கேள்வி
ஆதியாகமம் 1-2 அதிகாரங்களில் இரண்டு வெவ்வேறு சிருஷ்டிப்புக் கணக்குகள் ஏன் உள்ளன?
பதில்
ஆதியாகமம் 1:1 கூறுகிறது, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” பின்னர், ஆதியாகமம் 2:4-ல், படைப்பின் இரண்டாவது, வித்தியாசமான கதை தொடங்குகிறதாக தெரிகிறது. இரண்டு மாறுபட்ட சிருஷ்டிப்புக் கணக்குகளின் யோசனை இந்த இரண்டு பத்திகளின் பொதுவான ஒரு தவறான வியாக்கியானம் ஆகும், இது உண்மையில் ஒரே சிருஷ்டிப்பு நிகழ்வைத்தான் விவரிக்கிறது. அவைகள் எந்த வரிசையில் உருவாக்கப்பட்டன என்பதில் வித்தியாசப்படவில்லை, மேலும் ஒன்றுக்கொன்று முரண்படுவதும் இல்லை. ஆதியாகமம் 1-ஆம் அதிகாரம் “சிருஷ்டிப்பின் ஆறு நாட்கள்” (மற்றும் ஏழாம் நாள் ஓய்வு) குறித்து விவரிக்கிறது, ஆதியாகமம் 2-ஆம் அதிகாரம் அந்த சிருஷ்டிப்பு வாரத்தின் ஒரு நாளை மட்டுமே அதாவது ஆறாவது நாளை மட்டும் விவரிக்கிறது, ஆக இங்கே எந்த முரண்பாடும் இல்லை.
ஆதியாகமம் 2-ல், தேவன் மனிதனை உருவாக்கிய ஆறாவது நாளின் தற்காலிக வரிசைக்கு இந்த புத்தகத்தின் எழுத்தாளர் பின்செல்லுகிறார். முதல் அதிகாரத்தில், ஆதியாகமத்தின் ஆறாவது நாளில் மனிதனின் சிருஷ்டிப்பை ஆதியாகமத்தின் எழுத்தாளர் முன்வைக்கிறார். பின்னர், இரண்டாவது அதிகாரத்தில், மனிதனின் சிருஷ்டிப்புக் குறித்து எழுத்தாளர் அதிக விவரங்களைத் தருகிறார்.
ஆதியாகமம் 1-2 அதிகாரங்களுக்கு இடையில் முரண்பாடுகளின் இரண்டு முதன்மை கூற்றுக்கள் உள்ளன. முதலாவது தாவர வாழ்க்கை தொடர்பானது. மூன்றாம் நாளில் தேவன் தாவரங்களை உருவாக்கியதாக ஆதியாகமம் 1:11 பதிவு செய்கிறது. ஆதியாகமம் 2:5 கூறுகிறது, மனிதனை உருவாக்குவதற்கு முன்பு, “நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.” அப்படியானால், இது எது? தேவன் மனிதனைப் படைப்பதற்கு முன்பதாகவே மூன்றாம் நாளில் (ஆதியாகமம் 1) தாவரங்களை படைத்தாரா? அல்லது மனிதனைப் படைத்த பிறகு (ஆதியாகமம் 2) தாவரங்களை படைத்தாரா? என்கிற கேள்வி எழுகிறது. “தாவரங்கள்” என்பதற்கான எபிரேய சொற்கள் இரண்டு வேதப்பகுதிகளிலும் வேறுபட்டவையாகும். ஆதியாகமம் 1:11 பொதுவாக தாவரங்களைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறது. ஆனால் ஆதியாகமம் 2:5 வேறே ஒரு குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்துகிறது, இது விவசாயம் பண்ணுவதற்கு தேவைப்படும் தாவரங்களைக் குறிக்கிறது, அதாவது, அதை வளர்க்க ஒரு நபர் அல்லது ஒரு தோட்டக்காரர் அவசியம் என்பதைக் காண்பிக்கிறது. ஆகவே இரண்டு அதிகாரங்களிலுமுள்ள வேதப்பகுதிகள் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. ஆதியாகமம் 1:11 தேவன் தாவரங்களை உருவாக்குவதைப் பற்றி பேசுகிறது, ஆதியாகமம் 2:5 தேவன் மனிதனைப் படைத்தபின்னர் அவனால் “விவசாயம் செய்யக்கூடிய” மற்றும் பண்படுத்தப்படக்கூடிய தாவரங்களைப் பற்றிப் பேசுகிறது.
இரண்டாவதாக தோன்றுகிற முரண்பாடு விலங்குகளின் வாழ்க்கை தொடர்பானது. ஆதியாகமம் 1:24-25 தேவன் மனிதனைப் படைப்பதற்கு முன்பு ஆறாவது நாளில் விலங்குகளைப் படைத்ததை ஆதியாகமத்தின் எழுத்தாளர் பதிவு செய்கிறார். ஆனால் ஆதியாகமம் 2:19-ல், சில மொழிபெயர்ப்புகளில், தேவன் மனிதனைப் படைத்தபின்பு விலங்குகளை படைத்ததைப் பதிவுசெய்கிறது. ஆயினும், ஆதியாகமம் 2:19-20-ன் ஒரு நல்ல மற்றும் நம்பத்தகுந்த மொழிபெயர்ப்பு பின்வருமாறு கூறுகிறது, “தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்.” தேவன் மனிதனைப் படைத்தார் என்றும், பின்னர் விலங்குகளைப் படைத்தார், அதன்பின்னர் விலங்குகளை மனிதனிடம் கொண்டு வந்தார் என்று இந்த வேதப்பகுதி சொல்லவில்லை. மாறாக, “தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி” என்று தான் கூறுகிறது. ஆகவே இங்கே எந்த முரண்பாடும் இல்லை. ஆறாவது நாளில், தேவன் விலங்குகளைப் படைத்தார், பின்னர் மனிதனைப் படைத்தார், பின்னர் விலங்குகளை மனிதனிடம் கொண்டு வந்தார், மனிதன் விலங்குகளுக்கு பெயரிட அனுமதித்தார் என்பதுதான் சரி.
இரண்டு சிருஷ்டிப்புக் கணக்குகளையும் தனித்தனியாகக் கருத்தில்கொண்டு அவற்றை சரிசெய்து கொள்வதன் மூலம், அதாவது ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் சிருஷ்டிப்பின் வரிசையை தேவன் விவரிக்கிறார் என்றும், அதன் மிக முக்கியமான விவரங்களை, குறிப்பாக ஆறாவது நாளில் சிருஷ்டிக்கப்பட்டவைகளை, ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் தெளிவுபடுத்துகிறார் என்றும் தெளிவாக விளங்குகிறது. இங்கே எந்த முரண்பாடும் இல்லை, ஒரு நிகழ்வை பொதுவாகக் காணப்படுவதில் இருந்து எடுத்து விசேஷித்த நிலையில் விவரிக்கும் ஒரு பொதுவான இலக்கிய முறையேயாகும்.
English
ஆதியாகமம் 1-2 அதிகாரங்களில் இரண்டு வெவ்வேறு சிருஷ்டிப்புக் கணக்குகள் ஏன் உள்ளன?