கேள்வி
வேதாகமத்தை வாசிப்பதற்கு எந்த இடத்திலிருந்து வாசிப்பது ஒரு நல்ல இடம்?
பதில்
புதிதாக வேதாகமத்தை வாசிக்க துவங்குபவர்கள், வேதாகமமானது முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வாசிக்கப்படும் ஒரு சாதாரண புத்தகம் அல்ல என்பதை உணரவேண்டியது முக்கியம். இது 1,500 ஆண்டுகளுக்கு மேலாக பல மொழிகளில் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் அல்லது சேகரிப்பு ஆகும். அனைத்து வேதாகம வரலாறு மற்றும் தீர்க்கதரிசனம் இறுதியில் இயேசுவையே சுட்டிக்காட்டுவதால், வேதாகமம் "கிறிஸ்துவின் தொட்டில்" என்று மார்ட்டின் லூத்தர் கூறினார். ஆகையால், வேதாகமத்தின் முதல் வாசிப்பு ஒருவேளை சுவிசேஷங்களில் ஆரம்பிக்க வேண்டும். மாற்கு நற்செய்தி விரைவாகவும் வேகமாகவும் உள்ளது மற்றும் தொடங்க ஒரு நல்ல இடமாகவும் இருக்கிறது. பிறகு நீங்கள் யோவானின் சுவிசேஷத்திற்கு போகிறீர்கள், இதில் இயேசு தம்மைக் குறித்துக் கூறிக்கொண்ட காரியங்களை மையமாகக் கொண்டது. இயேசு சொன்னதைப் பற்றி மாற்கு கூறுகிறார், அதே சமயத்தில் இயேசு சொன்னதைப் பற்றியும் இயேசு யார் என்றும் யோவான் சொல்கிறார். யோவானில் சில காரியங்கள் எளிமையானவைகள் மற்றும் தெளிவான பத்திகளாக இருக்கின்றன, ஆனால் சில பகுதிகள் மிக ஆழமான பத்திகளாக இருக்கின்றன. சுவிசேஷ புத்தகங்களைப் படியுங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான்) கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் உங்களுக்கு மிக நன்கு அறிந்துகொள்ள உதவும்.
அதன் பிறகு, சில நிருபங்களை வாசியுங்கள் (உதாரணமாக, எபேசியர், பிலிப்பியர்ஸ், 1 யோவான்) மூலம் வாசிக்கவும். தேவனை கனப்படுத்தி அவருக்கு மகிமையை செலுத்தும் விதத்தில் நம் வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்று இந்த புத்தகங்கள் நமக்கு கற்பிக்கின்றன. நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்க விரும்பினால், ஆதியாகம புத்தகத்தை முதலாவது வாசித்துப் பாருங்கள். தேவன் எவ்வாறு உலகத்தை படைத்தார், மனிதகுலத்தின்மேல் பாவம் எவ்வாறு விழுந்தது, அதேபோல உலகில் வீழ்ச்சியுற்ற பாதிப்புகளையும் இது நமக்கு சொல்கிறது. யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவற்றை வாசிப்பது கடினமாக இருக்கலாம், ஏனென்றால் யூதர்கள் கீழ்ப்படிந்து வாழும்படி தேவனுடைய நியாயப்பிரமாணங்களுக்கு உட்பட்டுள்ளனர். நீங்கள் இந்த புத்தகங்களை தவிர்க்க கூடாது, அவைகளை ஒருவேளை பின்னர் ஆய்வு செய்வதற்கு விட்டு விடுங்கள். எவ்வாறாயினும், அவற்றில் சண்டை போட வேண்டாம். இஸ்ரவேலின் நல்ல வரலாற்றைப் பெறுவதற்காக யோசுவா புத்தகத்திலிருந்து நாளாகம புத்தகம் வரை படிக்கவும். சங்கீத புத்தகமும் சாலொமோனின் பாடலும் நீங்கள் எபிரேய கவிதை மற்றும் ஞானம் குறித்து ஒரு நல்ல உணர்வு கொடுக்கும். தீர்க்கதரிசன புத்தகங்கள், ஏசாயா முத்த மல்கியா வரையிலுள்ளவைகள் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். வேதாகமத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியம் ஞானத்திற்காக தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதை நினைவில் வையுங்கள் (யாக்கோபு 1:5). தேவன் வேதாகமத்தின் ஆசிரியர் ஆவார், அவருடைய வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார்.
தேவனையும் அவருடைய வார்த்தையையும் தெரிந்துகொள்ள உங்கள் முயற்சிகளை மெய்யாகவே ஆசீர்வதிப்பார் என்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எங்கு தொடங்கினாலும் சரி, உங்கள் ஆய்வில் எந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் சரி அது ஒரு விஷயம் இல்லை, தேவன் உங்களுக்கு உதவி செய்வார். தேவனுடைய வார்த்தை நமக்கு தேவையாக இருக்கிறது: "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத்தேயு 4:4). "கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு" (சங்கீதம் 19:7-11). தேவனுடைய வார்த்தை சத்தியம், சத்தியம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் (யோவான் 17:17).
English
வேதாகமத்தை வாசிப்பதற்கு எந்த இடத்திலிருந்து வாசிப்பது ஒரு நல்ல இடம்?