கேள்வி
சாத்தான் யார்?
பதில்
சாத்தானைக் குறித்த ஜனங்களுடைய நம்பிக்கை பல நிலைகளில் வேடிக்கையானதாக இருக்கிறது. ஒரு சிறிய சிவப்பு நிறமான மனிதன் இரண்டு கொம்புகளோடு தோல்பட்டையின் மீது உட்கார்ந்துக் கொண்டு பாவம் செய்யும்படி தூண்டுவான் என்பதிலிருந்து தீமைக்கு உருவம் கொடுத்து அதைதான் சாத்தான் என்கிறோம் என்கிற கருத்து வரை நிலவுகிறது. வேதாகமம் நமக்கு சாத்தானை குறித்த தெளிவான படத்தையும் அவன் எப்படி நம் வாழ்க்கையை பாதிப்பான் என்பதையும் கூறுகின்றது. எளிதாகக் கூற வேண்டுமானால், வேதாகமம் சாத்தானை ஒரு தூதன் தன்னுடைய ஸ்தானத்தைவிட்டு பாவம் செய்து பரலோகத்திலிருந்து விழுந்துபோய் இப்போது தேவனுக்கு விரோதமாக தேவனுடைய திட்டங்களை அழிக்க தன்னுடைய முழுபெலத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறுகின்றது.
சாத்தான் ஒரு பரிசுத்த தூதனாக சிருஷ்டிக்கப்பட்டான். ஏசாயா 14:12 சாத்தான் விழுவதற்கு முன்பாக அவனுடைய பெயர் லூசிபர் என்று கூறுகின்றது. எசேக்கியேல் 28:12-14 சாத்தான் ஒரு கேருபீனாகவும் தூதர்களில் மிக உயர்ந்தவனாகவும் சிருஷ்டிக்கப்பட்டவன் என்று கூறுகின்றது. அவனுடைய அழகிலேயும் அந்தஸ்திலேயும் அகந்தைக்கொண்டு தேவனுடைய சிங்காசனத்தைவிட உயரத்தில் அமர எண்ணினான் (ஏசாயா 14:13-14; எசேக்கியேல் 28:15; 1 தீமோத்தேயு 3:6). சாத்தானின் பெருமையே அவனைக்கீழே விழத்தள்ளினது. ஏசாயா 14:12-15 வரையுள்ள வசனங்களில் “நான்” என்று அடிக்கடி வருகிற பதத்தைக் கவனியுங்கள். அவனுடைய பாவத்தினாலேயே தேவன் அவனை பரலோகத்திலிருந்து விலக்கினார்.
சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியாகவும், இப்பிரபஞ்சத்தின் தேவனாகவும் பிரபுவாகவும் மாறினான் (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 22). அவன் குற்றஞ்சாட்டுகிறவன் (வெளிப்படுத்தின விசேஷம் 12:10) சோதனைக்காரன் (மத்தேயு 4:3; 1 தெசலோனிக்கேயர் 3:5), வஞ்சிக்கிறவன் (ஆதியாகமம் 3; 2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்தின விசேஷம் 20:3). அவனுடைய பெயரின் அர்த்தமே “எதிராளி” அல்லது “எதிர்த்து நிற்கிறவன்” என்பதாகும். அவனுடைய மற்றொரு பெயரான “பிசாசு” என்பதற்கு “பழிதூற்றுபவன்” என்று அர்த்தப்படும்.
அவன் பரலோகத்திலிருந்து விழுந்த பின்பும் தன்னுடைய சிங்காசனத்தை தேவனுக்கு மேலே உயர்த்துவதையே குறிக்கோளாக தேடிக்கொண்டிருக்கிறான். தேவன் செய்கிற எல்லாவற்றிற்கும் போலியானவனாக செயல்பட்டு தேவனுக்கு எதிர்த்து நின்று, உலகத்தின் ஆராதனையை பெறலாம் என்று நம்பி, தேவனுடைய ராஜ்யத்திற்கு விரோதமானவைகளை ஊக்குவிக்கிறான். உலகத்திலுள்ள அனைத்து தவறான ஆராதனைகள் மற்றும் கள்ள சமயங்களுக்கு பிரதானமான மூலக்காரணமே சாத்தான்தான். சாத்தான் தேவனையும் அவரை பின்பற்றுகிறவர்களையும் எதிர்க்க எதை வேண்டுமானாலும் எல்லாவற்றையும் செய்வான். எனினும், சாத்தானின் முடிவு உறுதியானது, அவன் நித்தியத்திற்கும் அக்கினி கடலிலே வாதிக்கப்படுவான் (வெளிப்படுத்தின விசேஷம் 20:10).
English
சாத்தான் யார்?