settings icon
share icon

வேதாகமம் கண்ணோட்டம்

வேதாகமத்தின் ஒரு நல்ல சுருக்கம் / கண்ணோட்டத்தை அடைவதென்பது ஒரு கடினமானதொன்றாகும். வேதகாமத்தில் 2 ஏற்பாடுகள், 66 வெவ்வேறு புத்தகங்கள், 1189 அதிகாரங்கள், 31173 வசனங்கள் மற்றும் 773692 வார்த்தைகள் அடங்கியுள்ளன. வேதாகமத்திலுள்ள வெவ்வேறு புத்தகங்கள் வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது மற்றும் வெவ்வேறு வாசகர்களுக்கு எழுதப்பட்டன. சுமார் 1500 வருட காலப்பகுதியில் சுமார் 40 வெவ்வேறு மனிதர்களால் வேதாகமத்தினுடைய புத்தகங்கள் எழுதப்பட்டன. எனவே முழு வேதாகமத்தின் சுருக்கம் / கண்ணோட்டத்தை மேற்கொள்வது என்பது ஒரு முக்கிய பணியாகும்.

அதே நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் வேதாகமத்தின் "உந்துதலளிக்கும்" எழுத்தாளராக இருந்தார். தேவன் தம்முடைய வார்த்தையை "சுவாசித்தார்", தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் பயன்படுத்தி அவருடைய வார்த்தையை எழுதினார் (2 தீமோத்தேயு 3:16-17; 2 பேதுரு 1:21). மேலும், இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வந்து தங்கியிருக்கிறார்/வாசமாயிருக்கிறார் (ரோமர் 8:9; 1 கொரிந்தியர் 12:13). நாம் வேதாகமத்தைப் புரிந்துகொள்வதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவ விரும்புகிறார் (1 கொரிந்தியர் 2:10-16).

எங்களது வேதாகம சுருக்கம் / கண்ணோட்டத்தினுடைய பிரிவின் நோக்கம் வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்தின் அடிப்படைப் பின்னணியைக் கொடுப்பதாகும். வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகத்திற்கும், ஆசிரியர், எழுதப்பட்ட காலம், எழுதப்பட்டதன் நோக்கம், முக்கிய வசனங்கள் மற்றும் சுருக்கமான சுருக்கம் ஆகியவைகள் வழங்கப்படும். எங்களது வேதாகம சுருக்கம் / கண்ணோட்டம் பிரிவு வேதாகமத்தை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் என்றும், மேலும் ஆழமான முறையில் வேதாகமத்தைப் படிக்க உங்களை ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் மெய்யாகவே நம்புகிறோம்.

English

பழைய ஏற்பாடு கண்ணோட்டம்

புதிய ஏற்பாடு கண்ணோட்டம்



முகப்பு பக்கம்

வேதாகமம் கண்ணோட்டம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries