கேள்வி
தேவன் யார்? தேவன் என்றால் என்ன? தேவனை நாம் எப்படி அறிந்துகொள்வது?
பதில்
தேவன் யார்? - உண்மை
தேவனுடைய இருப்பின் உண்மை, படைப்பின் மூலமும் மனிதனின் மனசாட்சியின் மூலமும் மிகவும் தெளிவாக உள்ளது, வேதாகமம் தேவன் இல்லை என்று கூறுகிற நாத்திகனை "மதிகெட்டவன்" என்று அழைக்கிறது (சங்கீதம் 14:1). அதன்படி, தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேதாகமம் ஒருபோதும் முயற்சிப்பதில்லை; மாறாக, அது ஆரம்பத்திலிருந்தே அவருடைய இருப்பைக் கருதுகிறது (ஆதியாகமம் 1:1). வேதாகமம் செய்வது தேவனுடைய தன்மை, பண்பு மற்றும் கிரியையை வெளிப்படுத்துவதாகும்.
தேவன் யார்? - வரையறை
தேவனைப் பற்றிய தவறான சிந்தனை சிலை வழிபாடு (விக்கிரக ஆராதனை) என்பதால் தேவனைப் பற்றி சரியாக சிந்திப்பது மிகவும் முக்கியம் ஆகும். சங்கீதம் 50:21 இல், கடவுள் இந்த குற்றச்சாட்டைக் கொண்டு பொல்லாத மனிதனைக் கண்டிக்கிறார்: "உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்." தேவனைப் பற்றிய ஒரு நல்ல சுருக்கமான வரையறை தொடங்குவதற்கு, "உன்னதமானவர்; எல்லாவற்றையும் உருவாக்கியவர் மற்றும் ஆளுகிறவர்; வல்லமை, நற்குணம் மற்றும் ஞானத்தில் பரிபூரணமாய் இருப்பவர்.
தேவன் யார்? - அவரது தன்மை
ஒரு காரணத்திற்காக சில விஷயங்கள் தேவனைக்குறித்து மெய்யாய் இருப்பதை நாம் அறிவோம்: அவருடைய இரக்கத்தில் அவர் தனது சில குணங்களை நமக்கு வெளிப்படுத்த ஒப்புக்கொண்டார். சுபாவத்தில் தேவன் தொட்டுணர முடியாத ஆவியாயிருக்கிறார் (யோவான் 4:24). தேவன் ஒருவர், ஆனால் அவர் மூன்று நபர்களாக இருக்கிறார்—பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன் (மத்தேயு 3:16-17). தேவன் எல்லையற்றவர் (1 தீமோத்தேயு 1:17), ஒப்பற்றவர் (2 சாமுவேல் 7:22) மற்றும் மாறாதவர் (மல்கியா 3:6). தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார் (சங்கீதம் 139: 7-12), எல்லாவற்றையும் அறிந்தவர் (மத்தேயு 11:21), மற்றும் சர்வ வல்லமையும் அதிகாரமும் உள்ளவர் (எபேசியர் 1; வெளிப்படுத்துதல் 19:6).
தேவன் யார்? - அவரது பண்பு
வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சில பண்புகள் இங்கே: தேவன் நீதியுள்ளவர் (அப்போஸ்தலர் 17:31), அன்பானவர் (எபேசியர் 2:4-5), சத்தியமுள்ளவர் (யோவான் 14:6) மற்றும் பரிசுத்தமானவர் (1 யோவான் 1:5). தேவன் மனதுருகிறார் (2 கொரிந்தியர் 1:3), இரக்கமுள்ளவர் (ரோமர் 9:15) மற்றும் கிருபையுள்ளவர் (ரோமர் 5:17). தேவன் பாவத்தை நியாயந்தீர்ப்பார் (சங்கீதம் 5:5) ஆனால் மன்னிப்பையும் அளிக்கிறார் (சங்கீதம் 130:4).
தேவன் யார்? - அவரது கிரியை
தேவனுடைய கிரியைகளைத் தவிர நம்மால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் தேவன் என்ன செய்கிறார் என்பது அவர் யார் என்பதிலிருந்து வருகிறதாய் இருக்கிறது. தேவனுடைய கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் கிரியைகள் குறித்ததான சுருக்கமான பட்டியல் இங்கே: தேவன் உலகைப் படைத்தார் (ஆதியாகமம் 1:1; ஏசாயா 42:5); அவர் உலகத்தை தீவிரமாக பராமரிக்கிறார் (கொலோசெயர் 1:17); அவர் தனது நித்திய திட்டத்தை செயல்படுத்துகிறார் (எபேசியர் 1:11) இது பாவம் மற்றும் மரணத்தின் சாபத்திலிருந்து மனிதனுக்கு அவர் வழங்கும் மீட்பையும் உள்ளடக்கியது (கலாத்தியர் 3:13-14); அவர் மக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருகிறார் (யோவான் 6:44); அவர் தனது பிள்ளைகளை சீர்பொருந்தப்பண்ணுகிறார் (எபிரெயர் 12:6); அவர் உலகத்தை நியாயந்தீர்ப்பார் (வெளிப்படுத்துதல் 20:11-15).
தேவன் யார்? - அவருடனான உறவு
குமாரனில், தேவன் மனிதனாக மாம்சத்தில் அவதாரம் எடுத்தார் (யோவான் 1:14). தேவனுடைய குமாரன் மனுஷகுமாரனாக ஆனார், ஆகையால் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே "பாலம்" ஆனார் (யோவான் 14:6; 1 தீமோத்தேயு 2:5). குமாரனால் மட்டுமே நாம் பாவங்களை மன்னிக்க முடியும் (எபேசியர் 1:7), தேவனுடனான ஒப்புரவாதல் (யோவான் 15:15; ரோமர் 5:10) மற்றும் நித்திய இரட்சிப்பு (2 தீமோத்தேயு 2:10) ஆகியவற்றை வழங்கினார். இயேசு கிறிஸ்துவில் "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது" (கொலோசெயர் 2:9). எனவே, உண்மையில் தேவன் யார் என்பதை அறிய, நாம் செய்ய வேண்டியது எல்லாம் இயேசுவைப் பார்க்க வேண்டியதுதான், அவரே தேவனின் பரிபூரண வெளிப்பாடு.
English
தேவன் யார்? தேவன் என்றால் என்ன? தேவனை நாம் எப்படி அறிந்துகொள்வது?