கேள்வி
நான் வேதாகமத்தின்படி இல்லாமல் ஞானஸ்நானம் பெற்றேன். நான் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?
பதில்
ஞானஸ்நானம் பற்றி வேதாகமம் மிகத்தெளிவாக உள்ளது. நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய இரண்டு காரியங்கள் உள்ளன. (1) ஞானஸ்நானம் என்பது ஒரு நபர் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிறகு, இரட்சிப்புக்காக அவரை மட்டுமே நம்பிய பிறகு எடுக்கவேண்டிய ஒன்றாகும். (2) ஞானஸ்நானம் என்பது மூழ்கி எடுப்பதாகும். ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் அர்த்தம் "தண்ணீரில் அமிழ்வது / மூழ்குவது" என்பதாகும். முழுக்கு ஞானஸ்நானம் என்பது ஞானஸ்நானத்தின் ஒரே முறையாகும், அது ஞானஸ்நானம் எதைக் குறிக்கிறது என்பதை விளக்குகிறது—விசுவாசிகள் மரித்து, கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்படுவது மற்றும் புதிதான ஜீவனுள்ளவர்களாக இருக்கும்படிக்கு மீண்டும் உயிரோடு எழுப்பப்படுவதற்கான காரியத்தைக் குறிக்கிறது (ரோமர் 6:3-4).
அந்த இரண்டு முக்கிய காரியங்களை மனதில் இருத்திக்கொண்டு, வேதாகமத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் ஞானஸ்நானம் பெற்றவர்களைப் பற்றி என்ன? என்பதற்கான காரியத்தை ஆராய்வோம். தெளிவுக்காக, அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிப்போம். முதலில், கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு ஞானஸ்நானம் பெற்றவர்கள். குழந்தைகளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் மற்றும் பிற்கால வாழ்க்கையில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் ஆனால் ஞானஸ்நானம் எடுத்தபோது இயேசுவை இரட்சகராக உண்மையிலேயே அறியாதவர்கள் இதற்கு பொதுவான எடுத்துக்காட்டுகள். இந்த நிகழ்வுகளில், ஆம், அத்தகைய நபர் நிச்சயமாக ஞானஸ்நானம் பெற வேண்டும். மீண்டும் நாம் இங்கே கவனிக்கவேண்டிய காரியம், ஞானஸ்நானம் என்பது இரட்சிப்புக்கு பிந்தையது என்று வேதாகமம் மிகத்தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஞானஸ்நானம் அடையாளமாக எடுத்துரைக்கிறதான பொருள், ஒரு நபர் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தால் உண்மையாகவே இரட்சிப்பை அனுபவிக்கவில்லை என்றால் வீண் மற்றும் இழக்கப்படும்.
இரண்டாவதாக, கிறிஸ்துவில் விசுவாசித்ததற்குப் பிறகு ஞானஸ்நானம் பெற்றவர்கள், ஆனால் மூழ்குவதைத் தவிர வேறு முறையில் எடுத்தவர்கள். இந்த பிரச்சினை இன்னும் கொஞ்சம் கடினமானது. அத்தகைய நபர் ஞானஸ்நானம் பெறவில்லை என்று நாம் வாதிடலாம். அதாவது தெளித்தல் அல்லது ஊற்றுவது முறை என்றால், அது ஞானஸ்நானத்தின் அடிப்படை வரையறையான "மூழ்குவதற்கு" பொருந்தாது. இருப்பினும், யாராவது “ஞானஸ்நானம்” பெற்றார்கள் ஆனால் மூழ்கவில்லை என்ற நிகழ்வை வேதாகமம் எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, பிரச்சினை தனிப்பட்ட நிலையில் அடிப்படையில் உள்ள அர்த்தத்தோடு தீர்க்கப்பட வேண்டும். ஞானஸ்நானம் பெற்ற ஒரு விசுவாசி தேவனிடம் ஞானத்தைக் கேட்க வேண்டும் (யாக்கோபு 1:5). விசுவாசியின் மனசாட்சி நிச்சயமற்றதாக இருந்தால், மனசாட்சியை நிம்மதியாக்க வேதாகமத்தின்படியாக ஞானஸ்நானம் பெறுவது நல்லது (ரோமர் 14:23).
English
நான் வேதாகமத்தின்படி இல்லாமல் ஞானஸ்நானம் பெற்றேன். நான் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?