settings icon
share icon
கேள்வி

சிலுவையின் நிலையங்கள் என்றால் என்ன, அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பதில்


வயோ டொலரோசா என்றும் அழைக்கப்படும் சிலுவையின் நிலையங்கள், பூமியில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் இறுதி மணிநேரங்களின் விவரிப்பாகும், இது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஆவிக்குரிய நம்பிக்கையை அளித்து, நம் வாழ்விற்கு மிகவும் பயன்படுகிறது. சிலுவையின் நிலையங்கள் இயேசு தனது பலியின் மூலம் இரட்சிப்பின் பாதையை வழங்குவதற்காக தெய்வீகத்தின் எந்த சலுகையையும் ஒதுக்கி வைக்க மனத்தாழ்மையான முறையின் ஒரு முழுமையான நினைவூட்டலாக இருக்கிறது.

இயேசுவின் அந்த இறுதி மணி நேரங்களை விவரிக்கும் பல பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்புகள் உள்ளன, ஒன்று வேதாகமத்தின்படியானதாகவும் மற்றவை இயேசுவின் இறுதி மணி நேரங்கள் பற்றிய நிகழ்வுகளின் பாரம்பரிய விவரங்களாகவும் உள்ளன. சிலுவையின் நிலையங்களின் பாரம்பரிய வடிவம் பின்வருமாறு:

1. இயேசு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

2. இயேசுவுக்கு அவருடைய சிலுவை கொடுக்கப்பட்டது.

3. இயேசு முதல் முறையாக கீழே விழுந்தார்.

4. இயேசு தனது தாய் மரியாவை சந்திக்கிறார்.

5. சிரேனே ஊரானாகிய சீமோன் சிலுவையைச் சுமக்க வேண்டிய கட்டாயம்.

6. வெரோனிகா இயேசுவின் முகத்தில் இருந்த இரத்தத்தை துடைக்கிறார்.

7. இயேசு இரண்டாவது முறையாக கீழே விழுந்தார்.

8. எருசலேம் பெண்களை இயேசு சந்திக்கிறார்.

9. இயேசு மூன்றாவது முறையாக கீழே விழுந்தார்.

10. இயேசுவின் ஆடைகள் கழற்றப்பட்டது.

11. இயேசு சிலுவையில் அறையப்படுதல் – சிலுவை மரணம்.

12. சிலுவையில் இயேசு மரிக்கிறார்.

13. இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து அகற்றப்படுதல் - நீக்கப்படுதல் அல்லது புலம்பல்.

14. இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்படல்.

இருப்பினும், சிலுவையின் நிலையங்களின் பாரம்பரிய வடிவத்தில், நிலையங்கள் 3, 4, 6, 7, மற்றும் 9 ஆகியவை வெளிப்படையாக வேதாகமத்தின்படியானது அல்ல. இதன் விளைவாக, "சிலுவையின் வேதாகம வழி" உருவாக்கப்பட்டது. சிலுவையின் 14 நிலையங்கள் மற்றும் ஒவ்வொன்றின் வாழ்க்கைப் பயன்பாடு பற்றிய வேதாகம விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிலுவையின் முதல் நிலையம்: ஒலிவ மலையின்மேல் இயேசு (லூக்கா 22:39-46).

இயேசு தனது பிதாவிடம் சிலுவையில் மரணம் என்று அர்த்தமுல்லா அவரது கையில் இருந்து பாத்திரத்தை எடுக்க ஒலிவ மலையில் வேண்டுதல் செய்தார்; அது இயேசுவின் மனிதத்தன்மையை நிரூபித்தது (லூக்கா 22:39-46). அவர் எதிர்கொள்ளவிருக்கும் நிகழ்வுகள் குறித்து அவருடைய எதிர்பார்ப்பு எவ்வளவு பெரியதாக இருந்தது என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. எல்லா கிறிஸ்தவர்களின் வாழ்விலும் தேவனுடைய விருப்பத்திற்கும் அவர்களுடைய விருப்பத்திற்கும் இடையே ஒரு முறை தேர்வு செய்யப்பட வேண்டும், அந்தத் தேர்வு, இயேசுவின் விருப்பத்தைப் போலவே, தேவனுடைய அர்ப்பணிப்பு மற்றும் கீழ்ப்படிதலின் அளவையும், இருதயத்தின் உண்மையான நிலையையும் காட்டுகிறதாய் இருக்கவேண்டும் அதாவது நிகழ்வுகளை மாற்ற தேவனிடத்தில் ஒலிவ மலையில் வேண்டுதல் செய்தபோது இயேசு எதிர்கொள்ளவிருக்கும் விதியை அறிந்திருந்தாலும், அவருடைய எதிர்காலம் என்னவாக இருந்தாலும் பிதாவின் சித்தம் நிறைவேற வேண்டும் என்பதே அவருடைய வேண்டுதலாய் இருந்தது. சிலுவையில் அறைந்திருந்தாலும், அவருடைய உயிர் மூச்சு நழுவிச் சென்றாலும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவரை நம்புவதன் முக்கியத்துவத்தையும் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார்.

சிலுவையின் 2-வது நிலையம்: இயேசு யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுதல் (லூக்கா 22:47-48).

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தபோது வரலாற்றில் மிகவும் வெறுக்கப்படும் கதாபாத்திரங்களில் ஒருவராக மாறியது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவர்கள் பாவத்திற்கு சோதிக்கப்பட்ட நேரங்கள் இருந்தன என்பதை அவர் நினைவூட்டினார். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, பாவத்தில் இடறுவது, நமக்காக உயிரைக் கொடுத்தவருக்கு துரோகம் செய்வது போன்றதாகும். பாவம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நடத்தை, வேண்டுமென்றே ஆவிக்குரிய நம்பிக்கையிலிருந்து விலகும்போது அந்த துரோகம் எவ்வளவு பெரியது (லூக் 22:47-48)? யூதாஸ் இயேசுவோடு வாழ்ந்து அவருடைய காலடியில் அமர்ந்து பல வருடங்களாக அவரிடம் கற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய இருதயம் பரிசுத்த ஆவியின் வல்லமையால் உண்மையாக மாற்றப்படாததால், சாத்தானால் சோதிக்கப்பட்டபோது அவன் விழுந்தான். விசுவாசிகளாக, நாம் “விசுவாசமுள்ளவர்களோவென்று நம்மையே நாம் சோதித்து அறிய வேண்டும் என்றும்; நம்மை நாமே பரீட்சித்துப் பார்க்கவேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது (2 கொரிந்தியர் 13:5).

சிலுவையின் 3-வது நிலையம்: இயேசு சனகெரிப் சங்கத்தால் கண்டிக்கப்படுகிறார் (லூக்கா 22:66-71).

எழுபது ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்கள் மற்றும் ஒரு பிரதான ஆசாரியர் அடங்கிய சனகெரிப் சங்கம், பிலாத்து இயேசுவை சிலுவையில் அரிய வேண்டும் என்று கோரியது. இந்த நிகழ்வு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சுய-நீதியாக மற்றவர்களை நியாயந்தீர்ப்பதன் மூலம் நம்மை உயர்த்திக் கொள்ளக்கூடாது. இந்த உலகில் வேதாகம அறிவு மற்றும் உயர்ந்த நிலைகள் இன்னும் பரிபூரணமாக புனித பரிபூரணத்தை இழக்கின்றன, மேலும் பெருமைமிக்க சிந்தனை மனிதர்களிடையே மிகவும் பக்தியுள்ளவர்களின் வீழ்ச்சியாகும். அதிகாரப் பதவிகளை மதிக்க வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது, ஆனால் இறுதியில் அது தேவனுடைய சித்தமும் தேவனுடைய வார்த்தையும் தான் நம் வாழ்வில் மேலோங்க வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு ஆறுதலளிக்கவும், கற்பிக்கவும், வழிநடத்தவும் கிறிஸ்தவர்களின் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பரிசாக வழங்கப்படுகிறது, சனகெரிப் போன்ற மத ஆட்சியாளர்களின் தனிப்பட்ட தேவையை நிராகரித்து, தேவனுடைய பரிபூரண சித்தத்தின்படி ஒவ்வொரு முடிவையும் எடுக்க அனுமதிக்கிறது. சனகெரிப் யூத மக்கள் உச்ச மத அதிகாரத்தை ஒப்படைப்பது சனகெரிப்பின் பல ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்களிடையே சீர்கேட்டுக்கு வழிவகுத்தது, மேலும் இயேசு அவர்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு கோட்பாட்டைக் கற்பிக்கத் தொடங்கியபோது, அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்தனர், இறுதியில் அவரை ரோம அரசால் சிலுவையில் அறையுமாறு கோரினர் (லூக்கா 22:66-71).

சிலுவையின் 4-வது நிலையம்: பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார் (லூக்கா 22:54-62).

இயேசு கைது செய்யப்பட்டபோது, அந்த நேரத்தில் அங்கிருந்த பலர் பேதுருவை இயேசுவின் சீடர்களில் ஒருவர் என்று குற்றம் சாட்டினர் (லூக்கா 22:54-62). முன்பு இயேசுவால் முன்னறிவிக்கப்பட்டபடி, பேதுரு மூன்று முறை இயேசுவை தாம் அறிந்ததை மறுத்தார். பேதுரு இயேசுவின் பிரியமான மற்றும் நம்பகமான சீடராக இருந்தார், அவர் பல அற்புதங்களை நேரில் பார்த்தார், இயேசுவுடன் தண்ணீரில் நடந்து சென்றார் (மத்தேயு 14:29-31). இருந்தாலும், கைது செய்யப்படுவார் என்ற பயத்தில் இயேசுவை மறுதலித்து மனிதத்தன்மையின் பலவீனத்தை பேதுரு நிரூபித்தார். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் சமூகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால், வாய்மொழி துஷ்பிரயோகம் முதல் அடித்தல் மற்றும் மரணம் வரை இன்னல்களையும் அவமானங்களையும் எதிர்கொள்கின்றனர். இயேசுவை மறுதலித்ததற்காகவும், ரோமர்கள் இயேசுவுடனான உறவைக் கண்டறிந்தால் ரோமர்கள் அவருக்கு என்ன செய்வார்கள் என்ற பயத்துக்காகவும் மக்கள் சுய-நீதியுடன் பேதுருவை நியாயந்தீர்க்கலாம், ஆனால் எத்தனை வேதாகம-நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றி அமைதியாக இருக்கவில்லை என்று சொல்ல முடியும், பாகுபாட்டின் முகம், பொதுவில் அல்லது தனிமையில்? இத்தகைய அமைதி மனிதத்தன்மையின் பலவீனத்தை நிரூபிக்கிறது. பேதுருவின் விசுவாசம் ஒரு பூரணமில்லாத விசுவாசமாக இருந்தது, ஏனெனில் அவர் அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கவில்லை. விசுவாசிகளின் இருதயங்களில் வாழ பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவரின் வருகைக்குப் பிறகு (அப் 2), பேதுரு விசுவாசத்தின் ஒரு துணிச்சலான சிங்கமாக இருந்தார், அவருடைய கர்த்தரை அறிவிக்க அவர் ஒருபோதும் பயப்படவில்லை.

சிலுவையின் 5-வது நிலையம்: இயேசு பொந்தியு பிலாத்துவினால் தீர்ப்பளிக்கப்படுதல் (லூக்கா 23:13-25).

இன்றைய சட்டத் தரத்தின்படி, இயேசுவை எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளியாக்கியிருக்க வாய்ப்பில்லை. பொந்தியு பிலாத்துவினால் இயேசுவில் எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே அவரை விடுவிக்க விரும்பினார் (லூக்கா 23:13-24), ஆனால் சனகெரிப் சங்கம் பிலாத்துவினிடத்தில் மரண தண்டனை விதிக்க நிர்பந்தித்தார்கள். கடுமையான மோசேயின் நியாயப்பிரமாணம் மற்றும் பாரம்பரியத்தின் படி ஆட்சி செய்த சனகெரிப், யூதர்கள் மீது இயேசுவானவர் ஆளுகை செய்யும் அதிகாரத்தை ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதினார்கள். சனகெரிப்பினால் வகுக்கப்பட்ட பல கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அல்ல, தேவனுடைய கிருபையால் இரட்சிப்பு என்று இயேசு மக்களுக்குக் கற்பித்தார், மேலும் இத்தகைய போதனை மதத் தலைவர்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக இருந்தது. இன்றும் கூட, நம்முடைய சொந்த முயற்சியால் அல்ல, தேவனுடைய வல்லமையினாலும் தெரிந்துகொள்ளுதலினாலும் இரட்சிப்பின் செய்தி பிரபலமற்றதாய் இருக்கிறது. வீழ்ச்சியடைந்த தன்மையில் உள்ள மனிதர்கள் எப்போதும் தங்கள் சொந்த இரட்சிப்பை அடைய விரும்புகிறார்கள், அல்லது குறைந்தபட்சம் அதில் ஒரு பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள், எனவே நாம் பெருமையின் ஒரு பகுதியையாவது கோரலாம் என்கிற போக்கு அவர்களுக்கு உள்ளது. ஆனால் இரட்சிப்பு கர்த்தருடையது, அவருடைய மகிமையை அவர் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை (ஏசாயா 42:8).

சிலுவையின் 6-வது நிலையம்: இயேசு அடிக்கப்பட்டு முல்முடியால் சூடப்படுதல் (லூக்கா 23:63-65).

இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குணப்படுத்துதல் ஆவிக்குரிய சிகிச்சைமுறை அல்லது பாவத்திலிருந்து குணமாகும். பாவத்தின் மன்னிப்பு மற்றும் தேவனுடைய தயவை மீட்டெடுப்பது, குணப்படுத்தும் செயலாக அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. மரியாள் இயேசுவைப் பெற்றெடுப்பதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஏசாயா நம் மீறுதல்களுக்காக இயேசு காயமடைவார் என்றும் (ஏசாயா 53:3-6) நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்படுவார் என்றும் அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம் என்றும் முன்னறிவித்தார்.

சிலுவையின் 7-வது நிலையம்: இயேசு தனது சிலுவையை எடுத்துக் கொள்கிறார் (மாற்கு 15:20).

இயேசு தனது சிலுவையை எடுத்தபோது, அவர் மரத்தை விட அதிகமானதை சுமந்து சென்றார். அந்த நாளில் பல பார்வையாளர்களுக்குத் தெரியாமல், இயேசு மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்தார், அந்த பாவங்களுக்கு தகுந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார், அவர் அதை மனிதனின் சார்பாக அனுபவிக்கவிருந்தார். மத்தேயு 16:24 இல் இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார், "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." இது ஒரு விருப்பம் அல்ல என்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார்: “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல" (மத்தேயு 10:38) கிறிஸ்துவின் ஊழியத்திலும் கீழ்ப்படிதலிலும் முற்றிலும் புதிய சிருஷ்டிகளாக (2 கொரிந்தியர் 5:17) வாழ வேண்டும். இதன் பொருள் தேவனிடம் நம் சித்தம், விருப்பம், இலட்சியங்கள் மற்றும் ஆசைகள் ஆகியவற்றை சமர்பிக்கவேண்டும். உயர்ந்த பொருள் என எதையும் நாமாக நமது சந்தோஷத்தை தேடி நாடாமல், தேவைப்பட்டால் அனைத்தையும் துறந்து நம் உயிரையும் கூட கொடுக்க தயாராக இருக்கவேண்டும்.

சிலுவையின் 8-வது நிலையம்: சிரேனே ஊரானாகிய சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார் (லூக்கா 23:26).

சிரேனே ஊரானாகிய சீமோன் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவராக இருந்தார் எனக் கருதப்படலாம். பஸ்கா பண்டிகைகளுக்காக அவர் பெரும்பாலும் எருசலேமுக்கு வந்திருக்கலாம், மேலும் அங்கே நடந்து கொண்டிருக்கிரவைகளைக் குறித்து சிறிதும் அறிந்திருக்கவில்லை. சிரேனே ஊரானாகிய சீமோன் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும், ஏனெனில் அவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய பிறகு வேதாகமத்தில் வேறு எங்கும் குறிப்பிடப்படவில்லை (லூக்கா 23:26). ரோம போர்ச்சேவகர்களால் இயேசுவுக்கு உதவும்படி கட்டளையிடப்பட்டபோது, சீமோன் எதிர்க்கவில்லை, பெரும்பாலும் நடக்கின்ற சூழ்நிலையின் வெளிச்சத்தில் தனது சொந்த உயிருக்குப் பயந்தான். விருப்பத்துடன் சுமந்த இயேசுவைப் போலல்லாமல், அவருடைய சிலுவையை சிரேனே ஊரானாகிய சீமோன் சிலுவையை சுமக்கும்படி "கட்டாயப்படுத்தப்பட்டான்" அல்லது அதைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிறிஸ்தவர்களாகிய நாம், பவுல் நமக்கு அறிவுறுத்துவது போல் இயேசுவோடு அவருடைய பாடுகளில் விருப்பத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும், “ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி" (2 தீமோத்தேயு 1:8).

சிலுவையின் 9-வது நிலையம்: இயேசு எருசலேம் பெண்களை சந்திக்கிறார் (லூக்கா 23: 27-31).

இயேசு சிலுவையில் அறையப்பட கொண்டுபோகப்பட்ட வழியில் அழும் பெண்களையும் அவருடைய சில சீடர்களையும் சந்தித்தபோது, அவர்கள் அவருக்காக அழக்கூடாது என்று எச்சரித்தார், ஆனால் எருசலேம் முழுவதும் பெருகிவரும் தீமையைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய கவலை தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமாய் இருந்தது (லூக்கா 23:27-31). மிகுந்த வேதனையையும் தனிப்பட்ட அவமானத்தையும் அனுபவித்தாலும், இயேசுவின் கவலை அவருக்காக அல்ல, மாறாக அவர்களின் வாழ்வில் பாவத்தின் காரணமாக நித்திய அழிவின் அபாயத்தை எதிர்கொண்டவர்களின் உயிர்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் இருந்தது. அதே எச்சரிக்கை இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமானது, இந்த உலகத்திற்கான நமது கவலைகள் தேவனுக்கு நம் பக்தி மற்றும் கீழ்ப்படிதலுக்கு முன் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயேசு கூறினார், "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" (யோவான் 18:36), மற்றும் பரலோகத்தின் குடிமக்களாக, நம் கவனமும் பார்வையும் இருக்க வேண்டும்.

சிலுவையின் 10-வது நிலையம்: இயேசு சிலுவையில் அறையப்படுகிறார் (லூக்கா 23:33-47).

உண்மையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசுவின் மிக நெருக்கமானவர்கள் உதவியின்றி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை கற்பனை செய்வது மெய்யாகவே கடினம் மனித சாயலில் வைத்தவர் தனது கடைசி மூச்சை விடுகிறார் (லூக்கா 23:44-46). அவருடைய அன்புக்குரியவர்கள் மற்றும் சீடர்கள் அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. மனிதர்களின் இந்த தீய செயல் தெய்வீக நோக்கம் மற்றும் கிறிஸ்துவை நம்பும் அனைவரின் இரட்சிப்புக்கான திட்டமிடலின் விளைவு என்பதை அவர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று, "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்?" (எபிரெயர் 2:3). "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப். 4:12).

சிலுவையின் 11-வது நிலையம்: இயேசு தனது ராஜ்யத்தை நம்பும் கள்ளனுக்கு உறுதியளிக்கிறார் (லூக்கா 23:43).

இயேசுவிற்கு அருகில் சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் இயேசுவின் வாழ்க்கை முடிவடையவில்லை என்ற கருத்தை புரிந்துகொள்ள முடிந்தது, ஆனால் அவர் மனிதகுலத்திற்கு வழங்க வந்த நித்திய வாக்குறுதிக்காக சரீர உலகத்தை கடந்து செல்கிறார். கள்ளன் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் மூலம் கிருபையால் பரதீசுவில் நுழைந்த முதல் நபர்களில் ஒருவராக மாறுவான் (எபேசியர் 2:8-9). ஏனெனில் கள்ளன் தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொண்டு நம்பியதால் அவன் தன்னுடன் அன்று பரலோகத்தில் இருப்பான் என்று இயேசு அந்தத் கள்ளனிடம் சொன்னார். தெளிவாக, இது ஒரு உதாரணம், ஒரு நபர் கிரியைகளால் அல்லாமல் விசுவாசத்தின் மூலம் கிருபையால் இரட்சிக்கப்படுகிறார், ஏனெனில் இயேசுவை துன்புறுத்தியவர்கள் மற்றும் கண்டனம் செய்தவர்களும் விசுவாசிப்பார்கள்.

சிலுவையின் 12-வது நிலையம்: சிலுவையில் இயேசு தனது தாய் மற்றும் சீடர்களுடன் பேசுகிறார் (லூக்கா 23:48-49).

இயேசு தான் இறக்கும் தருணத்தில், தன் அன்பின் சீடரான யோவானுக்கு தன் தாயின் பராமரிப்பை ஒப்படைக்கும்போது தன்னலமின்றி செய்ததால், மற்றவர்களின் தேவைகளைத் தனக்கு முன்னால் எப்போதும் வைத்துக்கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது (யோவான் 19:27). அவருடைய மரணம் உட்பட அவரது வாழ்நாள் முழுவதும், தேவனுடைய பரிபூரணமான சித்தத்திற்கு எல்லாவற்றையும் உட்படடுத்தி, மற்றவர்களின் தேவைகளை நம் சொந்தத்திற்கு முன்னால் வைக்க வேண்டும் என்று உதாரணம் கற்பிக்கப்பட்டது. அவருடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு, பாடுகளை எதிர்கொண்டு மற்றவர்களுக்காக உண்மையாக பலியாகும் செயல் மூலம் நிரூபிக்க விருப்பம் கொண்டார், இது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையின் பண்புகளை வரையறுக்கிறது.

சிலுவையின் 13-வது நிலையம்: இயேசு சிலுவையில் மரிக்கிறார் (லூக்கா 23:44-46).

இயேசுவின் மரணத்தின் போது, தேவாலயத்தில் உள்ள திரைச்சீலை, மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மனிதர்களைப் பிரித்தது, மேலிருந்து கீழாகக் கிழிந்தது. இந்த நிகழ்வைக் கண்ட அனைத்து யூதர்களுக்கும் இது திகிலூட்டும் சம்பவமாக இருந்தது, இது பழைய உடன்படிக்கையின் முடிவையும் புதிய உடன்படிக்கையின் தொடக்கத்தையும் குறிக்கிறது. பாவத்தின் காரணமாக மனிதன் இனி தேவனிடமிருந்து பிரிந்து போக வேண்டியதில்லை, ஆனால் நாம் இப்போது பாவ மன்னிப்புக்காக ஜெபத்தில் தைரியமாக கிருபையின் சிங்காசனத்தை அணுக முடியும். இயேசுவின் வாழ்க்கை மற்றும் சிலுவை பலி மரணம் பாவத்தின் தடையை நீக்கி, மனிதன் தேவனுடைய கிருபையால் இரட்சிப்பைப் பெறுவதை சாத்தியமாக்கியது.

சிலுவையின் 14-வது நிலையம்: இயேசு கல்லறையில் வைக்கப்படுதல் (லூக்கா 23:50-54).

இயேசு இறந்து சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்ட பிறகு, அவர் யூத நகரமான அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு என்ற நபரால் வழங்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் (லூக்கா 23:50-54). யோசேப்பு சனகெரிப் உறுப்பினராக இருந்தார், ஆனால் இயேசுவின் விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுவதை எதிர்த்தார். வேதத்தின் படி இயேசு மேசியா என்று யோசேப்பு இரகசியமாக நம்பினார், ஆனால் அவரது நம்பிக்கையை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதால் உண்டாகும் விளைவு குறித்து பயந்தார் (யோவான் 19:38). இயேசு இறந்த பிறகு, யோசேப்பு பிலாத்துவிடம் இரகசியமாக சென்று இயேசுவின் உடலை முறையான அடக்கம் பண்ணுவதற்காக கேட்டார்.

இயேசுவின் மாபெரும் பலி மனிதனின் பாவங்களுக்கு பரிகாரமாக மாறியது மட்டுமல்லாமல், மரணத்தை தோற்கடித்து வெல்லும் வெற்றியாகவும் மாறியது, இல்லையெனில் பாவத்தின் சாபத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் தவிர்க்க முடியாத விதியாக இருந்திருக்கும். பாவம் அதன் சொந்த தவிர்க்க முடியாத தண்டனையை சுமக்கிறது, அந்த தண்டனை மரணமாகும். நம் சிருஷ்டிகர் நியாயமானவர் மற்றும் நீதியுள்ளவர், எனவே பாவத்திற்கான அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரினார். தேவன் அன்பும் இரக்கமும் உள்ளவராக இருப்பதால், அவர் தனது ஒரே குமாரனை நம் பாவங்களுக்கான தண்டனையை செலுத்த அனுப்பினார் (யோவான் 3:16). தேவனுடைய அன்பும் இரக்கமும் இயேசுவின் வார்த்தைகளால் பெரிதும் நிரூபிக்கப்பட்டது, அவர் சிலுவையில் மரிக்கும்போதும், அவர் அறியாமையில் தன்னைக் கொன்றவர்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டார் (லூக்கா 23:24). தேவனுடைய வார்த்தை மற்றும் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதில் மனிதன் முழுமையாக சரணடைய விரும்பாதது அவனது அறிவு மற்றும் ஞானத்தின் பற்றாக்குறையின் காரணமாக இருக்கிறது என்று ஊகிக்க எளிதானது. அந்தத் தொகுப்பின் முரண்பாடு என்னவென்றால், சிலுவையில் இயேசுவிற்காக அது உருவாக்கிய மரணம், இன்றும் மனிதகுலத்தின் பெரும்பகுதியை ஆட்டிப்படைக்கும் அதே அறியாமையை வெல்ல முடியாதவர்களுக்கு ஆவிக்குரிய மரணமாகிறது. இயேசு தனது சிலுவைப்பலியால் சாத்தியமான இரட்சிப்பின் ஈவை ஏற்க மறுக்கும் பாவமுள்ள மனிதன் நிச்சயம் கலகத்தனமான அறியாமை மற்றும் தேவனுடைய ஞானத்திலிருந்து ஒரு மனிதனை பிரிக்கும் பாவத்தின் விளைவாகும்.

English



முகப்பு பக்கம்

சிலுவையின் நிலையங்கள் என்றால் என்ன, அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries