கேள்வி
வேதாகமம் என்றால் என்ன?
பதில்
"பைபிள்" என்கிற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளிலிருந்து "புத்தகம்" என்ற பொருளில் வருகிறது, ஏனென்றால் வேதாகமமானது எல்லாக் காலத்திற்கும் ஒரு புத்தகம் என்பதால் இப்படி வருகிறது. இதுபோன்ற ஒரு புத்தகம் உலகில் வேறெதுவும் இல்லை.
அறுபத்தாறு வெவ்வேறு புத்தகங்கள் இணைந்த ஒரு புத்தகமாக வேதாகமம் இருக்கிறது. அவை லேவியராகமம் மற்றும் உபாகமம் போன்ற சட்ட புத்தகங்களைக் கொண்டுள்ளன; எஸ்றா மற்றும் அப்போஸ்தலருடைய நடபடிகள் போன்ற வரலாற்று நூல்கள்; சங்கீதம் மற்றும் பிரசங்கி போன்ற கவிதை நூல்கள்; ஏசாயா மற்றும் வெளிப்படுத்துதல் போன்ற தீர்க்கதரிசன புத்தகங்கள்; மத்தேயு மற்றும் யோவான் போன்ற வாழ்க்கை வரலாறுகள்; தீத்து மற்றும் எபிரெயர் போன்ற நிருபங்கள் (கடிதங்கள்).
எழுத்தாளர்கள்
கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மனித எழுத்தாளர்கள் சுமார் 1500 வருட காலப்பகுதியில் எழுதப்பட்ட புத்தகங்களால் வேதாகமத்திற்கு வழங்கினார்கள். இந்த எழுத்தாளர்கள், ராஜாக்கள், மீனவர்கள், ஆசாரியர்கள், அரசாங்க அதிகாரிகள், விவசாயிகள், மேய்ப்பர்கள், மருத்துவர்கள் ஆகியோர் அடங்கும். இந்த அனைத்து வேறுபாடு இருந்தும் நம்பமுடியாத வகையில் அவர்கள் எழுதிய காரியங்களில் ஒற்றுமை வருகிறது, அவர்களுக்கு ஒரே பொதுவான கருப்பொருள்கள் இருந்தன.
வேதாகமத்தின் இந்த ஒற்றுமைக்கு காரணம் முடிவான நிலையில் இதன் ஒரேஒரு எழுத்தாளர் தேவன் மட்டுமே என்பதாகும். வேதாகமம் "தேவனுடைய-சுவாசமாகும்" (2 தீமோத்தேயு 3:16). மனித எழுத்தாளர்கள் தேவன் எழுத விரும்பியதை மிகச்சரியாக எழுதினார்கள், இதன் விளைவு தேவனது பரிபூரணமான பரிசுத்த வார்த்தையாக வேதாகமம் இருந்தது (சங்கீதம் 12:6; 2 பேதுரு 1:21).
பிரிவுகள்
வேதாகமம் இரண்டு பெரும் முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. சுருக்கமாக, பழைய ஏற்பாடு ஒரு தேசத்தின் கதை, புதிய ஏற்பாடு ஒரு மனிதனின் கதை. தேவன் மனுஷனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு கொண்டு வருவதற்கான வழியாக தேசம் இருந்தது.
பழைய ஏற்பாடு இஸ்ரவேல் தேசத்தை ஸ்தாபித்து பாதுகாப்பதை விவரிக்கிறது. உலகம் முழுவதையும் ஆசீர்வதிப்பதற்காக இஸ்ரவேலைப் பயன்படுத்துவதாக தேவன் வாக்குறுதி அளித்தார் (ஆதியாகமம் 12:2-3). இஸ்ரவேல் ஒரு தேசமாக நிறுவப்பட்டபோது, தமது ஆசிர்வாதம் வரத்தக்கதாக தேவன் அந்த தேசத்திலிருந்து ஒரு குடும்பத்தை எழுப்பினார்: தாவீதின் குடும்பம் (சங்கீதம் 89:3-4). பிறகு, வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதத்தை கொண்டுவரும் ஒரு மனிதனை தாவீதின் குடும்பத்தாரோடு வாக்குறுதி செய்தார் (ஏசாயா 11:1-10).
வாக்களிக்கப்பட்ட வரவிருக்கும் அந்த மனிதனின் விவரங்கள் யாவும் புதிய ஏற்பாடு கொண்டுள்ளது. அவரது பெயர் இயேசு, மற்றும் அவர் ஒரு பரிபூரண வாழ்க்கை வாழ்ந்து பழைய ஏற்பாடு பற்றிய கணிப்புகள் யாவையும் பூர்த்திசெய்து, இரட்சகராக இருப்பதற்காய் மரித்து, மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
மைய பாத்திரம்
வேதாகமத்தில் இயேசு முக்கியமான பாத்திரமாக இருக்கிறார் - முழு புத்தகமும் அவரைப் பற்றியது. பழைய ஏற்பாடு அவரது வருகையை முன்னறிவிக்கிறது மற்றும் உலகிற்குள் அவரது நுழைவுக்கான அரங்கத்தை அமைக்கிறது. புதிய ஏற்பாடு அவரது வருகை மற்றும் நம்முடைய பாவ உலகத்தை இரட்சிப்பதற்கான அவருடைய செயல்களை விவரிக்கிறது.
இயேசு ஒரு வரலாற்று நபர் என்பதைக்காட்டிலும் மேலானவராகும்; உண்மையில், அவர் ஒரு மனிதனை விட மேலானவர். அவர் மாம்சத்தில் வந்த தேவன், மற்றும் அவரது வருகை உலக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இருந்தது. தேவன் யார் அவர் எப்படிபட்டவர் என்று நமக்கு தெளிவான, புரிந்துகொள்ளக்கூடிய சித்திரத்தை கொடுத்த ஒரு மனிதனானார். தேவன் எப்படி இருக்கிறார்? அவர் இயேசுவைப் போல இருக்கிறார்; இயேசு மனித வடிவத்தில் தேவன் (யோவான் 1:14; 14:9).
ஒரு சுருக்கம்
தேவன் மனிதனை உருவாக்கி, ஒரு பரிபூரண சூழலில் அவனை வைத்தார்; இருப்பினும், மனிதன் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தான், தேவன் அவனை நோக்கிக் கொண்டிருந்ததில் இருந்து விழுந்து போனான. தேவன் பாவத்தின் நிமித்தமாக இந்த உலகத்தை ஒரு சாபத்தின் கீழ் வைத்தார், பிறகு உடனடியாக மனிதகுலத்தை மீட்பதற்கான ஒரு திட்டத்தை அமைத்தார், அதனுடைய அசல் மகிமைக்கு அனைத்து படைப்புகளும் அமைக்கப்பட்டன.
அவருடைய மீட்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவன் ஆபிரகாமை பாபிலோனியாவிலிருந்து கானானுக்கு அழைத்தார் (சுமார் கி.மு. 2000). தேவன் ஆபிரகாம், அவனது மகன் ஈசாக்கையும் மற்றும் அவனது பேரன் யாக்கோபுவையும் (இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டார்) குறித்த வாக்குத்தத்தத்தை அளித்தார். இஸ்ரவேல் குடும்பம் கானானிலிருந்து எகிப்திற்கு குடியேறியது, அங்கு அவர்கள் ஒரு தேசமாக வளர்ந்தார்கள்.
பின்பு ஏறக்குறைய கி.மு. 1400-ல், தேவன் மோசேயின் மூலமாக எகிப்திலிருந்து இஸ்ரவேல் சந்ததியினர் புறப்பட வழிவகுத்து மற்றும் அவர்களுக்கு வாக்குறுதி அளித்த தேசமாகிய கானானுக்கு போக வழி நடத்தினார். மோசே மூலம், தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார், தேவன் அவர்களோடு உடன்படிக்கை செய்தார். அவர்கள் சுற்றியுள்ள தேசங்களின் விக்கிரகாராதனையைப் பின்பற்றாமல் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பார்கள் என்றால், அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்கள் தேவனை விட்டுவிட்டு விக்கிரகங்களைப் பின்பற்றியிருந்தால், தேவன் ஜனங்களை அழித்துப்போடுவார்.
சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, தாவீதும் அவருடைய குமாரனாகிய சாலமோனும் இருந்த காலத்தில் இஸ்ரேல் ஒரு பெரிய, சக்தி வாய்ந்த ராஜ்யமாக மாறியது. தாவீதுக்கும் சாலமோனிற்கும் ஒரு சந்ததியார் ஒரு நித்திய ராஜாவாக ஆட்சி செய்வார் என்று தேவன் வாக்குக் கொடுத்தார்.
சாலொமோன் ஆட்சிக்குப்பின், இஸ்ரவேல் தேசம் பிரிக்கப்பட்டது. வடக்கில் பத்து கோத்திரங்கள் சேர்ந்து "இஸ்ரவேல்" என்று அழைத்தனர். அவர்களுடைய விக்கிரகாராதனைக்காக தேவன் அவர்களை நியாயந்தீர்க்கும் வரையிலும் சுமார் 200 ஆண்டுகளுக்கு அவர்கள் வாழ்ந்தார்கள். அசீரியா வடக்கு தேசமாகிய இஸ்ரவேலை பின்தொடர்ந்து கி.மு. 721-ல் சிறைப்படுத்தி கொண்டுபோனார்கள். தெற்கேயுள்ள இரண்டு கோத்திரங்கள் சேர்ந்து "யூதா" என்று அழைக்கப்பட்டார்கள், அவர்கள் கொஞ்ச காலத்திற்கு நீடித்திருந்தார்கள், ஆனால் இறுதியில் அவர்கள் தேவனிடமிருந்து திரும்பினர். இறுதியில் பாபிலோனியர்கள் கி.மு. 600-ல் பாபிலோனுக்கு சிறைப்படுத்தி கொண்டுபோனார்கள்.
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைப்பட்டவர்களுடைய மீதியானோர் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி செல்ல தேவன் இரக்கம் காட்டினார். தலைநகரான எருசலேம், கி.மு. 444-ல் மீண்டும் கட்டப்பட்டது, இஸ்ரேல் மீண்டும் ஒரு தேசிய அடையாளத்தை நிறுவியது. இவ்வாறு பழைய ஏற்பாடு முடிகிறது.
புதிய ஏற்பாடு சுமார் 400 வருடங்களுக்குப் பிறகு பெத்லகேமில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் திறக்கிறது. இயேசு ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் வாக்குறுதி அளிக்கப்பட்டவராக, மனிதகுலத்தை மீட்பதற்காகவும், சிருஷ்டிப்பை மீட்கும்படியும் வந்து தேவனின் திட்டத்தை நிறைவேற்றினார். இயேசு உண்மையுடன் தமது வேலையை முடித்தார் - பாவத்திற்கு மரித்தார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார். கிறிஸ்துவின் மரணம் புதிய உடன்படிக்கைக்கு (ஏற்பாட்டிற்கு) உலகிற்குள்ள அடிப்படையாகும். இயேசுவை விசுவாசிக்கிற எவனும் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு நித்தியமாய் வாழுவான்.
அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசு தம்முடைய சீஷர்களை தம் வாழ்விலும், அவருடைய வல்லமையிலும் இரட்சிப்பதற்கான செய்தியை எங்கும் அறிவிக்க அனுப்பினார். இயேசுவின் சீடர்கள் இயேசுவின் நற்செய்தியைப் பரப்புவதற்கும் இரட்சிப்புக்கும் ஒவ்வொரு திசையிலும் சென்றனர். அவர்கள் ஆசியா மைனர், கிரீஸ், மற்றும் அனைத்து ரோம சாம்ராஜ்யம் வழியாகப் பயணம் செய்தார்கள். புதிய ஏற்பாடு அவிசுவாச உலகத்தை நியாயந்தீர்க்கவும், சாபத்திலிருந்து விடுதலையை உருவாக்குவதற்கும் இயேசு திரும்பி வரப்போகிறத்தைப் பற்றிய முன்னறிவிப்புடன் முடிகிறது.
English
வேதாகமம் என்றால் என்ன?