கேள்வி
இரட்சிப்பிற்கான படிகள் என்ன?
பதில்
பலர் “இரட்சிப்பிற்கான படிகளைத்” தேடுகிறார்கள். ஐந்து வழிமுறைகளைக் கொண்டு அறிவுரை கையேடு போன்றவைகளை விரும்புகிறார்கள், அதை தொடர்ந்து வந்தால், இரட்சிப்பிற்கு வழிவகுக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இஸ்லாம், அது ஐந்து தூண்களைக் கொண்டுள்ளது. இஸ்லாம்படி, ஐந்து தூண்களுக்கு கீழ்ப்படிந்தால், இரட்சிப்பு வழங்கப்படும். இரட்சிப்புக்கு ஒரு படிப்படியான செயல்முறை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதால், கிறிஸ்தவ சமுதாயத்திலுள்ள அநேகர் இரட்சிப்பை வழங்குவதில் தவறு செய்கிறார்கள், படிப்படியான செயல்முறை காரணமாக. ரோமன் கத்தோலிக்கம் ஏழு சடங்குகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் ஞானஸ்நானம் எடுத்தல், வெளிப்படையான அறிக்கை, பாவத்திலிருந்து திரும்புதல், அந்நியப்பாஷைகளில் பேசுதல், இன்னும் இதுபோன்ற அநேக காரியங்களை இரட்சிப்பின் படிகள் என்று சேர்க்கிறார்கள. ஆனால் இரட்சிப்புக்கு வேதாகமம் ஒரு படி மட்டுமே வழங்குகிறது. பிலிப்பு நகரத்துச் சிறைச்சாலை அதிகாரி “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று பவுலைக் கேட்டபோது, அதற்கு பவுல்: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று கூறினார் (அப்போஸ்தலர் 16: 30-31).
இயேசு கிறிஸ்துவின்மீது இரட்சகராக வைக்கும் விசுவாசம் மட்டுமே இரட்சிப்பின் ஒரே "படி" ஆகும். வேதாகமத்தின் செய்தி அதிகமான நிலையில் மிகவும் தெளிவாக இருக்கிறது. நாம் அனைவரும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறோம் (ரோமர் 3:23). நம்முடைய பாவத்தின் காரணமாக, தேவனிடமிருந்து நித்தியமாக பிரிக்கப்பட வேண்டியதன் அவசியமாயிற்று (ரோமர் 6:23). தேவன் நம்மீது அன்பு காட்டுவதன் மூலம் (யோவான் 3:16), தேவன் மனித உருவெடுத்து நம் ஸ்தானத்தில் மரித்தார், நாம் அடையவேண்டிய தகுதியுள்ள தண்டனையை அவர் தன்மேல் எடுத்துக்கொண்டார் (ரோமர் 5:8; 2 கொரிந்தியர் 5:21). இயேசு கிறிஸ்துவை கிருபையினால் விசுவாசத்தின் மூலமாக இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு தேவன் பாவ மன்னிப்பையும் பரலோகத்தில் நித்திய வாழ்வையும் வாக்களிக்கிறார் (யோவான் 1:12; 3:16; 5:24, அப்போஸ்தலர் 16:31).
இரட்சிப்பு என்பது நாம் சில படிகளைப் பின்பற்றி இரட்சிப்பை சம்பாதிப்பது அல்ல. ஆம், கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஆம், கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை இரட்சகராக வெளிப்படையாக அறிக்கை செய்ய வேண்டும். ஆம், கிறிஸ்தவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டும். ஆம், கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். எனினும், இவைகள் இரட்சிப்புக்கு படிகள் அல்ல. அவைகள் இரட்சிப்பினால் வரும் விளைவுகளாகும். நம்முடைய பாவத்தின் காரணமாக, நாம் எந்தவிதத்திலும் இரட்சிப்பை பெற முடியாது. நாம் 1000 படிகளைப் பின்பற்ற முடியும், ஆனால் அது போதுமானதாக இருக்காது. அதனால்தான் இயேசு நம்முடைய ஸ்தானத்தில் மரிக்கவேண்டியதாயிருந்தது. நாம் நம்முடைய பாவத்திற்குரிய கடனை செலுத்துவது அல்லது பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வது முற்றிலும் முடியாத காரியமாக இருந்தது. தேவன் மட்டுமே நம்முடைய இரட்சிப்பை நிறைவேற்ற முடியும், அதனால் அவர் அதைச்செய்தார். தேவனே "படிகளை" முடித்து அதன் மூலம் அவரிடத்தில் பெறும் எவருக்கும் இரட்சிப்பை வழங்குகிறார்.
இரட்சிப்பு மற்றும் பாவமன்னிப்பு படிகளைப் பின்பற்றுவதைப் பற்றி அல்ல. இது கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்வதோடு, அவர் நமக்கு எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதாகும். தேவன் நம்மிடத்திலிருந்து ஒரு படியை மட்டும் எதிர்பார்க்கிறார் - பாவத்திருந்து மனந்திரும்பி நம் இரட்சகராக இயேசு கிறிஸ்துவை பெற்றுக்கொண்டு, முழுமையாக நம்முடைய இரட்சிப்பின் வழியாக அவரை மட்டுமே நம்பிக்கை வைத்து சார்ந்திருத்தல். இதுதான் உலகத்திலுள்ள எல்லா மதங்களிடமிருந்தும் கிறிஸ்தவ விசுவாசத்தை வேறுபடுத்துகிறது. அவைகள் ஒவ்வொன்றும் இரட்சிப்பை பெறுவதற்காக பின்பற்ற வேண்டிய படிகளின் பட்டியலைக் கொண்டுள்ளது. தேவன் ஏற்கெனவே படிகளை முடித்துவிட்டார், மனந்திருப்பி விசுவாசத்தில் அவரை ஏற்றுக்கொள்வதை மட்டும்தான் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.
English
இரட்சிப்பிற்கான படிகள் என்ன?