கேள்வி
மூடநம்பிக்கைகளைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
மூடநம்பிக்கை என்பது மந்திர சக்திகளைக் கொண்ட ஒரு அறியாமை விசுவாசத்தின் அடிப்படையிலானது. மூடநம்பிக்கைக்கான மற்றொரு சொல் "விக்கிரகாராதனை". தற்செயலாக நடக்கும் காரியங்களை வேதாகமம் ஆதரிக்கவில்லை, ஆனால் தேவனுடைய இறையாண்மைக்கு வெளியே எதுவும் செய்யப்படவில்லை. அவர் தனது தெய்வீகத் திட்டத்தின்படி அனைத்தையும் ஏற்படுத்துகிறார் அல்லது அனுமதிக்கிறார் (அப்போஸ்தலர் 4:28; எபேசியர் 1:10).
உலகில் பல வகையான மூடநம்பிக்கைகள் உள்ளன, அவை ஏணியின் கீழ் நடக்காமல் இருப்பது போன்றவை—ஜோதிடம், பில்லிசூனியம், கண்கட்டி வித்தை, குறி சொல்லுதல் மற்றும் இந்திரசாலவித்தை போன்ற அமானுஷ்ய நடைமுறைகள் வரை. ஜோதிடம் (உபாகமம் 4:19), மந்திரம், குறி சொல்லுதல், பில்லிசூனியம் (2 இராஜாக்கள் 21:6, ஏசாயா 2:6) ஆகியவற்றைப் பயிற்சி செய்பவர்களை வேதம் வன்மையாகக் கண்டிக்கிறது. விக்கிரக ஆராதனையும் தடைசெய்யப்பட்டுள்ளது, அதைக் கடைப்பிடிக்கும் எவரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் (வெளிப்படுத்துதல் 21:27). இந்த வகையான நடைமுறைகள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் அவை பயிற்சியாளர்களின் மனதை பிசாசின் தாக்கத்திற்கு திறக்கின்றன. 1 பேதுரு 5:8 நம்மை எச்சரிக்கிறது: “சுயக்கட்டுப்பாட்டுடனும் விழிப்புடனும் இருங்கள். உங்கள் எதிராளியான பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல யாரையாவது விழுங்கலாமா என்று வகைத்தேடி சுற்றித்திரிகிறான்.
நாம் நம் விசுவாசத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அல்லது சடங்குகளிலிருந்து பெறக்கூடாது, மாறாக நித்திய ஜீவனைக் கொடுக்கும் ஒரே உண்மையான தேவனிடமிருந்து பெறவேண்டும். "லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோசெயர் 2:8-10).
English
மூடநம்பிக்கைகளைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?