கேள்வி
முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்றால் என்ன?
பதில்
"முறைப்படுத்தப்பட்ட" என்ற வார்த்தை ஒன்றைமுறைபடுத்தப்பட்டு இருப்பதை குறிக்கிறது. எனவே, முறைப்படுத்தப்பட்ட (சிஸ்ட்டமெடிக்) இறையியல், இறையியலின் பிரிவை முறைபடுத்துவதில் அது பல்வேறு பகுதிகளை விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, தேவதூதர்களை குறித்த செய்திகளை வேதாகமத்தின் பல புத்தகங்கள் தருகிறது. தேவதூதர்களை குறித்த செய்திகளை எல்லாம் ஒரே புத்தகம் தரவில்லை. முறைப்படுத்தப்பட்ட இறையியல் தேவதூதர்களை குறித்த அனைத்து செய்திகளை வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களில் இருந்து எடுத்து ஒழுங்குபடுத்தி அமைக்கிறது.இதற்கு தேவதூதர்கள் படிப்பாக அழைக்கப்படுகிறது.வேதாகமத்தினுடைய போதனைகளை ஒழங்குபடுத்தி அவற்றை பிரித்து அமைப்பதே, முறைப்படுத்தப்பட்ட இறையியலாகும்.
பெட்ராலஜி என்பது அப்பா பிதாவை குறித்த படிப்பாகும். கிறிஸ்டாலஜி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மனுஷ குமாரனை குறித்த படிப்பாகும். நியுமட்டாலஜி என்பது பரிசுத்த ஆவியான ஆண்டவரை குறித்த படிப்பாகும். பிப்லியாலஜி என்பது வேதத்தை குறித்த படிப்பாகும். சொட்டிரியாலஜி என்பது இரட்சிப்பு குறித்த படிப்பாகும். எக்லீஷியாலஜி என்பது சபையை குறித்த படிப்பாகும். எஸ்கெட்டாலஜி என்பது இறுதி காலத்தை குறித்த படிப்பாகும். ஏன்ஜலாலஜி என்பது தேவதூதர்கள் குறித்த படிப்பாகும். கிறிஸ்டியன் டீமனாலஜி என்பது கிறிஸ்தவ கோணத்தில் இருந்து சாத்தானை குறித்த படிப்பாகும். கிறிஸ்டியன் அன்ட்ரபாலஜி என்பது கிறிஸ்தவ கோணத்தில் இருந்து மனித குலத்தை குறித்த படிப்பாகும். அமர்ட்டியாலஜி என்பது பாவத்தை குறித்த படிப்பாகும். முறைப்படுத்தப்பட்ட இறையியல் சரியான முறையில் வேதத்தை குறித்து போதிக்க மற்றும் புரிந்துகொள்ளவதற்கு உதவுகிற முக்கியமான கருவியாக நமக்கு இருக்கிறது.
முறைப்படுத்தப்பட்ட இறையியல், அல்லாமல் வேறு வழிகளில் இறையியல் பிரிந்து இருக்க முடியும். வேதாகம இறையியல் வேதாகமதில் குறிப்பிட்ட புத்தகத்தை குறித்து படிப்பதாகும் மற்றும் இறையியலின் உள்ள பல்வேறு அம்சங்களை வலியுறுத்த கவனம் செலுத்துகிறது.எடுத்து காட்டாக, யோவான் சவிசேஷம் கிறிஸ்துவை மையமாக வைத்து இன்னும் கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தை குறித்து அதிகமாக கவனம் செலுத்துகிறது. (யோவான் 1:1, 14; 8:58; 10:30; 20:28). வரலாற்று இறையியல் உபதேங்கள் மற்றும் கிறிஸ்தவ சபை பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டது எப்படி என்பது குறித்த படிப்பாகும்.கோட்பாடு இறையியல் என்பது முறைமைபடுத்தப்பட்ட உபதேசத்தினுடைய குறிப்பிட்ட கிறிஸ்தவ பிரிவினரின் உபதேசத்தை குறித்த படிப்பாகும். எடுத்துகாட்டாக, கெல்வனிஸ்டிக் இறையியல் மற்றும் டிஸ்பன்செஷனல் இறையியல். சமகால இறையியல் என்பது சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட அல்லது கவனம் செலுத்தப்பட்டு வரும் உபதேசங்களை குறித்த படிப்பாகும். எப்படிபட்ட இறையியல் நாம் படிக்கிறோம் என்பது விஷயம் அல்ல, இறையியல் படிப்பதே முக்கியமாகும்.
English
முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்றால் என்ன?