கேள்வி
டாவோயிசம் / தாவோயிசம் என்றால் என்ன?
பதில்
டாவோயிசம் (அல்லது தாவோயிசம்) என்பது சீனா, மலேசியா, கொரியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற தூரக் கிழக்கு நாடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மதமாகும். தற்போதைய மதிப்பீடுகளின்படி, பல நூறு மில்லியன் மக்கள் தாவோயிசத்தை சில வடிவங்களில் கடைப்பிடிக்கின்றனர், அவர்களில் 20 முதல் 30 மில்லியன் பேர் சீன நிலப்பரப்பில் உள்ளனர். சீனாவின் பிரதான நிலப்பகுதி ஒரு கம்யூனிச நாடு மற்றும் பல வகையான மதங்களைத் தடைசெய்வதால் இது மிகவும் குறிப்பிடத்தக்கது. தாவோயிசத்தின் தோற்றம் கி.மு. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டு காலளவைக் கொண்டது. பல மதங்களைப் போலவே, தாவோயிசமும் அதன் சொந்த நூல்களைக் கொண்டுள்ளது, அவற்றுள் முக்கியமானது "தாவோ" என்று குறிப்பிடப்படுகிறது. மற்ற நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் தாவோயிஸ்ட் நியதியின் முழு நிறமாலையும் தாவோசாங் என அழைக்கப்படுகிறது. "தாவோ" என்ற வார்த்தை அதே பெயரில் உள்ள சீன எழுத்துக்களில் இருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு "வழி" அல்லது "பாதை" என்று பொருள்.
தாவோயிசம் ஒருபோதும் ஒருங்கிணைக்கப்பட்ட மதமாக இருந்ததில்லை, மேலும் சில அறிஞர்கள் அதை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்: தத்துவ, மதவாத மற்றும் சீன நாட்டுப்புற மதம். இப்படியான பரந்த நம்பிக்கைகள் கொண்டிருக்கிற தாவோயிசம் என்றால் என்ன என்பதை துல்லியமாக வரையறுப்பதை கடினமாக்குகிறது. பொதுவாக, தாவோ பிரபஞ்சத்தின் ஓட்டம் அல்லது இயற்கை ஒழுங்கின் பின்னால் உள்ள சக்தியைக் கையாள்கிறது, இது எல்லாவற்றையும் சமநிலையாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்கும். தாவோ இருப்பு மற்றும் "இல்லாதது" ஆகியவற்றின் ஆதாரமாகக் கருதப்படுகிறது. சில கிழக்கு மதங்கள் இதை பிரபஞ்சத்தின் "யின் மற்றும் யாங்" என்று குறிப்பிடுகின்றன, இது தன்னை "நல்ல" மற்றும் "தீமை" ஆகியவற்றின் சம சக்திகளாகவும் வெளிப்படுத்த முடியும்.
தாவோயிசத்தின் சில ஆதரவாளர்கள் பலதெய்வத்தை (பல கடவுள்களில் நம்பிக்கை) நம்புகிறார்கள்; மற்றவர்கள் முன்னோர்களை வழிபடுகிறார்கள். தாவோயிஸ்டுகள் தங்கள் நாட்காட்டியில் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் தெய்வங்களுக்கு அல்லது இறந்த மூதாதையர்களின் ஆவிகளுக்குப் பலியாக உணவு வைக்கப்படும் போதும் வழிபடுகின்றனர். பலியின் பிற வடிவங்களில் காகிதப் பணத்தை எரிப்பதும் அடங்கும் - தாவோயிஸ்டுகள், மறைந்த மூதாதையர் பயன்படுத்துவதற்கு ஆவி உலகில் மறுபொருளாக மாறும் என்று நம்புகிறார்கள். தை சி சூவான் மற்றும் பாகுவா ஜாங் போன்ற பல தற்காப்புக் கலைகள் தாவோயிசத்தில் வேர்களைக் கொண்டுள்ளன. மேற்கத்திய உலகில் சிலர் தாவோயிசத்தை கடைப்பிடிக்கின்றனர், மேலும் சிலர் தாவோவை ஜென் உடன் குழப்பியுள்ளனர், இது ஃபிரிட்ஜோஃப் காப்ராவின் தாவோ ஆஃப் பிசிக்ஸ் (The Tao of Physics) அல்லது பெஞ்சமின் ஹாஃப் எழுதிய தி தாவோ ஆஃப் பூஹ் (The Tao of Pooh) புத்தகங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாவோ என்ற வார்த்தைக்கு "வழி" என்று பொருள் இருந்தாலும், அது உண்மையான வழி அல்ல. தேவனை அடைவதற்கான வழிகளில் ஒன்று என்று கூறும் பல மதங்கள் உள்ளன. ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுந்தான் தேவனிடத்திற்கு செல்லும் ஒரே வழி என்று கூறினார் (யோவான் 14:6). தாவோயிசம் இதை மறுப்பதால், மனிதகுலத்தின் பாவத் தன்மையைக் கையாளத் தவறிவிடுகிறது. அனைவரும் (இயேசுவைத் தவிர) ஆதாமிடமிருந்து பெற்ற பாவச் சுபாவத்துடன் உலகிற்கு வந்தனர், மேலும் பாவமே நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. ஒரு பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள தேவன் அவரது பார்வையில் பாவமான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவருடைய இரக்கத்தில், சிலுவையில் மரித்து, நம்முடைய பாவத்திற்காக அவருடைய நீதியைப் பரிமாறிக்கொள்ள அவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை (மாம்சத்தில் தேவனாக இருந்தவர்) இந்த உலகத்திற்கு அனுப்பினார் (2 கொரிந்தியர் 5:21). இந்தப் பிராயச்சித்த மரணத்தை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்து நித்திய ஜீவனைப் பெற முடியும் (எபேசியர் 2:8-9). கிறிஸ்து, தாவோ அல்ல, நித்திய ஜீவனுக்கு வழி.
English
டாவோயிசம் / தாவோயிசம் என்றால் என்ன?