settings icon
share icon
கேள்வி

வேதாகமம் கண்ணோட்டம்

பதில்


இயேசு கிறிஸ்து நிச்சயம் திருமணம் செய்யவில்லை. மகதலேனாள் மரியாளுடன் இயேசு திருமணம் செய்துகொண்டார் என்கிற பிரபல்யமான கட்டுக்கதை இன்று இருக்கிறது. இந்த கட்டுக்கதை முற்றிலும் தவறானது மற்றும் தத்துவ ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ, அல்லது இறையியல் ரீதியாகவோ எந்தஒரு ஆதாரமும் இல்லாதவையாகும். ஒரு சில அறிவுசார்ந்த சுவிசேஷங்களில், இயேசு மகதலேனாளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறபோதிலும், அவர்களில் யாரும் குறிப்பாக இயேசு மகதலேனாள் மரியாளை இயேசு திருமணம் செய்து கொண்டார் என்றோ அல்லது அவளுடன் எந்தவிதமான காதல் லீலைகள் கொண்டிருந்தார் என்றோ குறிப்பிடுகிறதில்லை. அவர்களில் யாவரும் கூறும் நெருங்கி வருகிற காரியம் இயேசு மகதலேனாள் மரியாளை முத்தமிட்டார் என்பதாகும், ஆனால் அது ஒரு "நட்பான முத்தம்" என்று எளிதாகக் கூறமுடியும். மேலும், ஞானமார்க்க சுவிசேஷங்கள் நேரடியாக இயேசு மகதலேனாள் மரியாளை திருமணம் செய்திருந்தார் என்று கூறினாலும், அவர்களுக்கு அதற்கான அதிகாரப்பூர்வமான அதிகாரம் இல்லை. அதுமட்டுமன்றி, ஞானமார்க்க எல்லா சுவிசேஷங்களும் இயேசுவை ஞானமார்க்க பார்வையில் உருவாக்க முயல்கின்ற போலியான சுவிசேஷங்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயேசு ஒருவேளை திருமணம் செய்திருந்தால், வேதாகமம் நிச்சயமாக அதைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கும், அல்லது அந்த உண்மையைப் பற்றி தெளிவான நேரடிப் பொருள் கொண்டுள்ள நிலையில் அறிக்கை இருந்திருக்கும். அத்தகைய முக்கியமான விஷயத்தில் வேதவாக்கியங்கள் வெறுமனே முற்றிலும் மௌனமாக இருக்காது. இயேசுவின் தாய், வளர்ப்பு தந்தை, ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரர்கள், ஒன்றுவிட்ட உடன்பிறந்த சகோதரிகள் ஆகியோரை வேதாகமம் மிகதெளிவாக குறிப்பிடுகிறது. அப்படியிருக்க இயேசுவுக்கு மனைவி இருந்ததைப் பற்றி ஏன் சொல்லக்கூடாது? இயேசு திருமணம் செய்துகொண்டவர் என்று கற்பிப்பவர் / கற்றுக்கொள்பவர்கள் அவரை " மனிதனாக்குகிற" முயற்சியில் ஈடுபட்டு, அவரை சாதாரணமாக, உலகிலுள்ள எல்லோரையும் போலவே ஒரு மனிதனாக காண்பிக்க முற்படுகிறார்கள். இயேசு மாம்சத்தில் வந்த தேவன் என்று நம்புவதற்கு ஜனங்கள் விரும்பவில்லை (யோவான் 1:1, 14; 10:30). எனவே, அவர்கள் இயேசு திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தைகளைக் கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு சாதாரண சராசரி மனிதனாக இருப்பதாக காண்பிக்க அவர்களாகவே இப்படி உருவாக்கியிருக்கிறார்கள்.

இரண்டாம்நிலை கேள்வி என்னவெனில், "இயேசு கிறிஸ்துவால் திருமணம் செய்துகொண்டிருக்க முடியுமா?" என்பதாகும். திருமணம் செய்துகொள்வது ஒன்றும் பாவம் இல்லை. திருமணத்தில் இணைந்து பாலியல் உறவு (உடலுறவு) கொள்வதும் பாவம் இல்லை. எனவே, ஆம், இயேசு திருமணம் செய்துகொண்டிருக்கலாம், அப்படிச் செய்திருந்தாலும் அவர் உலகத்தின் இரட்சகராகவும் பாவமற்ற தேவாட்டுக்குட்டியாகவுமே இருந்திருப்பார். அதே சமயத்தில், இயேசு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு காரணமும் வேதாகமத்தில் இல்லை. இந்த விவாதத்தில் அது ஒரு விஷயமல்ல. இயேசுவை திருமணம் செய்தவர் என்று நம்புபவர்கள் அவர் பாவமற்றவர் என்றும் அல்லது அவர் மேசியா என்றும் நம்பவில்லை. தேவன் இயேசுவை இந்த உலகத்தில் அனுப்பியது அவர் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்காக அல்ல. இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார் என்று மாற்கு 10:45 நமக்குக் கூறுகிறது, “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.”

English



முகப்பு பக்கம்

வேதாகமம் கண்ணோட்டம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries