கேள்வி
மயக்கநிலைக் கோட்பாடு என்றால் என்ன? இயேசு சிலுவையில் அறையப்பட்டபின்பு உயிர் பிழைத்தாரா?
பதில்
மயக்கநிலைக் கோட்பாடு என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உண்மையில் இறக்கவில்லை, ஆனால் அவர் கல்லறையில் வைக்கப்பட்டபோது அவர் சுயநினைவின்றி மயக்கநிலையில் இருந்தார், அங்கு அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை. அதன்படி, கல்லறையில் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் தோன்றிய காட்சிகள் உயிர்த்தெழுதல் தோற்றங்களாக மட்டுமே உணரப்பட்டன. இந்தக் கோட்பாடு செல்லாதது மற்றும் பொய்யானது என்று எளிதில் நிரூபிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன, மேலும் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டதில் குறைந்தது மூன்று வெவ்வேறு நபர்கள் அல்லது குழுக்கள் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் சிலுவையில் அவர் மரித்த உண்மையைப் பற்றி அனைவரும் திருப்தி அடைந்தனர். அவர்கள் ரோமக் காவலர்கள், பிலாத்து மற்றும் சனகெரிப் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.
ரோமக் காவலர்கள் - இயேசுவின் மரணத்தை உறுதிசெய்யும் பணியை வழங்கிய ரோமப் போர்வீரர்களின் இரண்டு தனித்தனி குழுக்கள் இருந்தன: மரணதண்டனை செய்பவர்கள் மற்றும் கல்லறையில் காவல் பணியில் இருக்கும் காவலர்கள். மரணதண்டனைக்கு பொறுப்பான வீரர்கள் மரண தண்டனையில் நிபுணர்களாக இருந்தனர், மேலும் சிலுவையில் அறையப்படுவது வரலாற்றில் மிகவும் கொடூரமான மரணதண்டனை வடிவங்களில் ஒன்றாகும். இந்த தொழில்முறை மரண காரியங்களைச் செய்பவர்களின் கைகளில் கொடூரமான அடிகளைத் தாங்கிய பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மேலும் சிலுவையில் அறையப்பட்ட ஒவ்வொரு நபரும் இந்த வீரர்களால் கையாளப்பட்டனர். பணி முடிந்ததை உறுதி செய்வதே அவர்களின் பணியாக இருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதிலிருந்து உயிர் பிழைத்திருக்க முடியாது, அவருடைய உடலை சிலுவையில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இந்த வீரர்கள் இயேசு இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினர். இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பதில் அவர்கள் முழு திருப்தி அடைந்தனர். சன்கெரிப் சங்கத்தின் மூலம் பிலாத்துவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதால், இரண்டாவது குழு வீரர்களுக்கு இயேசுவின் கல்லறையை பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டது. மத்தேயு 27:62-66 நமக்குச் சொல்கிறது, “ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்." இந்த காவலர்கள் கல்லறை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர், மேலும் அவர்களின் பணியை செவ்வன முடிப்பதன் மேலேயே அவர்களின் ஜீவன் தங்கியிருந்தது. தேவனுடைய குமாரனின் உயிர்த்தெழுதல் மட்டுமே அவர்களின் பணியிலிருந்து அவர்களைத் தடுக்க முடியும்.
பிலாத்து - பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையுமாறு கட்டளையிட்டான் மற்றும் 100 ரோம வீரர்களின் நம்பகமான மற்றும் நிரூபிக்கப்பட்ட தளபதியான ரோம நூற்றுக்கதிபதி ஒருவரால் இந்த பணியை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டான். சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் உடலைக் கல்லறையில் வைப்பதற்காக அவருடைய உடலைக் கோரினார். நூற்றுக்கதிபதி இயேசுவின் மரணத்தை உறுதிப்படுத்திய பின்னரே பிலாத்து உடலை யோசேப்பின் பராமரிப்பில் விடுவித்தான். மாற்கு 15:42-45: “ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.” இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பதில் பிலாத்து முற்றிலும் திருப்தி அடைந்தான்.
சனகெரிப் – சனகெரிப் சங்கம் யூத ஜனங்களின் ஆளும் குழுவாக இருந்தது, மேலும் அவர்கள் இயேசு உட்பட சிலுவையில் அறையப்பட்டவர்களின் உடல்களை அவர்களின் மரணத்திற்குப் பிறகு சிலுவையிலிருந்து கீழே இறக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். யோவான் 19:31-37: "அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.” இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று கோரிய இந்த யூதர்கள், அவர் சிலுவையில் அறையப்படாமல் இருந்திருந்தால், ஒரு கிளர்ச்சியை பரிந்துரைக்கும் அளவுக்கு சென்றாலும், இயேசுவின் உடலை சிலுவையில் இருந்து அகற்ற அனுமதிக்க மாட்டார்கள். இந்த மனிதர்கள் இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டார் என்பதில் முழு திருப்தி அடைந்தனர்.
உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசுவின் உடல் நிலை இருந்தது மயக்கநிலைக் கோட்பாடு தவறானது என்பதற்கு வேறு சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு தோற்றத்திலும், இயேசுவின் உடல் மகிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகக் காட்டப்பட்டது, மேலும் அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கான சான்றாக எஞ்சியிருக்கும் அடையாளங்கள் தோமாவிடம் அவர் யார் என்பதற்கான சான்றாகத் தொடும்படி கேட்டுக் கொண்டார். இயேசு அனுபவித்ததை அனுபவித்த எவரும் உடல்ரீதியாக குணமடைய மாதங்கள் தேவைப்பட்டிருக்கும். இயேசுவின் உடலில் அவரது கைகளிலும் கால்களிலும் நகங்களின் அடையாளங்கள் மட்டுமே இருந்தன. சிலுவையில் அறையப்பட்ட பிறகு இயேசுவின் உடல் ஆயத்தம்பண்ணப்பட்ட விதம் கோட்பாட்டை மறுப்பதற்கான கூடுதல் சான்றாகும். இயேசு மட்டும் சுயநினைவின்றி மயக்கநிலையில் இருந்திருந்தால், அவர் ஒரு மனிதனாக இருந்திருந்தால், அவர் போர்த்தப்பட்டிருந்த துணியிலிருந்து தப்பிக்க இயலாது. இயேசுவின் உடலை பெண்கள் பார்த்த விதம் அவருடைய மரணத்திற்கு கூடுதலான சான்றாகும். ஓய்வுநாளின் ஆரம்பத்திற்கு முன்னதாக அவருடைய உடலைத் ஆயத்தம்பண்ண அவர்களுக்கு சிறிது நேரம் இருந்ததால், வாரத்தின் முதல் நாளில் அவரது உடலை கந்தவர்க்கமிட்டு தைலங்களால் அபிஷேகம் செய்வதற்காக அவர்கள் கல்லறைக்கு வந்தனர். கோட்பாடு கூறுவது போல் இயேசு வெறும் மயக்கத்தில் இருந்திருந்தால், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு உதவும் மருத்துவக் கருவிகளை பெண்கள் கொண்டு வந்திருப்பார்கள்.
மயக்கநிலைக் கோட்பாட்டின் நோக்கம் இயேசுவின் மரணத்தை மறுப்பது அல்ல, மாறாக, அது அவரது உயிர்த்தெழுதலை நிராகரிக்க முயல்கிறது. இயேசு உயிர்த்தெழவில்லை என்றால், அவர் தேவன் இல்லை. இயேசு உண்மையிலேயே மரித்து உயிர்த்தெழுந்தார் என்றால், மரணத்தின் மீது உள்ள அவருடைய வல்லமை அவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்பதை நிரூபிக்கிறது. சான்றுகள் தீர்ப்பைக் கோருகின்றன: இயேசு உண்மையிலேயே சிலுவையில் மரித்தார், இயேசு உண்மையிலேயே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
English
மயக்கநிலைக் கோட்பாடு என்றால் என்ன? இயேசு சிலுவையில் அறையப்பட்டபின்பு உயிர் பிழைத்தாரா?