கேள்வி
உபத்திரவம் என்றால் என்ன? கடைசி ஏழு வருட கால உபத்திரவத்தினை எப்படி அறிந்துகொள்வது?
பதில்
உபத்திரவ காலம் என்பது தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலரை மீண்டும் கூட்டிச்சேர்த்து அவர்களை சுத்திகரித்து ஒழுங்கு பண்ணவும், விசுவாசியாத அவிசுவாச உலகத்தை நியாயந்தீர்க்கவும் பூமியின்மேல் இனி வரவிருக்கிற ஏழு முழு வருடங்கள் ஆகும். சபையானது கர்த்தர் இயேசுவின் ஆள்தன்மை மற்றும் செய்து முடித்த வேலையின்மேல் பரிபூரணமான நம்பிக்கையை வைத்தவர்கள் ஆகும். இவர்களுடைய பாவத்தின் தண்டனையை ஏற்கனவே இயேசு மன்னித்து அவற்றை நீக்கின படியால், சபையானது ஏழு வருட உபத்திரவ காலத்தில் இருக்காது. எடுத்துக்கொள்ளப்படுதல் என்னும் இரகசிய வருகையின்போது சபையானது பூமியிலிருந்து மகிழ்ச்சியோடே எடுத்துக்கொள்ளப்படும் (1 தெச. 4:13-18; 1 கொரி. 15:51-53). சபையானது வருகிறதான கோபாக்கினையில் இல்லாமல் அதிலிருந்து பாதுகாக்கப்படும் (1 தெச. 5:9). வேதவாக்கியங்கள் முழுவதிலும் “உபத்திரவம்” என்னும் காரியம் “கர்த்தருடைய நாள்” என்றும் (ஏசாயா 2:12; 13:6-9; யோவேல் 1:15; 2:1-31; 3:14; 1 தெச. 5:2), வாதை (அ) உபத்திரவம் என்றும் (உபா. 4:30; செப்பனியா 1:1). மிகுந்த உபத்திரவம் என்பது உலகத்தில் சம்பவியாத உபத்திரவ காலம் (மத்தேயு 24:21); ஆபத்து காலம் (அ) வாதையின் நாள் (தானியேல் 12:1, செப்பனியா 1:15). யாக்கோபின் இக்கட்டுக்காலம் (எரேமியா 30:7) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உபத்திரவகாலத்தின் நேரம் மற்றும் நோக்கத்தை அறிந்துகொள்வதற்கு தானியேல் 9:24-27 வரையிலுள்ள வசனங்கள் மிக முக்கியமானதாகும். இந்த வேதபகுதி எழுபது வாரங்களைக் குறிக்கிறது அதுவும் “உன் ஜனத்தின்மேல்” என அறிக்கை செய்கிறது. இங்கே குறிப்பிட்டுள்ள ஜனம் “இஸ்ரவேலர்கள்” ஆகும். தானியேல் 9:24ல் ஒரு குறிப்பிட்ட காலத்தை குறித்து வாசிக்கிறோம், “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.”
இதில் “ஏழு எழுபதுகள்” இந்த காரியங்களினால் முழுமையடையும் என தேவன் தெரிவிக்கிறார். இது ஏழு “எழுபது’ வருடங்கள் அதாவது 490 வருடங்கள் ஆகும். (சில மொழிபெயர்ப்பாலர்கள் இதனை “வாரங்களாக” குறிக்கிறார்கள்). இதை அடுத்தபகுதிகள் உறுதி செய்கின்றன. 25 மற்றும் 26-வது வசனங்களில் தானியேல் சொல்வது “மேசியா வருமட்டும் “ஏழுவாரம்” அறுபத்திரண்டு வாரமும்” (மொத்தம் 69 வாரங்கள்), எருசலேமை திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளைப்பெறப்படுவது முதல் என்று சொல்கிறது. மேலும் அடுத்தாக பார்த்தால் “69 – ஏழு வருடங்கள்” (அதாவது 483 வருடங்கள்) எருசலேமைத்திருப்பி கட்டுவதற்கு மேசியா வரமட்டும். மேசியாவால் சங்கரிக்கப்பட்டு எருசலேம் திரும்ப எடுப்பித்துக்கட்ட கட்டளை பெறப்பட்ட நாள்முதல் 483 ஆண்டுகள் கடக்க வேண்டுமென வேத வல்லநர்கள் உறுதிசெய்கிறார்கள். பெரும்பான்மையான கிறிஸ்தவ வல்லுனர்கள், தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டது போல் “ஏழு எழுபது” ஆண்டுகள் ஏற்படும் என காண்பிக்கிறார்கள்.
தானியேல் 9:24ல் மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது”. எருசலேமை எடுப்பித்தக்கட்ட கட்டளை பெற்ற நாள்முதல் மேசியா வருமட்டும் 483 வருடங்களான “ஏழு எழுபது” வருடங்கள் ஆகும். கடைசி ஏழு வருடங்கள் இடுக்கமான காலம் - இஸ்ரவேலின் பாவத்திற்கு நீதி சரிகட்டுதலின் காலம் ஆகும்.
ஏழு வருட உபத்திரவ காலத்தை தானியேல் 9:27 சில மேற்கோள்களைக் காட்டி விளக்குகிறது, “அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.” இந்த வார்த்தைகள் அந்த மனிதனைக் குறித்து “பாழாக்குகிற அருவருப்பானவன்” என்று இயேசு அழைக்கிறார் (மத்தேயு 24:15) மற்றும் வெளி. 13-ல் “மிருகம்” என கூறப்படுகிறது. தானியேல் 9:27-ல் “அந்த மிருகம் ஏழு வருடத்திற்கு உடன்படிக்கையை உறுதிபடுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது (3½ வருட உபத்திரவ காலம்) உடன்படிக்கையை முறித்து பலியை ஒழியப்பண்ணுவார்” என்று கூறுகிறது. வெளிப்படுத்தின சுவிசேஷம் 13-ம் அதிகாரம் முழுவதும் உபத்திரவத்தின் காலமான “மிருகத்தை”ப்பற்றி விளக்குகிறது. “அந்த மிருகம் தனக்கு ஒரு சுரூபத்தை உண்டாக்கி, தன்னை வணங்கு”ம்படி பூமியில் உள்ள மக்களுக்கு சொல்லிற்று. வெளி. 13:5-ல் 42 மாதங்கள் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது” என்று வாசிக்கிறோம். அதாவது 3½ ஆண்டு காலம். மேலும் தானியேல் 9:27-ல் சொல்லப்பட்டதுபோல “அந்தவாரம் பாதியில்” மற்றும் வெளி:13:5-ல் “மிருகம் இப்படி செய்ய 42 மாதங்கள் அதிகாரம் கொடுக்கப்பட்ட” தாக சொல்கிறது; பார்த்தால் எளிமையாக புரிய வைக்கிறது. மொத்தமான கால அளவு 84 மாதங்கள் அல்லது ஏழு வருடங்கள். தானியேல் 7:25ல் “ஒரு காலம், காலங்கள், அரைக்காலம்” (காலம் – 1 வருடம், காலங்கள் – 2 வருடங்கள், அரைக்காலம் - அரைவருடம் மொத்தம் - 3½ வருடங்கள்), “மகா உபத்திரவக்காலம்” என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கடைசி ஏழு வருடங்களின் பாதி காலம் மிருகம் ஆட்சி செய்யும் காலம் ஆகும்.
மேலும் உபத்திரவத்தைக் குறித்துள்ள குறிப்பு வெளி. 11:23-ல் 1260 நாட்களும், 42 மாதங்களும்; தானியேல் 12:11-12-ல் 1290 நாட்கள் மற்றும் 1335 நாட்களுமாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் உபத்திரவத்தின் மத்திய பாகத்தை மேற்க்கோள்காட்டுகிறதாய் இருக்கிறது. தானியேல் 12-அதிகாரத்தில், கூடுதலாக உள்ள நாட்கள், ஜாதிகள்மேல் உள்ள நியாயத்தீர்ப்பின் முடிவையும் (மத்தேயு 25:31-46), கிறிஸ்து ராஜ்யத்தை ஸ்தாபிக்கிற காலமாகவும் இருக்கிறது(வெளி. 20:4-6) என தெரிவிக்கிறது.
English
உபத்திரவம் என்றால் என்ன? கடைசி ஏழு வருட கால உபத்திரவத்தினை எப்படி அறிந்துகொள்வது?