settings icon
share icon
கேள்வி

மத்தேயு 16:18 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாறை எது?

பதில்


கிறிஸ்து தமது சபையைக் கட்டியெழுப்பும் "பாறை" பேதுருவா அல்லது இயேசு "ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" (மத்தேயு 16:16) என்ற பேதுருவின் அறிக்கையா. எல்லா நேர்மையிலும், எந்தக் கருத்து சரியானது என்று நாம் உறுதியாகக் கூற வழி இல்லை. இந்த பகுதியின் கிரேக்க இலக்கண கட்டமைப்பு வேறொன்றைப் பார்க்க அனுமதிக்கிறது.

முதல் பார்வை என்னவென்றால், இயேசுவானவர் பேதுரு தமது சபையை கட்டும் "பாறை" என்று அறிவித்தார் என்பதாகும். இயேசு தாம் பயன்படுத்திய வார்த்தைகளில் ஒரு வார்த்தை ஜாலத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. "நீ பேதுருவாய் (பெட்ரோஸ்) இருக்கிறாய், இந்த பாறையின்மேல் (பெட்ரா) நான் என் சபையைக் கட்டுவேன்." பேதுருவின் பெயருக்கு "பாறை" என்று பொருள் இருப்பதால், இயேசு தனது சபையை ஒரு பாறையின் மீது கட்டப்போகிறார்—அதாவது இங்கே கிறிஸ்து இரண்டையும் ஒன்றாக இணைக்கிறார் என்று தோன்றுகிறது. சபையின் அஸ்திபாரத்தில் தேவன் பேதுருவை பெரிதும் பயன்படுத்தினார். பெந்தெகொஸ்தே நாளில் முதன் முதலில் நற்செய்தியை அறிவித்தவர் பேதுரு (அப் 2:14-47). சமாரியர்கள் முதன் முதலில் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது பேதுருவும் அங்கெ இருந்தார் (அப்போஸ்தலர் 8:14-17), மேலும் அவர் புறஜாதியினருக்கு நற்செய்தியை எடுத்துச் சென்றார் (அப்போஸ்தலர் 10:1-48). ஒரு வகையில், பேதுரு சபையின் பாறை "அஸ்திபாரம்".

பாறையைக் குறித்த பிற பிரபலமான விளக்கம் என்னவென்றால், இயேசு குறிப்பிடுவது பேதுருவை அல்ல, ஆனால் 16-வது வசனத்தில் பேதுரு கூறிய அறிக்கை ஆகும்: "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." இயேசு ஒருபோதும் பேதுருவுக்கும் மற்ற சீடர்களுக்கும் தனது அடையாளத்தின் முழுமையை வெளிப்படையாக கற்பிக்கவில்லை, மேலும் தேவன் இறையாண்மையுள்ளவராய் பேதுருவின் கண்களைத் திறந்து இயேசு உண்மையில் யார் என்பதை அவன் காணும்படிக்கு வெளிப்படுத்தினார் என்பதை பேதுரு உணர்ந்தார். தேவனுடைய குமாரனாக இயேசுவைக் குறித்த அறிக்கை அவரிடமிருந்து ஊற்றப்பட்டது, கிறிஸ்துவின் மீதான பேதுருவின் தனிப்பட்ட நம்பிக்கையின் இதயப்பூர்வமான அறிவிப்பு. கிறிஸ்துவின் மீதான இந்த தனிப்பட்ட நம்பிக்கையே உண்மையான கிறிஸ்தவனின் தனிச்சிறப்பாகும். பேதுருவைப் போல கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்த அனைவரும் சபையே. பேதுரு இந்த உண்மையை 1 பேதுரு 2:4-5 இல் வெளிப்படுத்துகிறார்: "மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்."

பேதுருவின் அறிக்கைக்குப் பிறகு, தேவன் பேதுருவுக்கு சத்தியத்தை வெளிப்படுத்தியதாக இயேசு அறிவிக்கிறார். "பேதுரு," பெட்ரோஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு சிறிய கல்" என்பதாகும் (யோவான் 1:42). இயேசு அதனுடன் தொடர்புடைய பெட்ரா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், அதாவது "அஸ்திபாரக் கல்". அதே வார்த்தையை மத்தேயு 7:24, 25 இல் இயேசு புத்தியுள்ள மனுஷன் தனது வீட்டை கட்டும் கற்பாறையை விவரித்தார். பேதுருவும் தனது முதல் நிருபத்தில் அதே உருவகத்தைப் பயன்படுத்துகிறார்: சபையானது ஏராளமான சிறிய பெட்ரோக்களால் கட்டப்பட்டுள்ளது, "ஜீவனுள்ள கற்கள்" (1 பேதுரு 2:5), இயேசு கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று பேதுருவின் அறிக்கையைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த விசுவாச அறிக்கை சபையின் அஸ்திபாரமாகும்.

கூடுதலாக, புதிய ஏற்பாடு கிறிஸ்து சபையில் அஸ்திபாரம் (அப். 4:11, 12; 1 கொரிந்தியர் 3:11) என்பதை தெளிவுபடுத்துகிறது. பேதுருவுக்கு இயேசு இந்த பாக்கியத்தை கொடுத்தார் என்று நினைப்பது தவறு. சபையைக் கட்டுவதில் அனைத்து அப்போஸ்தலர்களும் அஸ்திபாரத்தைப் போடும் பாத்திரத்தை வகித்தனர் (எபேசியர் 2:20), ஆனால் முதன்மை நிலை கிறிஸ்துவுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து "மூலைக்கு தலைக்கல்லாக" அழைக்கப்படுகிறார் (1 பேதுரு 2:6, 7; எபேசியர் 2:20; லூக்கா 20:17; அப்போஸ்தலர் 4:11). கிறிஸ்து மூலக்கல்லாக இருந்தால், பேதுரு எப்படி சபை கட்டப்பட்ட பாறையாக இருக்க முடியும்?

எனவே, மத்தேயு 16:18 இல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் சொற்களின் எளிய ஜாலமாக விளங்குகின்றன. "பேதுரு, நீ" சிறிய கல் "என்று அழைக்கப்படுகிறாய், ஆனால் உன் வாயிலிருந்து வந்த அறிக்கையாகிய ஒரு பாறாங்கல் போன்ற சத்தியம் சபையின் அஸ்திபாரமாக இருக்கும்."

ரோமன் கத்தோலிக்க திருச்சபை பேதுரு இயேசு குறிப்பிட்ட பாறை என்று வாதிடுகிறார்கள், பின்னர் அது ஒரு உண்மையான சாவை என்பதற்கு ஆதாரமாக அந்த விளக்கத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், நாம் பார்த்தபடி, பேதுரு அந்த பாறையாக இருப்பது மட்டும் சரியான விளக்கம் அல்ல. மத்தேயு 16:18 இல் பேதுரு பாறையாக இருந்தாலும், அது ரோமன் கத்தோலிக்க சபைக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காது. பேதுரு ரோமாபுரியில் இருப்பதை வேதம் எங்கும் பதிவு செய்யவில்லை. மற்ற அப்போஸ்தலர்கள் மீது பேதுரு அதிகாரம் கொண்டவர் அல்லது ஆரம்பகால சபையின் முதன்மைத் தலைவர் என்று வேதம் ஒருபோதும் விவரிக்கவில்லை. பேதுரு முதல் போப் அல்ல. கத்தோலிக்க திருச்சபையின் தோற்றம் பேதுரு அல்லது வேறு எந்த அப்போஸ்தலரின் போதனைகளிலும் இல்லை.

English



முகப்பு பக்கம்

மத்தேயு 16:18 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாறை எது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries