கேள்வி
ஆவிக்குரிய யுத்தத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
ஆவிக்குரிய யுத்தம் என்று சொல்லும்போது, அதில் இரண்டு முக்கியமான தவறுகள் இருக்கின்றன — சிலர் அதை அதிகமாய் அதீத நிலையில் வலியுறுத்துகிறார்கள், மற்ற சிலர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அசட்டைப் பண்ணுகின்றார்கள். சிலர் எல்லா பாவமும், சண்டையும், பிரச்சணையும் பிசாசினால் தான் வருகிறது என்றெண்ணி, பிசாசை துரத்த வேண்டும் என்கிறார்கள். வேறு சிலர் ஆவிக்குரிய உலகத்தை குறித்து கொஞ்சம் கூட நினைப்பதில்லை, அதுமட்டுமன்றி வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு என்று வேதாகமம் சொல்லும் உன்மையை அசட்டை பண்ணுகின்றார்கள். வெற்றிகரமான ஆவிக்குரிய யுத்தத்திற்கு திறவுகோல் என்னவென்றால் அதைப்பற்றிய வேதாகமத்தின் சமநிலையை கண்டுகொள்ளுவதுதான். சில நேரங்களில் இயேசு பிசாசுகளை தூரத்தினார், மற்ற நேரங்களில் பிசாசை பற்றி ஒன்றும் சொல்லாமல் ஜனங்களை மட்டும் சுகமாக்கினார். அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்போது, அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பாவத்திற்கு விரோதமாக போர் செய்யவேண்டும் என்றும் (ரோமர் 6) பிசாசினுடைய தந்திரங்களை எதிர்த்து நிற்கவேண்டும் என்றும் எச்சரிக்கிறார் (எபேசியர் 6:10-18).
எபேசியர் 6:10-12 சொல்லுகிறது, “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” இந்த வேதப்பகுதி சில முக்கியமான கருத்துகளைப் போதிக்கிறது: கர்த்தருடைய வல்லமையில் மாத்திரம் தான் நாம் பெலங்கொண்டு நிற்கமுடியும், தேவனுடைய சர்வாயுதவர்க்கம் நம்மை பாதுகாக்கிறது, மற்றும் நமது யுத்தம் வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு என்று சொல்லுகிறது.
தேவன் நமக்கு தந்த சர்வாயுதவர்க்கத்தின் விளக்கத்தை எபேசியர் 6:13-18-ல் பார்க்கிறோம். நாம் சத்தியம் என்ற இடைகட்ச்சையை கட்டினவர்களாக, நீதியின் மார்க்கவசம் தரித்தவர்களாக, ஆயத்தமென்னும் பாதரட்சயை தொடுத்தவர்களாக, விசுவாசத்தின் கேடயம் பிடித்தவர்களாக, இரட்சிப்பென்னும் தலை சீறாவை அணிந்தவர்களாக, ஆவின் வசனமாகிய பட்டயத்தை பிடித்தவர்களாக, மற்றும் ஆவியில் ஜெபிக்கிறவர்களாக உறுதியாக நிற்க வேண்டும். இந்த சர்வாயுதவர்க்கம் ஆவிக்குரிய யுத்தத்தில் எதை குறிக்கிறது? சாத்தானின் பொய்களுக்கு விரோதமாய் நாம் சத்தியத்தை பேச வேண்டும். கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நாம் நீதியாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்கிற சத்தியத்தில் இளைப்பாற வேண்டும். எத்தனை எதிர்ப்புகளை நாம் சந்தித்தாலும், சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும். எவ்வளவு பயங்கரமாக நாம் தாக்கப்பட்டாலும், விசுவாசத்தில் தடுமாற கூடாது. நமது முக்கியமான பாதுகாப்பு இரட்சிப்பின் நிச்சயமாகும். இந்த நிச்சயத்தை எந்த சக்தியாலும் எடுத்து போட முடியாது. எதிர்த்து போராட நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தேவனுடைய வார்த்தையாகும், நமது சொந்த கருத்து மற்றும் உணர்வுகள் அல்ல. நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை மற்றும் சித்தத்தின்படியே ஜெபிக்கவேண்டும்.
ஆவிக்குரிய யுத்தத்தில் சோதனையை மேற்கொள்ளுவதற்கு நமக்கு முடிவான மாதிரி இயேசுவே. அவர் வனாந்திரத்தில் சோதிக்கப்படும்போது, எப்படி சாத்தானின் நேரடி தாக்குதல்களை மேற்கொண்டார் என்பதை கவனித்துப் பாருங்கள் (மத்தேயு 4:1-11). ஒவ்வொரு சோதனையையும் “எழுதப்பட்டிருக்கிறதே” என்கிற வார்த்தைகளை கொண்டு மேற்கொண்டார். சாத்தானுக்கு விரோதமாக உபயோகப்படுத்த மிகச்சிறந்த ஆயுதம் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையாகும். “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங்கீதம் 119:11).
ஆவிக்குரிய யுத்தம் பற்றிய எச்சரிக்கைகளை அதனுடைய கிரமத்தில் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிசாசுகள் நமக்கு முன்னால் நிற்காதபடிக்கு ஓடித் தப்பிச்செல்லும் படிக்கு, இயேசுவின் பெயர் ஏதோ ஒரு மாயமந்திரம் அல்ல. ஜனங்கள் தங்களுக்கு கொடுக்கப்படாத ஒரு அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதற்கு பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவாவின் ஏழு மகன்கள் ஒரு உதாரணமாக இருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 19:13-16). பிரதான தூதனாகிய மிகாவேல் கூட, பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, தனது சொந்த பெலத்தினால் அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான் (யூதா 1:9). நாம் பிசாசுடன் பேச ஆரம்பிக்கும்போது, ஏவாள் வழிநடத்தப்பட்ட அபாயத்தை நாமும் வழிதப்பி போகத்தக்கதாக நடத்தப்படுவோம் (ஆதியாகமம் 3:1-7). நம்முடைய கவனம் முழுவதும் தேவன் மீது மட்டும் இருக்கவேண்டும், பிசாசுகள்மேல் அல்ல; நாம் தேவனிடம் தான் பேசுகிறோம், பிசாசுகளிடத்தில் அல்ல.
சுருக்கமாக, ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றிக்கொள்வதற்கான திறவுகோல்கள் என்ன? நாம் தேவனுடைய வல்லமையை சார்ந்துக்கொள்ள வேண்டும், நம்முடைய சொந்த பெலத்திலல்ல. நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்திருக்கிறோம். நாம் வேதாகமத்திலிருந்து வல்லமையைப் பெறுகிறோம் – தேவனுடைய வார்த்தையானது ஆவியின் பட்டயம் ஆகும். நாம் விடாமுயற்சியிலும் பரிசுத்தத்திலும் ஜெபம் செய்கிறோம்; நாம் உறுதியாக நிற்கிறோம் (எபேசியர் 6:13-14); நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறோம்; சேனைகளின் கர்த்தர் நம்முடைய பாதுகாப்பாளராக இருப்பதை அறிந்து, பிசாசின் வேலையை நாம் எதிர்க்கிறோம் (யாக்கோபு 4:7). “அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை” (சங்கீதம் 62:2).
English
ஆவிக்குரிய யுத்தத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?