதிக்கிறார். ஆகிலும் வரத்தைக் குறித்து நாம் குறிப்பாக எனக்கு என்ன வரம்/வரங்கள் இருக்கிறது என்று அறிகிறது, நான் மற்ற நிலைகளில் அதாவது வரத்தின் வெளியிலுள்ள எல்லைகளில் தேவனை சேவிக்காமலிருக்க ஒரு சாக்குபோக்கு கிடையாது. நமக்கு என்ன ஆவிக்குரிய வரத்தை தேவன் கொடுத்திருக்கிறார் என்று அறிவது நமக்கு நல்லதுதான். ஆனால் அதையே பார்த்து கொண்டிருந்துவிட்டு தேவனுக்கு ஊழியம் செய்ய கிடைக்கிற மற்ற வாய்ப்புகளை நாம் இழந்துவிடக்கூடாது. ஆம், நாம் தேவனால் பயன்படுத்தப்பட அர்ப்ணித்திருந்தோமானால் அவர் நமக்கு தேவையான ஆவிக்குரிய வரங்களைக் கொடுத்து நம்மை தகுதிப்படுத்தி விடுகின்றார்.
English
என்னுடைய ஆவிக்குரிய வரம் என்னவென்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?