கேள்வி
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை தேவன் ஏன் ஏதேன் தோட்டத்திலே வைத்தார்?
பதில்
ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு கீழ்படிய அல்லது கீழ்படியாமல் இருப்பதற்கான ஒரு தெரிந்துகொள்ளுதலை அவர்கள் தேர்வு செய்ய தேவன் நம்மைதீமை அறியத்தக்க விருட்சத்தை ஏதேன் தோட்டத்திலே வைத்தார். ஆதாமும் ஏவாளும் தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்க அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆதியாகமம் 2:16-17 ல், “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார். தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேர்வு செய்ய அனுமதி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் அடிப்படையில் தங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயலை மட்டும் செய்யும்படிக்கு ஒரு இயந்திரமாகவே தான் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் ஆதாமையும் ஏவாளையும் சுதந்திரமாக ஜீவிப்பவர்களாக, சுயமாக தீர்மானங்களை எடுக்கும் திறன் உள்ளவர்களாக, நன்மை மற்றும் தீமையை பிரித்து தேர்வு செய்ய திறனுள்ளவர்களக இருக்கும்படி படைத்தார். ஆதாமும் ஏவாளும் சுதந்திரமாய் இருப்பதற்கு அவர்கள் ஒரு தேர்வு செய்ய வேண்டியதிருந்தது.
அந்த விருட்சத்தையோ அல்லது அந்த விருட்சத்தின் கனியையோ பொறுத்தமட்டில் அதில் எந்தவித தீமையும் இல்லை. அந்த கனி தன்னைத்தானே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எதேனும் கூடுதலான அறிவை கொடுத்திருக்க சாத்தியமுமில்லை. அதாவது ஒரு சாதாரண பழம் விட்டமின் சி மற்றும் சில நார் சத்துள்ளதாக இருந்திருக்கலாம். ஆனால் இது ஆவிக்குரிய ஆகாரச்சத்தல்ல. எனினும் கீழ்படியாமை ஆவிக்குரிய தீமையாகும். இந்த பாவம் செய்ததன் மூலம் ஆதாம் ஏவாளின் தீயகண்களை திறந்தது. முதல் முறையாக அவர்கள் தீமை என்றால் என்ன என்பதையும், அவமானத்தையும் உணரவே, தேவனிடமிருந்து அவர்கள் ஒளிந்துக்கொள்ள அறிந்து கொண்டார்கள். அவர்களின் கீழ்படியாமையின் பாவத்தினால் தேவன் அவர்களுடைய வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் சீர்கேட்டை கொண்டுவந்தார். தேவனுக்கு கீழ்படியாமல் கனியை புசித்து ஆதாமும் ஏவாளும் தீமையை அறிந்தனர் மற்றும் அவர்கள் தங்களை நிர்வாணிகள் என்பதையும் அறிந்தனர் (ஆதியாகமம் 3:6-7).
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதை தேவன் விரும்பவில்லை. பாவத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்பது தேவனுக்கு முன்னரே தெரியும். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வார்கள் அதன் மூலம் தீமை, பாடு மற்றும் மரணம் இந்த உலகிற்கு வரும் என்பதும் தேவன் முன்னரே அறிந்திருந்தார். பின்பு ஏன், தேவன் சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் சோதிக்க அனுமதித்தார்? தேவன் ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் சோதிக்க அனுமதித்ததன் மூலம் அவர்கள் தேர்வு செய்யக் கட்டாயப்படுத்தினார். ஆதாமும் ஏவாளும் தங்களின் சுய விருப்பத்தின் படியே தேவனுக்கு கீழ்படியாமலிருக்கவும் தடைசெய்யப்பட்ட பழத்தை புசிக்கவும் தேர்ந்தெடுத்தனர். அதனுடைய முடிவாக தீமை, பாவம், பாடுகள், வியாதி மற்றும் மரணம், அன்றிலிருந்து இந்த உலகத்தை வாதிக்கத் தொடங்கியது. ஆதாம் ஏவாளின் தீர்மானத்தின் முடிவானது எல்லா மனுஷனும் பிறக்கும் போதே பாவசுபாவத்தில் பிறக்கவும், பாவம் செய்யும் எண்ணத்தோடு செயல்படவும் செய்கிறது. ஆதாம் ஏவாளின் தீர்மானத்தின் விளைவுதான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவும், நமக்குப் பதிலாக அவருடைய இரத்தத்தை சிந்தவும் காரணமாய் அமைந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நாம் பாவத்தின் விளைவிலிருந்தும் முடிவாக பாவத்திலிருந்தும் விடுபட முடியும். ரோமர் 7:24-25ல், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்!” அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய வார்த்தைகளை நாமும் எதிரொலிப்போமாக!
English
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை தேவன் ஏன் ஏதேன் தோட்டத்திலே வைத்தார்?