கேள்வி
தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?
பதில்
தேவன் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24), எனவே அவரது தோற்றம் நாம் விவரிக்கக்கூடிய எதையும் போல் இல்லை. யாத்திராகமம் 33:20 நமக்கு சொல்கிறது, "நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்." பாவமுள்ள மனிதர்களாகிய நாம் தேவனை அவருடைய எல்லா மகிமையிலும் உள்ளவராக பார்க்க இயலாது. அவரது தோற்றம் முற்றிலும் கற்பனை செய்ய முடியாதது மற்றும் மிகவும் மகிமைப் பொருந்தியது, பாவியாக இருக்கும் மனிதனால் அவ்வளவு பாதுகாப்பாக கண்டுணர முடியாது.
தேவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களுக்கு தோன்றுவதாக வேதாகமம் விவரிக்கிறது. இந்த நிகழ்வுகள் யாவும் தேவன் எப்படி இருக்கிறார் என்பதை விவரிக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ள அல்லது புரிந்து கொள்ளக்கூடாது, மாறாக அவை தேவன் நமக்கு புரியும் வகையில் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். தேவன் எப்படி இருக்கிறார் என்பது நாம் புரிந்துகொள்வதற்கும் விவரிப்பதற்கும் அப்பாற்பட்டது ஆகும். தேவன் நம்மைப் பற்றிய உண்மைகளை நமக்கு கற்பிக்க அவர் எப்படி இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார், அதற்காக அவரை நம் மனதில் இப்படித்தாய் இருக்கிறார் என ஒரு உருவமாக்கிவிட முடியாது. தேவனுடைய அற்புதமான தோற்றத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் விவரிக்கும் இரண்டு வேதப்பகுதிகள் எசேக்கியேல் 1:26-28 மற்றும் வெளிப்படுத்துதல் 1:14-16 ஆகும்.
எசேக்கியேல் 1:26-28 அறிவிக்கிறது, " அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.” வெளி. 1:14-16 கூறுகிறது, "அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.”
இந்த வேதப்பகுதிகள் தேவனுடைய தோற்றத்தை விவரிக்கும் எசேக்கியல் மற்றும் யோவானின் சிறந்த முயற்சிகளைக் குறிக்கின்றன. தேவனை விவரிக்க மனித மொழியில் வார்த்தைகள் இல்லை என்பதாள் அவர்கள் குறியீட்டு மொழியைப் பயன்படுத்த வேண்டியதாயிருந்தது; அதாவது, "அப்படி தோன்றியது," "தோற்றத்தைப் போல", "அவர் தோற்றமளித்தார்," முதலியன. நாம் பரலோகத்தில் இருக்கும்போது, "அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம்" (1 யோவான் 3:2). இனி பாவம் இருக்காது, தேவனை அவருடைய சகல மகிமையிலும் நம்மால் உணர முடியும்.
English
தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?