கேள்வி
வேதாகமத்தைப் புரிந்துகொள்வது ஏன் மிகவும் கடினம்?
பதில்
ஒவ்வொருவரும், பல்வேறு அளவுகளில், வேதாகமத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஏறக்குறைய 2,000 வருட திருச்சபை வரலாற்றிற்குப் பிறகும், சில வேதாகம வசனங்கள் மற்றும் பத்திகள் மிகச்சிறந்த வேதாகம அறிஞர்களைக் கூட சரியான அர்த்தத்தில் ஊகிக்க முடியாமல் போகச் செய்கின்றன. வேதாகமத்தைப் புரிந்துகொள்வது ஏன் மிகவும் கடினம்? வேதாகமத்தை முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள ஏன் இவ்வளவு முயற்சி தேவை? நாம் ஒரு பதிலை முயற்சிப்பதற்கு முன், தேவன் தெளிவற்ற முறையில் தொடர்பு கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டும். தேவனுடைய வார்த்தையின் செய்தி முற்றிலும் தெளிவாக உள்ளது. வேதாகமம் சில நேரங்களில் புரிந்துகொள்ள கடினமாக இருப்பதற்கான காரணம் என்னவென்றால், நாம் பாவத்தில் விழுந்த மனிதர்கள்—பாவம் நம் புரிதலை தெளிவாக காணாதபடிக்கு மேகமூட்டுகிறது மற்றும் அது நாம் வேதாகமத்தை நம் விருப்பப்படி திருப்புவதற்கு வழிவகுக்கிறது.
வேதாகமத்தைப் புரிந்துகொள்ள கடினமாக்கும் பல காரணிகள் உள்ளன. முதலில், காலத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வேறுபாடு உள்ளது. வேதாகமம் இன்று நம் காலத்திலிருந்து 3,400 முதல் 1,900 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. வேதாகமம் எழுதப்பட்ட கலாச்சாரம் இன்று நாம் இருக்கும் பெரும்பாலான கலாச்சாரங்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. கி.மு. 1800 இல் மத்திய கிழக்கில் இருந்த நாடோடி மேய்ப்பர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் 21 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவில் உள்ள கணினி புரோகிராமர்களுக்கு அதிக அர்த்தத்தைக் கொடுப்பதில்லை. வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, வேதாகமம் எழுதப்பட்ட கலாச்சாரத்தை நாம் அங்கீகரிப்பது மிக முக்கியம்.
இரண்டாவதாக, வேதாகமத்தில் வரலாறு, நியாயப்பிரமாணம், கவிதை, பாடல்கள், ஞான இலக்கியம், தீர்க்கதரிசனம், தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் வெளிப்படுத்துதல் இலக்கியம் உட்பட பல்வேறு வகையான இலக்கியங்கள் உள்ளன. வரலாற்று இலக்கியம் ஞான இலக்கியத்திலிருந்து வித்தியாசமாக விளக்கப்பட வேண்டும். வெளிப்படுத்துதல் எழுத்துக்களைப் போலவே கவிதையையும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு தனிப்பட்ட கடிதம், இன்று நமக்கு அர்த்தமுள்ள அதே வேளையில், முதல் பெறுநர்களுக்கு வழங்கியதை விட வேறுபட்ட பயன்பாட்டைக் கொண்டிருக்கலாம். வேதாகமம் பல்வேறு வகைகளைக் கொண்டுள்ளது என்பதை அங்கீகரிப்பது குழப்பம் மற்றும் தவறான புரிதலைத் தவிர்ப்பதற்கு இன்றியமையாதது.
மூன்றாவதாக, நாம் அனைவரும் பாவிகள்; நாம் அனைவரும் தவறு செய்கிறோம் (பிரசங்கி 7:20; ரோமர் 3:23; 1 யோவான் 1:8). வேதாகமத்திற்குள் நம் மனதில் கற்பனை செய்த காரியங்களைப் படிக்காமல் இருக்க நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அவ்வப்போது நாம் அனைவரும் அதைச் செய்வதை தவிர்க்க முடியாதது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு கட்டத்தில் எல்லோரும் ஒரு பத்தியை தவறாக விளக்குகிறோம், அது என்னவாக இருக்கலாம் அல்லது எதுவல்ல என்கிற அனுமானத்தின் காரணமாக. நாம் வேதாகமத்தைப் படிக்கும்போது, நாம் அப்படிப்பட்ட நம் மனதில் கற்பனை செய்த காரியங்களை நீக்கி, அதனுடைய முன்னுரைகளைத் தவிர்த்து தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள உதவும்படி அவரிடம் கேட்க வேண்டும். இதைச் செய்வது பெரும்பாலும் கடினம், ஏனெனில் முன்முடிவுகளை ஒப்புக்கொள்வதற்கு மனத்தாழ்மை மற்றும் தவறுகளை ஒப்புக்கொள்ளக்கூடிய விருப்பம் தேவை.
எக்காரணத்தை கொண்டும் வேதாகமத்தை சரியாகப் புரிந்துகொள்ள இந்த மூன்று படிகளும் தேவையில்லை. முழு புத்தகங்களும் வேதாகம வியாக்கியானங்கள், வேதாகம விளக்கத்தின் அறிவியல் பற்றி எழுதப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த படிகள் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த தொடக்கமாகும். வேதாகம காலங்களில் வாழ்ந்த மக்களுக்கும் நமக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். இலக்கியத்தின் பல்வேறு வகைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வேதாகமத்தைத் தானே பேச அனுமதிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும், மேலும் நம் முன் எண்ணங்கள் மற்றும் கற்பனைகள் நமது விளக்கத்தைக் கெடுக்க அனுமதிக்கக்கூடாது.
வேதாகமத்தைப் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமான வேலையாக இருக்கலாம், ஆனால் தேவனின் உதவியுடன் அது சாத்தியமாகும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவராக இருந்தால், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசம் செய்கிறார் (ரோமர் 8:9). வேதத்தை "சுவாசித்த" அதே தேவன் (2 தீமோத்தேயு 3:16-17) நீங்கள் அவரை விசுவாசித்தால் அவருடைய வார்த்தையின் உண்மை மற்றும் புரிதலுக்கு உங்கள் மனதை திறக்கும் அதே தேவனாக இருக்கிறார். தேவன் எப்போதும் அதை எளிதாக்குவார் என்று சொல்ல முடியாது. நாம் அவருடைய வார்த்தையைத் தேடவும், அதன் பொக்கிஷங்களை முழுமையாக ஆராயவும் வேண்டுமென தேவன் விரும்புகிறார். வேதாகமத்தைப் புரிந்துகொள்வது எளிதல்ல, ஆனால் அது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.
English
வேதாகமத்தைப் புரிந்துகொள்வது ஏன் மிகவும் கடினம்?