settings icon
share icon
கேள்வி

உண்மையான மதம் என்றால் என்ன?

பதில்


"தேவனில் நம்பிக்கை வைத்தல் அல்லது தேவர்களை நமஸ்கரித்தல், வழக்கமாக நடத்தை மற்றும் சடங்குகளில் வெளிப்படுத்தப்படுதல்" அல்லது "நம்பகத்தன்மை குறிப்பிட்ட நம்பிக்கை முறைமை, ஆராதனை வழிபாடு போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவை, பெரும்பாலும் நெறிமுறைகளின் குறியீட்டை உள்ளடக்கியது" என மதத்தை வரையறுக்க முடியும். உலகத்தின் 90% மக்கள்தொகை மதத்தின் சில வடிவங்களுக்கு ஒத்துப்போகிறது. பிரச்சனை என்னவென்றால், எண்ணற்ற மதங்கள் உள்ளன. சரியான மதம் எது? உண்மையான மதம் எது?

மதங்களில் இரண்டு மிகவும் பொதுவான மூலப்பொருட்கள் விதிகள் மற்றும் சடங்குகள். சில மதங்கள் அடிப்படையில் விதிகளின் பட்டியல், செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது போன்றவை, ஒரு நபர் அந்த மதத்தின் உண்மையுள்ள ஒத்துழைப்பாளராக கருதப்பட வேண்டும், அதன்படி அந்த மதத்தின் தேவனுடன் சரியானவராக இருக்க வேண்டும். விதிகள் அடிப்படையிலான மதங்களின் இரண்டு எடுத்துக்காட்டுகள் இஸ்லாம் மதம் மற்றும் யூதமதம் ஆகும். இஸ்லாமில் அதன் ஐந்து தூண்களைக் கடைப்பிடிக்க வேண்டும். யூதமதத்தில் கைக்கொண்டு ஆசரிக்கவேண்டிய நூற்றுக்கணக்கான கட்டளைகள் மற்றும் மரபுகள் காணப்படுகின்றன. மதத்தின் விதிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒரு நபர் தேவனுடன் சரியானவராக கருதப்படுவார் என்று ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்த இரு மதங்களும் கூறுகின்றன.

மற்ற மதங்கள் சட்டங்களை பட்டியலிடுவதற்குப் பதிலாக சடங்குகளைக் கவனிப்பதில் கவனம் செலுத்துகின்றன. இந்த பலி செலுத்துவதன் மூலம், இந்த வேலையில் ஈடுபடுவதன் மூலம், இந்த சேவையில் பங்குகொள்வதன் மூலம், இந்த உணவை சாப்பிடுவதன் மூலம் போன்ற இன்னும் பல காரியங்களால் ஒரு நபர் தேவனோடு சரியானவராக இருக்கிறார் என்கின்றன. சடங்கு அடிப்படையிலான மதத்தின் மிக முக்கிய எடுத்துக்காட்டு ரோமன் கத்தோலிக்கம் ஆகும். ரோமன் கத்தோலிக்கம் ஒரு குழந்தை ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுதல், குருவானவரிடம் பாவத்தை ஒப்புக்கொள்வது, பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்களிடத்தில் ஜெபங்களை ஏறெடுத்தல், மரணத்திற்கு முன்பு ஒரு ஆசாரியர் அபிஷேகம் செய்தல், இன்னும் பல, இவைகளால் தேவன் இறந்த பிறகு பரலோகத்தில் ஒரு நபரை ஏற்றுக்கொள்ளுகிறார் என்று நம்புகிறார்கள். புத்த மதம் மற்றும் இந்து மதம் ஆகியவைகள் கூட முதன்மையாக சடங்கு அடிப்படையிலான மதங்களாக இருக்கின்றன, ஆனால் ஒரு குறைந்த அளவு விதிகள் சார்ந்ததாக கருதப்படலாம்.

உண்மையான மதம் விதிகள் சார்ந்ததும் அல்ல சடங்குகள் சார்ந்ததும் அல்ல. உண்மையான மதம் என்பது தேவனுடன் உள்ள ஒரு உறவாக இருக்கிறது. மனிதர்கள் எல்லாரும் தேவனிடமிருந்து பிரிந்திருக்கிறார்கள், அவர்கள் தேவனோடு மீண்டுமாக உறவில் இணைக்கப்பட வேண்டும் என்கிற இந்த இரண்டு காரியங்களை எல்லா மதங்களும் கொண்டிருக்கின்றன. விதிகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொய்யான மதம் இந்த பிரச்சனையைத் தீர்க்க நாடுகிறது. தேவன் மட்டுமே பிரிவினையை சரிசெய்ய முடியும் என்பதையும், அவர் அவ்வாறு செய்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்வதன் மூலம் உண்மையான மதம் சிக்கலை தீர்க்கிறது. உண்மையான மதம் பின்வருபவைகளை அங்கீகரிக்கிறது:

• நாம் எல்லாரும் பாவஞ்செய்து, தேவனிடத்திலிருந்து பிரிந்திருக்கிறோம் (ரோமர் 3:23).

• திருத்தப்படாவிட்டால், பாவத்திற்கான நீதியுள்ள தண்டனையாகிய மரணமும் மரணத்திற்கு பின்னர் தேவனிடமிருந்து நித்தியமான பிரிவினையும் ஆகும் (ரோமர் 6:23).

• தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நபரில் வந்து நம்முடைய ஸ்தானத்தில் மரித்து, நாம் அடையவேண்டிய எல்லா தண்டனையையும் அவர் எடுத்துக்கொண்டு, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து அவருடைய மரணம் பாவத்தண்டையை செலுத்துவதற்கு போதுமான பலியாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டது (ரோமர் 5: 8; 1 கொரிந்தியர் 15: 3-4; 2 கொரிந்தியர் 5:21).

• நம்முடைய பாவங்களுக்காக செலுத்தப்படவேண்டிய தொகையை முழுக்க கொடுப்பதற்கு அவரது மரணத்தையே நம்பி, நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டால், நாம் மன்னிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, மீட்கப்பட்டு, ஒப்புரவாக்கப்பட்டு, மற்றும் தேவனோடு நீதிமான்களாக்கப்பட்டு இருக்கிறோம் (யோவான் 3:16; ரோமர் 10:9-10; எபேசியர் 2:8-9).

உண்மையான மதம் கூட விதிகள் மற்றும் சடங்குகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் அதில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. உண்மையான மதத்தில், தேவன் வழங்கிய மீட்பிற்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சில விதிகள் மற்றும் சடங்குகள் கைக்கொள்ளப்படுகின்றன - இரட்சிப்பைப் பெறுவதற்கான முயற்சியில் அல்ல. உண்மையான மதமாகிய வேதாகம கிறிஸ்தவம், சில விதிகளுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது (கொலை செய்யாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள், பொய் சொல்லாதீர்கள், போன்றவை) மற்றும் சடங்குகளைக் (முழுக்கு ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய பந்தி / திருவிருந்து) கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிகள் மற்றும் சடங்குகளை கவனிப்பது ஒரு நபரை தேவனோடு சரியானதாக்குவது அல்ல. மாறாக, இந்த விதிகள் மற்றும் சடங்குகள் இரட்சகராக இயேசு கிறிஸ்துவில் மட்டுமே உள்ள விசுவாசம் மூலம் தேவனோடுள்ள உறவின் விளைவாகும். தேவனுடைய தயவைப் பெறுவதற்காக பொய்யான மதம் இப்படிப்பட்ட (விதிகள் மற்றும் சடங்குகள்) காரியங்களைச் செய்கின்றது. உண்மையான மதம் என்பது இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அதனிமித்தமாக தேவனுடன் சரியான உறவைக் கொண்டிருக்கிறது - பின்னர் தேவன்மீது அன்பு காட்டுவதும், அவரை நெருக்கமாக வளர்க்க விரும்புவதுமான (விதிகள் மற்றும் சடங்குகள்) காரியங்களைச் செய்வதாகும்.

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

உண்மையான மதம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries