கேள்வி
தேவனை சிருஷ்டித்தவர் யார்? தேவன் எங்கிருந்து எங்கிருந்து வந்தார்?
பதில்
தேவன் இல்லையென்று கூறுபவர்களும் சந்தேகவாதிகளும் எழுப்புகிற ஒரு பொதுவாக விவாதம் என்னவெனில் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு மூலக்காரணம் இருக்குமேயானால் தேவனுக்கும் ஒரு மூலக்காரணம் அவசியம் இருக்கவேண்டும் என்பதாகும். முடிவு என்னவென்றால் ஒருவேளை தேவனுக்கு மூலக்காரணம் தேவைப்பட்டால் அவர் தேவனாகவே இருக்க முடியாது. (அப்படி தேவன் தேவனாக இராவிட்டால் தேவனே கிடையாது) “தேவனை யார் சிருஷ்டித்தது?” என்ற அடிப்படை கேள்வியைவிட இது மிகவும் சிக்கலான கேள்வி. ஒன்றுமில்லாமையிலிருந்து எதுவும் வராது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். 'தேவன் ஏதோ ஒன்றானால்' அவருக்கு மூலக்காரணம் இருக்க வேண்டும் அல்லவா?
இந்த கேள்வி தந்திரமானது ஆகும், ஏனென்றால் தேவன் எங்கிருந்தோ வந்தார் என்ற பொய்யான யூகத்தை உருவாக்கி அது எங்கிருந்திருக்கும் என்றும் கேட்கிறது. இதற்கு பதில் என்னவென்றால் இந்த கேள்வியே முட்டாள்தனமானது என்பதுதான். இது எப்படி இருக்கிறது என்றால் “நீல நிறம் எப்படி மணக்கும்?” என்று கேட்பது போல் இருக்கின்றது. மணக்கக்கூடிய ஒரு வகையான பொருள் அல்ல நீல நிறம். எனவே இந்த கேள்வியே முற்றிலும் தவறானது. அதேபோல தேவன் என்பவர் உண்டாக்கப்படுகின்ற ஒரு பொருளுமல்ல. மூலக்காரணம் உடைய வகையைச் சேர்ந்தவர் அல்ல. தேவன் உருவாக்கப்பட முடியாதவர், மூலக்காரணத்தை உடையவருமில்லை. அவர் இருக்கிறவராகவே இருக்கிறார்.
இது நமக்கு எப்படி தெரியும்? ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றுமில்லாமை வராது. ஒன்றுமில்லாமை என்ற ஒரு காலகட்டம் இருந்திருக்குமேயானால் நாம் காண்கின்ற எதுவுமே இருந்திருக்காது. ஆனால் இவையெல்லாம் இருக்கின்றதே. ஆகவே எதுவுமே இல்லாத வெறுமை நிலை என்று எதுவும் இருந்திருக்க முடியாது. ஏதோ ஒன்று எப்போதுமே இருந்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அது எப்போதுமே இருந்து கொண்டு இருக்கிற பொருளைத்தான் நாம் தேவன் என்கிறோம். தேவன் என்பவர் மூலக்காரணமில்லாத ஒருவர் ஆவார், அவரிலிருந்துதான் எல்லாமே தோன்றியது. தேவன் என்பவர் உருவாக்கப்படாத சிருஷடிகர் ஆவார், அவரே இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள யாவற்றையும் சிருஷ்டித்தவர்.
English
தேவனை சிருஷ்டித்தவர் யார்? தேவன் எங்கிருந்து எங்கிருந்து வந்தார்?