கேள்வி
இரட்சிப்பின் வழி என்றால் என்ன?
பதில்
நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா? சரீரபிரகாரமான பசி அல்ல, மாறாக உங்கள் வாழ்கையில் ஏதோ ஒரு காரியத்தைக் குறித்ததான ஆவல் இருக்கிறதா? உங்களது ஆழ்மனதில் உங்களை இதுவரையில் திருப்திபடுத்தாத காரியங்கள் ஏதாகிலும் உண்டா? அப்படியானால் இயேசுவே அதற்கு வழி! "ஜீவ அப்பம் நானே என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" என்று யோவான் 6:35ல் இயேசு கூறியிருக்கிறார்.
நீங்கள் குழப்பம் அடைந்திருக்கிறீர்களா? உங்களது வாழ்க்கையின் பாதை அல்லது நோக்கம் தெரியாமல் இருக்கிறீர்களா? யாரோ ஒருவர் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டது போலவும் அதினிமித்தம் நீங்கள் அந்த பொத்தானை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தோன்றுகிறதா? அப்படியானால் இயேசுவே அதற்கு வழி! "நான் உலகிற்கு ஒளியாயிருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிளே நடவாமல் ஜீவ ஒளியைப் அடைந்திருப்பான்” என்று இயேசு கூறியிருக்கிறார் (யோவான் 8:12).
உங்கள் வாழ்க்கையில் வெளியேவரமுடியாதபடி நீங்கள் அடைபட்டுப்போனதுபோல உணர்கிறீர்களா? அநேக வழிகளை நீங்கள் முயற்சித்தும் அவைகள் யாவும் வெறுமையாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கின்றனவா? உங்கள் வாழ்வை ஏதாவது ஒரு வழியில் நிறப்பவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? அப்படியானால் இயேசுவே அதற்கு வழி! நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்" என்று இயேசு அறிவித்தார் (யோவான் 10:9).
மற்றவர்கள் எப்பொழுதும் உங்களை வெறுக்கிறார்களா? உங்களுடைய உறவுகள் ஆழமில்லாமல் வெறுமையாக இருக்கிறதா? கண்டவர்கள் யாவரும் உங்கள்மேல் ஆதிக்கம் செலுத்துகிறதாக தோன்றுகிறதா? அப்படியானால் இயேசுவே அதற்கு வழி! “நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார் (யோவான் 10:11, 14, 15).
மரணத்திற்கு பிறகு என்ன சம்பவிக்கும் என ஆச்சரியப்படுகிறீர்களா? வீணான அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்கிறதாக எண்ணி உங்கள் வாழ்வைக் குறித்து விரக்தியடைந்து சோர்ந்து போய்விட்டீர்களா? உங்களுடைய வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் உண்டாயிருக்குமா என்று சந்தேகப்படுகின்றீர்களா? நீங்கள் மரித்த பின்பும் வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால் இயேசுவே அதற்கு வழி! இயேசு சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவான் 11:25-26).
வழி என்ன? சத்தியம் என்ன? ஜீவன் என்ன? அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).
உங்களுக்கு இருக்கிற பசியானது ஆவிக்குரிய பசியாகும். இந்த பசியானது இயேசு ஒருவரால் மட்டுமே போக்கி திருப்தி படுத்தமுடியும். இருளை போக்க வல்ல ஒரே ஒரு நபர் இயேசு மட்டும்தான். திருப்திகரமான வாழ்விற்குள்ள வழி இயேசு ஒருவரே. நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற நண்பனும் மேய்ப்பனும் இயேசுவே. அவரே இம்மைக்கும் மறுமைக்கும் ஜீவனாக இருக்கிறார். இயேசுவே இரட்சிப்பின் வழியாக இருக்கிறார்.
நீங்கள் ஆவிக்குரிய பசியில் இருப்பதற்கும், காரிருளில் அமிழ்ந்து காணாமல் போய்விட்டதாக தோன்றுவதற்கும் மற்றும் உங்களுடைய வாழ்க்கைக்குரிய அர்த்தத்தை கண்டுபிடிக்காமல் போனதற்கும் காரணம் நீங்கள் தேவனை விட்டு பிரிக்கப்பட்டு இருப்பதே ஆகும். நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதின் விளைவாக நாம் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டோம் என்றும் வேதாகமம் கூறுகிறது (பிரசங்கி 7:20; ரோமர் 3:23). நீங்கள் உங்கள் இருதயம் வெறுமையாக இருப்பதாக உணர்வதற்கான முக்கிய காரணம் உங்கள் வாழ்வில் தேவன் இல்லாததே ஆகும். தேவனோடு ஐக்கியமும் உறவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தின் நிமித்தமாகத்தான் நாம் அந்த உறவில் இருந்து பிரிந்துபோனவர்களாய் இருக்கிறோம். இதோடு அல்லாமல் இம்மையோடு சேர்ந்து மறுமையிலும் நாம் தேவனோடு சேராதபடிக்கு இந்த பாவம் நம்மை நிரந்தரமாக தேவனிடத்திலிருந்து நம்மை பிரிக்கிறதாக இருக்கிறது (ரோமர் 6:23; யோவான் 3:36).
இந்த பிரச்சனையை எப்படி தீர்வை கொண்டுவருவது? இயேசுவே இதற்கு வழியாக இருக்கிறார்! நம்முடைய பாவங்களை இயேசு அவர்மேல் எடுத்துக்கொண்டார் (2 கொரிரிந்தியர் 5:21). நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் எடுத்துக்கொண்டு நம்முடைய ஸ்தானத்தில் இயேசு மரித்தார் (ரோமர் 5:8). பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தவராய் மூன்று நாளைக்குப்பிறகு இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் (ரோமர் 6:4-5). ஏன் இதை அவர் செய்தார்? இதற்குப்பதில் இயேசுவே கூறியிருக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13). நாம் வாழும்படியாக இயேசு மரித்தார். நமது பாவங்களின் விலைக்கிரயத்தை கொடுத்து தீர்க்கும்படி சிலுவையில் மரித்த இயேசுவின்மேல் நமது விசுவாசத்தை வைப்போமானால், நமது எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு நாம் சுத்திகரிக்கப்படுவோம். நாம் நமது ஆவிக்குரிய பசி தீர்ந்து திருப்தராக இருப்போம். ஒளிதருகின்ற விளக்குகள் ஒளிரும். நமது வாழ்வை நிரப்பத்தக்கதான பிரவேசனம் கொடுக்கப்பட்டு இருக்கும். நாம் நமது மெய்யான சிநேகிதரும் மேய்ப்பருமானவரை அறிந்திருப்போம். மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்வு உண்டு என்பதை அறிந்திருப்போம் – அதாவது உயிர்த்தெழுந்து இயேசுவோடு நித்தியத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்!
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).
நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.
English
இரட்சிப்பின் வழி என்றால் என்ன?