கேள்வி
பிற மதத்தினரின் நம்பிக்கைகளைக் கிறிஸ்தவர்களின் சகித்துக்கொள்ள வேண்டுமா?
பதில்
நாம் இருக்கும் இந்த காலகட்டத்தில் சகிப்புத்தன்மை, கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒழுக்க நெறியே உயர்வான நல்லொழுக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு தத்துவம், யோசனை, விசுவாச அமைப்பும் சம தகுதியுடையதாக இருக்கிறது அதேபோல் சம கனத்திற்கும் தகுதியானது என்று சார்பியல்வாதிகள் கூறுகின்றனர். குறுகிய மனப்பான்மை, அறிவொளி இல்லாமை, அல்லது மதவெறியும் கூட முழுமையான அறிவை குறித்த ஞானம் என்பது ஒரு விசுவாசத்தை விட்டு மற்றொரு விசுவாசத்தை ஆதரிப்பவர்களின் கருத்தாகும்.
நிச்சயமாக ஒவ்வொரு மார்க்கமும் பரஸ்பர தனித்தன்மை வாய்ந்த கூற்றுக்களை உருவாக்குகிறது மற்றும் சார்பியல்வாதிகளால் தர்க்கரீதியாக முரண்பாடுகளை சரிசெய்யவும் முடியவில்லை. உதாரணத்திற்கு கிழக்கத்திய மார்க்கம் மறுஜென்மத்தை குறித்துப் போதிக்கும் போது, “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபிரெயர் 9:27) என்று வேதாகமம் சொல்லுகிறது. எனவே நாம் ஒரேதரம் மரிப்போமா அல்லது அநேகந்தரமா? இரண்டு போதனைகளுமே உண்மையாக இருக்க முடியாது. பலவிதமான முரண்பாடான உண்மைகள் இருப்பதால் சார்பியல்வாதிகளால் முரணான உலகத்தை உருவாக்க உண்மையான வரையரையை திரும்பவும் வரையறுக்கவேண்டும்.
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு சொன்னார் (யோவான் 14:6). கிறிஸ்தவர்கள் உண்மையை எதோ ஒரு கருத்தாக அல்ல ஆள்தன்மையாக (நபராக) ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஏற்றக்கொள்ளுதல் கிறிஸ்தவர்களை இக்காலத்திலுள்ள திறந்த மனப்பான்மையுள்ளவர்கள் என்ற கோட்பாட்டிலிருந்து விலகியிருக்க செய்கிறது. கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக இயேசு மரணத்திலிருந்து உயிர்தெழுந்தார் என்று அறிக்கையிடுகின்றனர் (ரோமர் 10:9-10). அவன் மெய்யாகவே உயிர்தெழுதலை விசுவாசித்தால், கிறிஸ்து உயிர்தெழவில்லை என்கிற அவிசுவாசிகளின் கருத்துக்கு அவன் எப்படி திறந்த மனதுள்ளவனாக இருக்க முடியும்? வேத வசனத்தின் சரியான போதனைகளை கிறிஸ்தவர்கள் மறுதலிப்பது உண்மையாகவே அவர்கள் தேவனையே மறுதலிப்பதாகும்.
இதுவரை நம்முடைய உதாரணத்தில் விசுவாசத்தின் அடிப்படையைக் குறித்து பார்த்தோம். அவற்றில் சில (கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்தெழுதல்) பேச்சுவார்த்தைக்குட்பட்டதல்ல. மற்ற காரியங்கள் வாதத்திற்கு உட்பட்டது அதாவது யார் எபிரெயர் நிரூபத்தை எழுதியது, பவுலுக்கு கொடுக்கப்பட்ட “சரிரத்தின் முள்” என்ன என்பவைகள் வாதத்திற்கு உட்பட்டவைகள். இரண்டாந்தரமான காரியங்களில் புத்தியீனமான தர்க்கங்களை நாம் தவிர்க்க வேண்டும் (2 தீமோத்தேயு 2:23; தீத்து 3:9).
முக்கியமான உபதேசங்களை குறித்து வாதிக்கும்போது கிறிஸ்தவர்கள் மரியாதையோடு நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இது ஒரு நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாத காரியமாகும், ஏனென்றால் இது ஒரு நபரை சிலர் மதிப்புத் தாழ்த்தி கீழ்த்தரமாக நடத்துவது ஆகும். கேள்வி கேட்கும் நபரிடம் இரக்கம் காட்டும்போது நாம் சத்தியத்தை ஒரு போதும் விட்டுவிட கூடாது. இயேசுவைப் போல் நாமும் சத்தியமும் கிருபையும் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும் (யோவான் 1:14). பதிலளிப்பதற்கும் தாழ்மையாக இருப்பதற்கும் இடையே உள்ள சரியான சமநிலையை பேதுரு சுட்டிக்காட்டுகிறார்: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15).
English
பிற மதத்தினரின் நம்பிக்கைகளைக் கிறிஸ்தவர்களின் சகித்துக்கொள்ள வேண்டுமா?