கேள்வி
நாம் பரிசுத்த ஆவியானவரை ஆராதிக்க வேண்டுமா?
பதில்
தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும் (யாத்திராகமம் 34:14 மற்றும் வெளிப்படுத்துதல் 22:9 ஐப் பார்க்கவும்). தேவன் மட்டுமே ஆராதனைக்குத் தகுதியானவர். பரிசுத்த ஆவியானவரை நாம் வணங்க வேண்டுமா என்ற கேள்விக்கு ஆவியானவர் தேவனா என்பதை தீர்மானிப்பதன் மூலம் பதிலளிக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் தேவனாக இருந்தால், அவர் ஆராதிக்கப்பட வேண்டும் எனலாம்.
வேதம் பரிசுத்த ஆவியானவரை வெறுமனே ஒரு "சக்தியாக" அல்லாமல் ஒரு நபராக அளிக்கிறது. ஆவியானவர் தனிப்பட்ட முறையில் ஆள்தன்மையுள்ளவராக குறிப்பிடப்படுகிறார் (யோவான் 15:26; 16:7-8, 13-14). அவர் பேசுகிறார் (1 தீமோத்தேயு 4:1), அவர் நேசிக்கிறார் (ரோமர் 15:30), அவர் தேர்வு செய்கிறார் (அப்போஸ்தலர் 13:2), அவர் போதிக்கிறார் (யோவான் 14:26), அவர் வழிகாட்டுகிறார் (அப்போஸ்தலர் 16:7). அவருக்கு எதிராக பொய் சொல்லப்படலாம் (அப்போஸ்தலர் 5:3–4) மற்றும் அவர் துக்கப்படுகிறார் (எபேசியர் 4:30).
பரிசுத்த ஆவியானவர் தெய்வத்தின் தன்மையைக் கொண்டிருக்கிறார் - அவர் தேவனுடைய பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் நித்தியமானவர் (எபிரெயர் 9:14). அவர் எங்கும் நிறைந்தவர் (சங்கீதம் 139:7-10) மற்றும் எல்லாம் அறிந்தவர் (1 கொரிந்தியர் 2:10-11). அவர் உலகின் சிருஷ்டிப்பில் ஈடுபட்டார் (ஆதியாகமம் 1:2). பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் குமாரனுடன் நெருக்கமான தொடர்பை அனுபவிக்கிறார் (மத்தேயு 28:19; யோவான் 14:16). நாம் யாத்திராகமம் 16:7 ஐ எபிரெயர் 3:7-9 உடன் ஒப்பிடும்போது, பரிசுத்த ஆவியானவரும் யேகோவாவும் ஒன்றே என்பதை நாம் காண்கிறோம் (அப். 28:25 உடன் ஒப்பிடும்போது ஏசாயா 6:8 ஐயும் பார்க்கவும்).
பரிசுத்த ஆவியானவர் தேவன், மற்றும் தேவன் "ஸ்துதித்தலுக்கு தகுதியானவர்" (சங்கீதம் 18:3) என்பதால், ஆவியானவர் ஆராதனைக்குத் தகுதியானவர் ஆவார். தேவனுடைய குமாரனான இயேசு ஆராதனையைப் பெற்றார் (மத்தேயு 28:9), எனவே தேவனுடைய ஆவியானவரும் ஆராதனையைப் பெறுகிறார் என்பதற்கு இது காரணம். பிலிப்பியர் 3:3 விசுவாசிகள் "ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற" என்று கூறுகிறது. மூன்று நபர்களில் ஒரேஒரு தேவன் என்றென்றும் இருக்கிறார். நாம் தேவனை வணங்கும்போது, இயற்கையாகவே கடவுளின் மூன்று உறுப்பினர்களையும் ஆராதிக்கிறோம்.
பரிசுத்த ஆவியானவரை நாம் எப்படி ஆராதிப்பது? அதே வழியில் நாம் பிதாவையும் குமாரனையும் ஆராதிக்கிறோம். கிறிஸ்தவ ஆராதனை ஆவிக்குரியது, அது பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த செயல்பாடுகளிலிருந்து பாய்கிறது, அதற்கு நாம் நம் வாழ்க்கையை அவருக்கு வழங்குவதன் மூலம் பதிலளிக்கிறோம் (ரோமர் 12:1). அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் ஆவியானவரை ஆராதிக்கிறோம். கிறிஸ்துவைக் குறிப்பிட்டு, அப்போஸ்தலனாகிய யோவான் விளக்குகிறார், "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:24). கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்கும், நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையேயான தொடர்பை நாம் இங்கே காண்கிறோம், கீழ்ப்படிவதன் மூலம் ஆராதிப்பதற்கான நமது தேவையை நமக்கு உணர்த்தி, ஆராதிக்க நமக்குப் பெலன் அளிக்கிறார்.
English
நாம் பரிசுத்த ஆவியானவரை ஆராதிக்க வேண்டுமா?