settings icon
share icon
கேள்வி

தேவன் நமக்கு ஏன் நான்கு சுவிசேஷங்களைக் கொடுத்தார்?

பதில்


ஒரு சுவிசேஷ புத்தகத்திற்குப் பதிலாக தேவன் நமக்கு ஏன் நான்கு சுவிசேஷ புத்தகங்களை கொடுத்தார் என்பதற்கான சில காரணங்கள் இதோ:

1) கிறிஸ்துவைக் குறித்த முழுமையான சித்திரத்தைக் கொடுக்கிறது. முழு வேதாகமமும் தேவனால் அருளப்பட்டபோதும் (2 தீமோத்தேயு 3:16), மனித எழுத்தாளர்களை வெவ்வேறு பின்னணி மற்றும் தனிப்பட்டவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம் தேவன் பயன்படுத்தினார். சுவிசேஷ புத்தகங்களின் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் அவரது நற்செய்தியின் பின்னணியிலும், அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் ஒரு வித்தியாசமான கோணம் மற்றும் நோக்கம் இருந்தது, ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவின் நபர் மற்றும் ஊழியத்தின் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.

மத்தேயு ஒரு எபிரெய வாசகர்களுக்கு எழுதுகிறார், அதாவது அவருடைய நோக்கங்களில் ஒன்று, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களிலிருந்து இயேசுவை நீண்ட காலமாக எதிர்பார்த்த மேசியா என்று நிரூபிக்க வேண்டியிருந்தது, இவ்வாறு அவர் அவர்களால் விசுவாசிக்கப்பட வேண்டும். மத்தேயுவின் முக்கியத்துவம் இயேசுவின் வாக்குறுதியாக இருக்கிறது அதாவது இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் "தாவீதின் குமாரனாகிய" ராஜா (மத்தேயு 9:27; 21:9).

பர்னபாவின் உறவினரான மாற்கு (கொலோசெயர் 4:10), கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கலுக்கு நேரில் கண்ட சாட்சியாகவும் மற்றும் அப்போஸ்தலனாகிய பேதுருவின் நண்பராகவும் இருந்தார். யூத வாசகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாகிய மரபுகள், கிறிஸ்துவின் சர்ச்சைகள், அவருடைய நாளின் யூதத் தலைவர்களுடனான சர்ச்சைகள், பழைய ஏற்பாட்டிற்கு அடிக்கடி குறிப்பிடுவது போன்றவைகளை குறிப்பிடாமல் புறஜாதிகளை வாசகர்களாகக் கருத்தில்கொண்டு எழுதுகிறார். மாற்கு கிறிஸ்துவை பாடு கஷ்டங்களை அன்பவிக்கிற ஒரு ஊழியனாக வலியுறுத்துகிறார், அதாவது ஊழியம் கொள்ளும்படிக்கு வராமல் பிறருக்கு ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும்படிக்கு தம்மையே பலியாக கொடுக்கும்படிக்கும் வந்தார் (மாற்கு 10:45).

அப்போஸ்தலனாகிய பவுலின் உடன் ஊழியனும், சுவிசேஷகருமான பிரியமுள்ள வைத்தியனாகிய லூக்கா (கொலோசெயர் 4:14), லூக்கா சுவிசேஷத்தையும் அப்போஸ்தலருடைய நடபடிகளையும் எழுதினார். புதிய ஏற்பாட்டின் ஒரேஒரு புறஜாதிய எழுத்தாளர் லூக்கா மட்டுமேயாகும். மரபுவழி மற்றும் வரலாற்றுப் படிப்புகளில் இவரது எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்களைப் பொறுத்தவரை இவர் நீண்டகாலமாக ஒரு விடாமுயற்சியுடைய வரலாற்று ஆசிரியராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஒரு சரித்திராசிரியராக, கிறிஸ்துவின் வாழ்க்கைப் பற்றிய ஒரு ஒழுங்கான பதிவை சாட்சியம் அளிப்பவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாக அவரே குறிப்பிடுகிறார் (லூக்கா 1:1-4). தியோப்பிலுவின் நன்மைக்காக அவர் குறிப்பாக எழுதியிருந்ததாலும், அவருடைய நற்செய்தி புறஜாதியார் யாவருக்காகவும் எழுதப்பட்டதாகும். ஒரு கிறிஸ்தவரின் நம்பிக்கை வரலாற்று நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்ட அவர் விரும்புகிறார். லூக்கா அடிக்கடி கிறிஸ்துவை "மனுஷகுமாரன்" என்று குறிப்பிடுகிறார், அவருடைய மனித பிறப்பை வலியுறுத்துகிறார், மற்ற சுவிசேஷ கணக்குகளில் காணப்படாத பல விவரங்களை லூக்கா பகிர்ந்துகொள்கிறார்.

அப்போஸ்தலனாகிய யோவானால் யோவானின் சுவிசேஷம் எழுதப்பட்டது. இது மற்ற மூன்று சுவிசேஷங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, கிறிஸ்துவின் ஆள்தன்மை மற்றும் விசுவாசத்தின் அர்த்தம் குறித்து மிகவும் இறையியல் உள்ளடக்கம் உள்ளதாக இருக்கிறது. மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகியவைகள் "ஒத்தநிலை சுவிசேஷங்கள்" என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவர்கள் ஒத்த பாணியையும் உள்ளடக்கத்தையும் எடுத்துக்கொண்டாலும், அவர்கள் கிறிஸ்துவின் வாழ்க்கைச் சுருக்கத்தை கொடுக்கிறார்கள். யோவானின் சுவிசேஷம் இயேசுவின் பிறப்பு அல்லது பூமிக்குரிய ஊழியத்தோடு அல்ல, மாறாக அவர் மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பாகவே தேவனுடைய குமாரனின் செயல்களிலும் பண்புகளிலும் ஆரம்பிக்கிறது (யோவான் 1:14). யோவான் 1:1-ல், “அந்த வார்த்தை தேவனாக இருந்தது”, "உலகத்தின் இரட்சகர்" (யோவான் 4:42), "தேவனுடைய குமாரன்" (மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது), மற்றும் "கர்த்தர் மற்றும் ... தேவன்" (யோவான் 20:28). யோவானின் சுவிசேஷத்தில், இயேசு தம் தெய்வீகத்தை பல "நானே" அறிக்கையுடன் உறுதிப்படுத்துகிறார்; அவைககளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை யோவான் 8:58 ல், "ஆபிரகாம் உண்டாகிறதற்குமுன்னே நான் இருக்கிறேன்" என்று கூறுகிற காரியமாகும் (யாத்திராகமம் 3:13-14 உடன் ஒப்பிடுக). யோவானும் இயேசுவின் மனித பிறப்பின் உண்மையை வலியுறுத்துகிறார், கிறிஸ்துவின் மனித பிறப்பில் நம்பிக்கை கொள்ளாத அவரது நாளின் உண்டாயிருந்த மதப் பிரிவு, ஞானமார்க்கத்தாரின் பிழையைக் காட்ட விரும்புவார். யோவானின் சுவிசேஷம் தனது ஒட்டுமொத்த நோக்கத்தை இவ்வாறு எழுதுகிறது: "இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது" (யோவா 20: 30-31).

எனவே, கிறிஸ்துவின் நான்கு வித்தியாசமான மற்றும் சமமான துல்லியமான கணக்குகளில், அவரது ஆள்தன்மை மற்றும் ஊழியம் பல்வேறு அம்சங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கணக்கும் விவரிப்பதற்கு அப்பாற்பட்ட ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்குவதற்கு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ள திரைக்கதைகளில் ஒரு பலவர்ண நூல் போல் மாறுகிறது. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய எல்லாவற்றையும் ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ளாதபோது (யோவான் 20:30), நான்கு சுவிசேஷங்களின் மூலமாக நாம் எதைப் பற்றி அறிந்திருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் நம்மீது விசுவாசம் கொண்டிருப்பதால், அவர் நமக்கு எதை செய்திருக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும். .

2) அவர்களின் கணக்குகளின் உண்மைத்தன்மையைத் துல்லியமாக சரிபார்க்க நமக்கு உதவுகிறது. ஒரு சாட்சியின் சாட்சியத்தின் அடிப்படையிலான ஒரு நபருக்கு எதிராக நியாயப்பிரமாணம் செய்யப்பட வேண்டியதல்ல, ஆனால் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை சாட்சிகள் தேவைப்படுவது (உபாகமம் 19:15) என்று வேதாகமம் கூறுகிறது. அப்படியிருந்தும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மற்றும் பூமிக்குரிய ஊழியத்தை பற்றிய பல்வேறு விவரங்களைக் கொண்டிருப்பது, நமக்குக் கிடைத்திருக்கும் தகவலின் துல்லியத்தை மதிப்பிடுவதற்கு நமக்கு உதவுகிறது.

சைமன் க்ரீன்லீஃப் என்னும் ஒரு நீதிமன்றத்தில் நம்பகமான ஆதாரங்களைக் கொண்ட ஒரு நன்கு அறியப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரமுடையவர், நான்கு சுவிசேஷங்களை சட்டப்பூர்வ கண்ணோட்டத்தில் பரிசோதித்தார். நான்கு சுவிசேஷங்களில் கொடுக்கப்பட்ட சாட்சி கணக்குகளின் வகை - ஒப்புக்கொள்கிற கணக்குகள், ஆனால் ஒவ்வொரு எழுத்தாளர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட விவரங்களை ஒதுக்கிவைப்பது அல்லது தேர்ந்தெடுப்பது - நம்பகமான, சுயாதீனமான ஆதாரங்களின் தனிச்சிறப்பானது, அது ஒரு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் வலுவான சான்றுகள் ஆகும் என்கிறார். அதே கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அதே விவரங்களுடன் சுவிசேஷங்கள் அதே தகவலைக் கொண்டிருந்திருந்தால், அது ஒருமித்து எழுதப்பட்டதைக் குறிக்கும், அதாவது எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை உருவாக்குவதற்கு முன்னர் "நேரடியாக தங்கள் கதையைப் பெறுவதற்கு" முன்பு இருந்தபோதுள்ள நம்பகமானதாகத் தோன்றுகிறது. சுவிசேஷங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், முதல் பரீட்சை பற்றிய விவரங்களின் வெளிப்படையான முரண்பாடுகள் கூட, எழுத்துக்களின் சுயாதீன இயல்பைப் பேசுகின்றன. ஆகையால், நான்கு சுவிசேஷக் கணக்குகளின் சுயாதீனமான தன்மை, அவர்களின் தகவல்களின்படி ஒப்புக்கொள்கிறது, ஆனால் முன்னோக்கு விவரம், மற்றும் பதிவு செய்யப்பட சம்பவங்கள், சுவிசேஷங்களில் அளிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் பதிவு, நம்பகமானது என்பதை தெரிவிக்கின்றன.

3) உற்சாகமாக தேடுபவர்களுக்கு பலன் அளிக்கிறது. சுவிசேஷங்களில் ஒவ்வொன்றையும் தனித்தனி ஆய்வு மூலம் பெறலாம். ஆனால் இயேசுவின் ஊழியத்தில் குறிப்பிட்ட நிகழ்வுகளின் வெவ்வேறு கணக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், இன்னும் அதிகமாக தெளிவுபெற முடியும். உதாரணமாக, மத்தேயு 14-ல், 5000 பேரை போஷித்தல் மற்றும் இயேசு தண்ணீரில் நடக்கிறதையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். மத்தேயு 14: 22-ல் "இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்" என்று சொல்லப்படுகிறது. ஏன் இயேசு இதைச் செய்தார்? என்று ஒருவர் கேட்கலாம். மத்தேயுவின் பதிவில் வெளிப்படையான எந்த காரணமும் இல்லை. ஆனால் மாற்கு 6-ல் கொடுக்கப்பட்டுள்ள கணக்குடன் இணைத்து பார்க்கும்போது, அவர் இரண்டு பேராக சீஷர்களை அனுப்பியபோது அவர்களுக்குக் கொடுத்த அதிகாரத்தின் மூலமாக மக்களைச் சுகப்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிட்டு, வந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம். ஆனால் அவர்கள் "பெரிய தலைகளுடன்" திரும்பி வந்தார்கள், தங்கள் இடத்தை மறந்து, இப்போது இயேசுவையேப் போதிக்க தயாராக இருக்கிறார்கள் (மத்தேயு 14:15). எனவே, கலிலேயாக் கடலின் மறுபக்கத்திற்குச் செல்ல மாலை நேரத்தில் அவர்களை அனுப்பியபோது, இயேசு அவர்களுக்கு இரண்டு காரியங்களை வெளிப்படுத்துகிறார். அதிகாலையில் அவர்கள் (மாற்கு 6:48-50) காற்றையும் அலைகளையும் எதிர்த்துப் போராடுகையில், அவர்கள் அதைப் பார்க்கத் தொடங்குகின்றனர் 1) அவர்கள் தங்கள் சொந்த திறமையில் தேவனுக்கு எதுவும் செய்ய முடியாது, 2) அவர்கள் அவரைக் கூப்பிட்டு அவருடைய வல்லமையை நம்பியிருக்கிறார்கள் என்றால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. வேதாகமத்தோடு வேதாகமத்தை ஒப்பிட்டு நேரத்தை எடுக்கும் விடாமுயற்சியுள்ள மாணவர்கள் காணும் இதுபோன்ற ஒத்த "முத்துக்கள்" அடங்கிய பல பத்திகள் உள்ளன.

English



முகப்பு பக்கம்

தேவன் நமக்கு ஏன் நான்கு சுவிசேஷங்களைக் கொடுத்தார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries